Sunday, January 26, 2025
Homefree antivirusஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான இலவச Antivirus Software

ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான இலவச Antivirus Software

Anti virus app for android smartphones

கம்ப்யூட்டர் போலவே ஸ்மார்ட்போன்களும் Data Storage, Applications என புதியதொரு கட்டமைப்பைப் பெற்று இயங்குவதால் இவற்றில் வைரஸ் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

குறிப்பாக இணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிற்கு நிச்சயமாக பாதுகாப்பு அவசியம்.

இலவசமாக கிடைக்கிறதென இணையத்தில் கிடைக்கும் அப்ளிகேஷன்களை  டவுன்லோட் செய்து பயன்படுத்தும்பொழுது வைரஸ், ஆட்வேர் போன்ற நிரல்கள் ஸ்மார்ட் போனிற்கு வந்துவிடுகிறது.

இதைத் தடுக்க Smartphone Antivirus மென்பொருட்கள் உள்ளன.

செல்போன்களில் உள்ள Data க்களையும், செயல்திறன்களையும் காக்க, Smart Phone களுக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை பிரபல Anti Virus நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இவற்றுள் சில இலவசமாகவும், சில கட்டணத்துடனும் கிடைக்கின்றன.

iOS வகை செல்போன்களுக்கு இலவசமாகவும், மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவும் வரைஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையானவர்கள் Android Phone களுக்கு பொருத்தமான Anti Virus Software-களைப் பதவிறக்கி பயன்படுத்திக்கொள்ளவும்.

1. Avast Antivirus Protection

Android இயங்குகளில் இயங்கும் smart Phone களைப் பாதுகாக்க அதிக நம்பிக்கை தருவது இம்மென்பொருளாகும். கணினிகளை காப்பது போலவே இந்நிறுவனத்தாரின் இப்பதிப்பு உங்கள் Android Phone களையும் பாதுகாக்கிறது.

Softwares, Games, Malware போன்றவற்றிலிருந்து முற்றிலும் பாதுகாப்பளிக்கிறது. ஆன்ட்டி தெப்ட் (Anti Theft)எனும் தொழிற்படுதல் மூலமாக உங்களை Android தொலைபேசிகளை சிஸ்டர் ட்ரேயிலிருந்து 24 மணி நேரமும் கண்காணித்து பாதுகாப்பை வழங்குகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க மென்பொருள் முற்றிலும் இலவசமே..!

Avast Antivirus Protection டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.

இத்தளத்தில் Install என்ற பட்டனைச் சொடுக்கி Avast Mobile security application நிறுவிக்கொள்ளுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.avast.android.mobilesecurity&hl=en

2. kaspersky Mobile Security

பல்வேறு கணினி பயன்பாட்டாளர்கள் இம்மென்பொருளை தங்களுடைய கணினிகளில் நிறுவி இருப்பர். இதிலிருந்தே இம் மென்பொருளின் அருமையை நாம் உணரலாம். தரவு(Data protection) பாதுகாப்பு தருவதில் இது முதன்மையான மென்பொருள். Android Mobile களுக்கும் இம் மென்பொருள் அதி உயர் பாதுகாப்பை வழங்குகிறது.

இதில் இருவகை மென்பொருள்கள் உள்ளன. பயன்படுத்துபவர்களின் வசதிக்காக lite version மற்றும் paid version என இருவகையான மென்பொருள்களை வெளியிட்டுள்ளனர். கால் மேனேஜர் பாதுகாப்பு, வைரசிலிருந்து பாதுகாப்பு, மற்றும் உங்கள் செல்போன்களுக்கு வரும் SMS (Instant Messages)ஆகியவற்றில் Filter வசதியையும் தருகிறது. இலவச மென்பொருளே இத்தகைய வசதிகளைக் கொண்டிருக்கும்போது Paid version சொல்ல வேண்டுமா என்ன? Paid version -ல் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய நீங்கள் செல்ல வேண்டிய முகவரி:

https://play.google.com/store/apps/details?id=com.kms.free

இதிலுள்ள Install என்ற பட்டனைச் சொடுக்கி Kaspersky Mobile Security Lite இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

3. Norton Mobile security software

 
கணினி பயன்படுத்துபவர்கள் இம்மென்பொருளைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். வெகு காலமாகவே இம்மென்பொருள் கணினி பாவனையாளர்களால் பயன்படுத்தபட்டு வருகிறது. முன்னணி நிறுவனமான Norton கணினிகளுக்கு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை தருவதைப் போன்றே உங்கள் Android மென்பொருள்களுக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைத் தருகிறது. உங்கள் android மொபைல்களுக்கு இதன் மூலம் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது.

மென்பொருளைத் தரவிறக்க செல்ல வேண்டிய சுட்டி:
https://play.google.com/store/apps/details?id=com.symantec.mobilesecurity

மேற்சொன்ன இரண்டு Antivirus Mobile security -யைப் போன்ற இப்பக்கத்திலும் உள்ள Install என்ற பட்டனைச் சொடுக்கி உங்கள் Android Mobile களுக்கான நச்சு நிரல் எதிர்ப்பியை நிறுவிக்கொள்ளுங்கள்.

4. NQ Mobile Security antivirus

கணினிகளுக்கு இந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் பதியது. ஆனால் Android Phone பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பிரபலமான மென்பொருளாகும். Android Phone வருவதற்கு முன்பே symbian வகை தொலைபேசிகளுக்கான பாதுகாப்பை வழங்கியதன் மூலம் இது தனது பெயரை நிலைநாட்டிக்கொண்டது. தற்போது Android Phone வகை போன்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகிறது.

இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி:
 https://play.google.com/store/apps/details?id=com.nqmobile.antivirus20

5. Dr Web Anti-Virus

இது பெயருக்கு ஏற்றாற்போலவே Android வகை Smart Phone களுக்கு அதிகப்பட்ச பாதுகாப்பை வழங்குகிறது. புதியதாக களத்தில் இறங்கியிருக்கும் இம்மென்பொருள் Smart Phone பயன்படுத்துபவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டிய அதிக வசதிகளையும், பாதுகாப்பினை கொடுக்க வேண்டி தனது Anti virus Application -ஐ அமைத்துள்ளது. தற்போது பிரபலமாக உள்ள மென்பொருள்களுக்கு ஈடாக தனது செயல்பாட்டினையும் கொண்டுள்ளது.

இம்மென்பொருளை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவ இங்கு செல்லவும்.

https://play.google.com/store/apps/details?id=com.drweb

6. Lookout Security and anti-virus

இந்த மென்பொருளின் சிறப்பே.. இது ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது என்பதுதான். Android வகை மென்பொருள்களை பாதுகாப்பதோடு, வைரசிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் கூடுதல் வசதியாக உங்கள் Smart Phone -ஐ பேக்கப் எடுக்கும் வசதியையும், உங்கள் செல்போன் தொலைந்துபோனால் மீட்கப் பயன்படும் Phone finer வசதியும் இதில் உள்ளது.

இந்த மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி:
https://play.google.com/store/apps/details?id=com.lookout

குறிப்பு: இத்தகைய Android Mobile Security மென்பொருள்கள் Google Play தளத்தில் கொட்டிக்கிடக்கிறது. தேவைப்படுவோர் இத்தளத்திற்கு சென்று, உங்களுக்கு விருப்பமான மென்பொருள்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

குறிப்பு: தகவல் மற்றும் படங்கள் அனைத்தும் Google Play தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

Tags and search terms : best android antivirus app

avast antivirus for android free download

360 antivirus download for android

antivirus for android mobile free download full version

antivirus for android apk

samsung mobile antivirus

quick heal antivirus for android mobile free download

nokia mobile antivirus

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments