Sunday, January 12, 2025
Homeandroid appதமிழர்களுக்குப் பயன்படும் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் !

தமிழர்களுக்குப் பயன்படும் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் !

வணக்கம் நண்பர்களே..!

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொருவர் கையிலும் ஸ்மார்ட்போன்/ஆன்ட்ராய்ட் போன் உள்ளது. ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பயனுள்ள அப்ளிகேஷன்களை வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தமிழர்கள் பயன்படுத்துவதற்காக சில அப்ளிகேஷன்கள் கூகிள் ப்ளே மூலம் பெறலாம். அது என்னென்ன அப்ளிகேஷன்? எதற்குப் பயன்படுகிறது? என்பது குறித்து இங்கு விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

1. கூகிள் டிரான்ஸ்லேட் / Google Translate:

Google Translate மொழிப்பெயர்ப்பு ஏற்ற ஒரு கருவியாக செயல்படுகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். எந்த ஒரு மொழியிலிருந்தும் மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய இது பயன்படுகிறது. 17 மொழிகளில் குரல் பதிவின் வழியாகவும் மொழி பெயர்க்கலாம். இந்த Google Translate மூலம் உலக மொழிகளில் 64 மொழிகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்துகொள்ளலாம்.

2. ஆங்கிலம்- தமிழ் அகராதி – English To Tamil Dictionary:

சாதாரணமாக நாம் ஆங்கிலத்தில் படிக்கும்போது அவற்றுக்கான பொருள்  ஓரளவிற்கு புரிந்துகொள்வோம். ஆனால் குறிப்பிட்ட வார்த்தைக்கு தமிழில் சரியான பொருள் என கேட்டால் தவறாக அல்லது புரிந்துகொண்டதை சொல்ல முடியாமல் . மேலும் புதிய வார்த்தைகளுக்கு உடனடியாக தமிழ் அர்த்தம் என்ன  புரிந்தாலும், அவற்றிற்குரிய சரியான தமிழ் அர்த்தம், தமிழ் வார்த்தை தெரியாது. அதுபோன்ற நிலைகளில் ஆங்கிலவார்த்தைகளுக்கு சரியான தமிழ் பதத்தை கண்டறிய உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயன்படும். இங்கிலீஸ் டு தமிழ் டிக்சனரி என்ற இந்த அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. யூட்யூப் தமிழ் படங்கள்- YouTube Tamil Movies 

Youtube Tamil Movies என்ற இந்த அப்ளிகேஷன் சினிமா பிரியர்களுக்கும், யூ டியூபிள் வீடியோக்களை பார்ப்பவர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய அப்ளிகேஷன் ஆகும். இதன் மூலம் டியூபில் உள்ள Movie Trailer, short film, education videos, technology videos, போன்ற வீடியோக்களை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களிலேயே பார்த்து மகிழலாம்.

இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்ய:

4. யோசி – Yosi Application

பழமொழிகள், முதுமொழிகள், விடுகதைகள் ஆகியவற்றின் தொகுப்புகளை இந்த அப்ளிகேஷனில் பெற முடியும்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்.

5. AR Rahman Tube Tamil application:

இந்த அப்ளிகேஷன் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் உலகப் புகழ்ப்பெற்ற இசைகளை கேட்டு மகிழலாம். இது முற்றிலும் இலவசம்.

இந்த அப்ளிகேஷன்னை இலவசமாக டவுன்லோட் செய்ய:

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments