Monday, December 23, 2024
Homedownloadable free softwareMal - Ware பிரச்னைகளை சமாளிக்கும் வழிமுறைகள்:

Mal – Ware பிரச்னைகளை சமாளிக்கும் வழிமுறைகள்:

மால்வேர் பிரச்னைகளை சமாளிக்கும் வழிமுறைகள்:
(Solving methods of Mal-ware problems)

வைரஸ்சை கூட ஒரு விதத்தில் நல்லவன்னு சொல்லலாங்க.. இந்த மால்வேர் இருக்கே..!

கூட இருந்தே குழி பறிக்கும் நண்பன் மாதிரி..

உங்கள் கணினியில் இருந்துக்கொண்டே, நீங்கள் என்னென்ன தகவல்கள் உள்ளிடுகிறீர்கள்.. என்னென்ன பாஸ்வேர்ட் வச்சிருக்கீங்க.. எந்தெந்த தளத்தில போய் வேலை செய்திருக்கிறீர்கள்ன்னு… எல்லாத் தகவல்களையும் நமக்கே தெரியாம திரட்டிக்கொண்டு, சாதுவாக தன்னை அனுப்பின எனஜமானனுக்கு இந்த தகவல்களையெல்லாம் அனுப்பி வச்சிட்டே இருக்கும். டெரெய்ட் பார்வர்ட் டைப் இது..

வேற எதையும் யோசிக்காது. அனுப்பினவங்க என்னென்ன கட்டளைகள் கொடுத்திருக்காங்களோ அதை அப்படியே அச்சரம் பிசகாம செய்து முடித்துவிட்டு, உலகத்தில் ஒன்றுமே நடக்காத மாதிரி சாதுவாகிடும்..

இதுதான் மால்வேருடைய (Malware) பண்பு.

ஏதாவது புதுசா ஒரு ஆன்ட்டி வைரஸ் புரோகிராமை இன்ஸ்டால் பண்ணனும் நாம் நினைச்சாக்கூட சைலண்டா அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுகிட்டே இருக்கும். ஏற்கனவே இருக்கிற anti virus புரோகிராமைக் கூட இது அப்டேட் பண்ண விடாதுன்னா பார்த்துங்களேன்..!!

இந்த நிலைமையில இருக்கிற உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாக்க என்னதான் வழி?

பார்மேட் அடிச்சுட வேண்டியதுதான். C Driveவில மறந்தும் கூட முக்கியமான கோப்புகளை வச்சிடாதீங்கள். இதனால் உங்களோட Data தான் லாஸ் ஆகும்.

கம்ப்யூட்டரை format அடிச்சா அதிலிருக்கிற கோப்புகள் எல்லாமே அழிந்திடும். அதனால மறந்தும் கூட C Drive வில கோப்புகளை வைச்சிராதீங்க…

இந்த மாதிரியான மால்வேர் (Malware) என்ன செய்யும் தெரியுங்களா? நீங்க புதுசா ஏதாவது ஆன்ட்டி வைரஸ் இன்ஸ்டால் பண்ணினாக் கூட தடுத்து நிறுத்தி எர்ரர் காட்டும். அதனால் இந்த மால்வேர் புரோகிராமை உங்களோட computer லிருந்து நீக்க என்ன செய்யணும்னா…

புதுசா அப்டேட் பண்ணின ஆன்ட் வைரஸ் புரோகிராமை ஒரு சி.டியில பதிஞ்சு.. அதை உங்களோட கம்ப்யூட்டரை பூட்டப் பண்ணும்போது இயங்குகிற மாதிரி செய்யணும். அப்போதுதான் அந்த மால்வேரை உங்களோட கம்ப்யூட்டரிலிருந்து நீக்க முடியும்.

இந்த மாதிரியா Bootable malware Scanners கள் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கும். இந்த மாதிரியான Malware Program களை கண்டுபிடிச்சு அழிக்கிற மென்பொருளை தரவிறக்கி உங்களோட கம்ப்யூட்டர்ல பயன்படுத்திப் பாருங்கள்..

அதுங்க மால்வேரை இருக்கிற இடம் தெரியாம அழிச்சுடும். உங்களோட ரகசிய தகவலும் பாதுகாக்கப்படும்.

மால்வேர் எதிர்ப்பு புரோகிராம்கள் எங்க கிடைக்கும்?

கீழப் பாருங்க இரண்டு இணைப்பு இருக்கும்:

1. http://support.kaspersky.com/viruses/rescuedisk/
2. http://www.fsecure.com/en/web/labs_global/removaltools//carousel/view/142

இந்த இரண்டு புரோகிராமில் ஏதாவது ஒன்னை டவுன்லோட் பண்ணிகிட்டாலே போதும்..

இது பிளாஸ் டிரைவ் (USB) அல்லது CD ல போட்டு வச்சிக்கிடலாம். ISO கோப்புகளாக இது கிடைக்கிறதால, இதை கிளிக் செய்தவுடனேயே CD யில பதிவதற்கான வழிமுறைகள் கிடைக்கும். இதன் மூலம் சி.டியில பதிந்துச்சுக்கலாம்.

இல்லேன்னா ஆக்டிவ்@ஐஎஸ்ஓ பர்னர் (Active@ISO Burner) என்ற பயன்பாடு மூலமும் சி.டியில பதிஞ்சுக்கிடலாம்.

முதலில் இந்த இணைப்பிலிருந்து உங்களோட கணினிக்கு இந்த சாப்ட்வேரை தரவிறக்கம் செய்துடுங்க…

அப்புறம் இந்த சாப்ட்வேரை CD யில பதிவேற்றம் செய்துக்கிடலாம்.

USB டிரைவில் வைத்து இந்த புரோகிராமைப் பயன்படுத்த வேண்டும்னு நீங்க நினைச்சால் நேரடியாக USB யில் வைத்து பயன்படுத்த முடியாது. இதற்காவே சில Utility உபயோகிப்பான் இருக்கு. அதைப் பயன்படுத்தித்தான் இந்த சாப்ட்வேரை நாம பயன்படுத்த முடியும்.

Caspersky Antivirus Program ISO கோப்பை  நீங்க உங்களோட USB-ல் பயன்படுத்தனும்னு நினைச்சா…

Utility to record Kaspersky Rescue Disk 10 to USB devices இந்த புரோகிராம் உங்களுக்குத் தேவைப்படும். இந்த புரோகிராமை நீங்கள் இந்த இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

Fsecure antivirus porgram ISO கோப்பை USB drive-ல் பயன்படுத்த நினைச்சா  Universal USB Installer ங்கிற புரோகிராம் தேவைப்படும்.

Universal USB Installer புரோகிராமை தரவிறக்க இந்த இணைப்புக்கு போங்க…

தேவையான கோப்புகளை தரவிறக்கம் செய்து USB லயும் Malware எதிர்ப்பு புரோகிராம், ஆன்ட்டி வைரஸ் புரோகிராமை நீங்க உங்களோட கம்ப்யூட்டர்ல பயன்படுத்தலாம்.

RELATED ARTICLES

6 COMMENTS

  1. புதிய திரட்டி தமிழன் ( http://www.tamiln.org ) தளத்தில் இணைந்து, பதிவுகளை இணைத்து வாக்களித்து உலகறியச் செய்யுங்கள்.
    நன்றி…

  2. நல்ல பயன்னுள்ள பதிவு…..

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  3. அனைவர்க்கும் பயன்படக்கூடிய தகவல். பகிர்தங்கமைக்கு நன்றி

Comments are closed.

Most Popular

Recent Comments