Saturday, January 25, 2025
HomeAirtelAirtel -ல் தேவையில்லாத service களை நீக்கி உங்கள் பணத்தை மிச்சப்படுத்த

Airtel -ல் தேவையில்லாத service களை நீக்கி உங்கள் பணத்தை மிச்சப்படுத்த

இந்தியாவின் முன்னணி தொலைபேசி நிறுவனம் Airtel. நல்ல சர்வீஸ் வழங்கக்கூடிய நிறுவனம். இந்தியா எங்கும் டவர் பிரச்னை இல்லாமல் நல்ல network service வழங்ககூடிய நிறுவனம் இது. பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்நிறுவனத்தின் சேவை பாராட்டத்தக்கது. அதே வேளையில் Airtel-ல் நம்மையும் அறியாமலே ஏதாவது ஒரு Service Activate ஆகியிருந்தது என்றால் அவ்வளவுதான்.

எவ்வளவு பெரிய தொகையை நீங்கள் Re-charge செய்து வைத்திருந்தாலும் இதுபோன்ற சேவைகளின் மூலம் உங்கள் Re-charge தொகை காலியாகிவிடும்.
  கடந்த வருடம் வரைக்கும் இப்படித்தான் இருந்தது. Customer care-க்கு போன் செய்து கேட்டாலும் நாளையே அந்த சேவையை தடை செய்துவிடுகிறோம் என்று இனிப்பாக பேசுவார்கள்.

நம்பி மீண்டும் Recharge செய்தால், நடிகர் வடிவேல் சொன்ன கதைதான். “நல்லவன்னு நம்பி போனேன்” என்ற டயலாக்தான் நீங்களும் பேச வேண்டிவரும்.

சரி. உங்கள் பணத்தை வீணாக்கும் தேவையற்ற Airtel Service களிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

இதற்கு Airtel நிறுவனமே வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

1. முதலில் *121# டயல் செய்யுங்கள்.
2. அடுத்து Menu தோன்றும்.
3. அதில்
1. My Airtel My Offer
2. Balance & Validity
3. Coupon Recharge
4. Start a Service
5. Stop a Service
6. Recharge Now
0. Next
Reply with your choice
என்றிருக்கும். அதில் ஐந்தாவதாக உள்ள Stop a service என்பதற்கான எண் 5 -ஐ தேர்ந்தெடுத்து Reply செய்துவிடுங்கள்.
உடனே உங்களுக்கு ஒரு மெனு தோன்றும். அதில் உங்களுக்கு என்னென்ன சர்வீஸ் ஆக்டிவ் ஆகி இருக்கிறது என்பதை காட்டும்.

உதாரணமாக 1. teen pack, 2. sms pack என்பதைப் போன்று தோன்றும்.

தோன்றும் பட்டியலில் உங்களுக்குத் தேவையில்லாத Service-க்கு உரிய எண்ணை 1 அல்லது 2 என்பதை தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள். அவ்வளவுதான்.. இனி உங்களுக்குத் தொல்லை தரும் சர்வீஸ் நீக்கப்பட்டிருக்கும். தேவையில்லாத பணத்தைப் பிடுங்கும் சர்வீஸ்களை இத்தகைய முறையில் நீங்கள் நீக்கிக்கொள்ளலாம். இனி நீங்கள் Recharge செய்த தொகையில் பேசினால் மட்டுமே குறையும்.

மற்றபடி caller tunes போன்ற தேவையில்லாத வசதிகளுக்காக உங்கள் பணம் வீணாகமல் அப்படியே இருக்கும். பயனபடுத்திப் பாருங்கள்.. !!

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.. நன்றி நண்பர்களே..!

RELATED ARTICLES

6 COMMENTS

  1. நல்ல பயன்னுள்ள பதிவு….. உங்கள் பகிர்வுக்கு நன்றி……

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Comments are closed.

Most Popular

Recent Comments