Friday, January 24, 2025
Homefree antivirus softwareவைரஸ் மற்றும் மால்வேர்களை துவம்சம் செய்ய வந்துவிட்டது புதிய மென்பொருள் Microsoft security essential

வைரஸ் மற்றும் மால்வேர்களை துவம்சம் செய்ய வந்துவிட்டது புதிய மென்பொருள் Microsoft security essential

நண்பர்களே..! நம்மில் இணையத்தைப் பயன்படுத்தாதவர்கள் யாரும இருக்க முடியாது. இன்றைய இணைய யுகத்தில் பாமரர் வரை படித்தவர் வரை அனைவரும் இணையத்தைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

Microsoft security essential to clean virus, malware

இதில் கூடுதல் இலவச இணைப்பாக கணினியைத் தாக்கும் வைரஸ் தீங்கும் விளைவிக்கும் புரோகிராம்களும் நமது கணினியில் தாக்குவதை தவிர்க்க முடியாமல் போகிறது.

சில சமயம் வைரஸ்களும், மால்வேர்களும் நமது கணினியை அப்படியே ஸ்தம்பிக்க வைத்துவிட்டு, கணினியின் செயல்பாட்டையே நிறுத்தவிடுகிறது.

இந்த வைரஸ்களும், மால்வேர்களும் எந்த வழிகளில் பயணித்து நம் கணனியை அடைகிறது?

1. இணையப் பயன்பாடு.
2. Pendrive, Memory Card  போன்ற Removal Device மூலம்..

இந்த இரண்டுவழிகளில் நமது கணினி பெரும்பாலும் வைரஸ், மால்வேர்களால் தாக்கப்படுகிறது.

இவற்றிலிருந்து விடுபடுவதற்கும், உங்கள் கணினியை காப்பதற்கும் மைக்ரோசாப்ட் Microsoft security essential என்ற இலவச மென்பொருளை வெளியிட்டிருக்கிறது.

Microsoft security essential சிறப்புகள்:

1. உங்கள் கணினியில் Mal-ware, virus போன்றவைகளைக் கண்டறிந்து அவற்றை இருக்கும் இடம் இல்லாமல் செய்கிறது.
2. Quick Scan, Full Scan, Custom என்ற மூன்று வகையான வசதிகளை கொடுக்கிறது.
3. Real time Protecting வசதியால், நாம் இணையத்தில் உலவும்போது நம்முடைய கணினியை எந்த ஒரு வைரசும் தாக்காதவாறு பாதுகாக்கிறது.

இம்மென்பொருளைப் (Microsoft security essential) பயன்படுத்துவதற்கான வரைமுறைகள்:

இந்த இலவச மென்பொருளைப் பயன்படுத்த உங்கள் கணினி குறிப்பிட்ட வரைமுறைகளைப் பெற்றுள்ள வேண்டும்.
1. முதலில் நீங்கள் உபயோகிக்கும் விண்டோஸ் இயங்கு தளம் Operating System ஒரிஜினலாக இருக்க வேண்டும்.
2. Windows 7,  Windows XP (service pack3), Windows Vista ஆகிய இயங்குதளங்களில் தொழிற்படும்.
3. விண்டோஸ் விஸ்டாவில் சிபியு வின் வேகம் (cpu speed) 1.0GHz அதிகமாக இருக்க வேண்டும். 1GB RAM Memory இருப்பது அவசியம். 
4. உங்கள் கணினியின் VGA Diplay 800 X 600 அளவிற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
5. கணினியில் குறைந்த பட்சம் 20MB அளவிற்காவது Disc Free Space இருக்க வேண்டும்.

இந்த வரைமுறைகளுக்கு உட்பட்டிருந்தால்  Microsoft security essential சிறப்பாக செயல்படும்.

குறிப்பு: உலகத்தில் முன்னணி நிறுவனமான Microsoft-ன் இந்த  இலவச Microsoft security essential பயன்படுத்த, உங்கள் கணினியில் நீங்கள் Original விண்டோஸ் இயங்குதளத்தை வைத்திருக்க வேண்டும். Original Windows Operating System உங்கள் கணினியில் நிறுவியிருந்தால் மட்டுமே இந்த இலவச Microsoft security essential தொழிற்படும் என்பதை நினைவில் வையுங்கள்.

நன்றி நண்பர்களே.

என்றும் அன்புடன், 
உங்கள் சுப்புடு

.

RELATED ARTICLES

7 COMMENTS

  1. நல்ல பயன்னுள்ள தகவல்…..உங்கள் பகிர்வுக்கு நன்றி……

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Comments are closed.

Most Popular

Recent Comments