Monday, December 23, 2024
Homemobile tipsஓபரா மினி பிரௌசரில் தமிழ் இணையதளங்களை பார்வையிட செட்டிங்ஸ் செய்வது எப்படி?

ஓபரா மினி பிரௌசரில் தமிழ் இணையதளங்களை பார்வையிட செட்டிங்ஸ் செய்வது எப்படி?

how to set Tamil website as suitable for reading in mobile

உங்கள் செல்பேசிகளில் நீங்கள் தமிழைப் படிக்க சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா?

தமிழில் உள்ள இணையப்பக்கங்கள் கட்டகட்டமாகவே காட்சியளிக்கிறதா?

அப்படியென்றால் நீங்கள் இன்னும் பழைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

அல்லது உங்கள் மொபைல் பிரௌசரில் Settings சரியாக செய்யவில்லை என்று பொருள்.

இன்று இருக்கும் தொழில்நுட்ப உலகத்தில் செல்போனில் தமிழைக் கொண்டுவருவது என்பது மிக சாதாரண விடயம்.

செல்போனில் தமிழைக் கொண்டு வர  உங்கள் அலைபேசியில் ஒரு சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் செல்போனில் தமிழ் வலைத்தளங்களை  பார்வையிட முடியும்.

தற்போதுள்ள எல்லா தமிழ்வலைப்பக்கங்களுமே Unicode தமிழில் எழுதப்பட்டதுதான்.

எனவே நீங்கள் எந்த மொபைலைப் பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் அதில் தமிழ் வலைப்பக்கங்களை எளிதாக காண முடியும்.

உங்கள் மொபைலில் Opera Mini Browser பயன்படுத்தி மிக எளிதாக தமிழ் வலைப்பக்கங்களை பார்வையிடலாம்.

எழுத்துகளும் சிதையாமல் சிறந்த முறையில் காட்சி அளிக்கும்.

மொபைலில் தமிழ் வலைத்தளங்களை படிக்க Opera Mini Browser – ல் செட்டிங்ஸ் செய்யும் முறை:

முதலில் உங்களுடைய அலைபேசியில் நிறுவ வேண்டும்.

Opera Mini Browser இல்லாதவர்கள் இந்த முகவரியில்  http://www.opera.com சென்று Opera Mini Browser -ஐத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.

ஏற்கனவே ஓபரா மினி பிரௌசர் உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திருப்பின் தேவையில்லை.

வழக்கமாக நீங்கள் உங்கள் மொபைலில் இன்டர்நெட்டைப் பயன்படுத்தும்பொழுது, அதில் தமிழ் வலைத்தளப் பக்கங்கள் கீழே உள்ளதுபோல காட்சியளித்திருக்கும்.

இவ்வாறு காட்சியளிப்பதை தவிர்க்க உங்கள் பிரௌசரின் அட்ரஸ்பாரில் about:config என தட்டச்சிட்டு Enter தட்டவும். (கீழுள்ள படத்தில் உள்ளவாறு)

என்டர் கொடுத்த உடனே புதிதாக கீழுள்ளதுபோல ஒரு மெனு தோன்றும்.

அந்த Power user setting-ல் Use bitmap fonts for complex scripts என்பதில் yes என்பதை தேர்ந்தெடுங்கள்.

இப்போது கீழிருக்கும் Save என்பதை கிளிக் செய்து மாற்றத்தை சேமித்துவிடுங்கள்.


 

இப்போது உங்கள் மொபைலிலும் தமிழ் வலைப்பக்கங்கள் முழுமையாக தமிழில் படிப்பதற்கு ஏற்றவாறு கீழுள்ளவாறு காட்சியளிக்கும்.

இனி நீங்கள் எந்த ஒரு வலைப்பக்கத்தையும், உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள Opera Mini Browser மூலம் பார்வையிடுகையில் உங்களுக்கு மேலுள்ள படத்தில் உள்ளவாறு தமிழ் எழுத்துக்கள் முழுமையாக படிக்க கிடைக்கும். 

RELATED ARTICLES

4 COMMENTS

  1. நல்ல பயன்னுள்ள தகவல்….உங்கள் பகிர்வுக்கு நன்றி……

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Comments are closed.

Most Popular

Recent Comments