Monday, December 23, 2024
HomeFree softwareகேம் உருவாக்கிட உதவும் மென்பொருள்

கேம் உருவாக்கிட உதவும் மென்பொருள்

மைக்ரோசாப்டின் புதிய மென்பொருள் – Microsoft’s new software

உலகின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது புதிய மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது.

கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு முன்பே, அதில் இருக்கிற கேம்சைகளைத்தான் நாம் விரும்பியிருப்போம். இது சிறுவயதில் ஏற்படும் ஒரு அதீத ஆர்வம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சில சமயம் விரும்பி விளையாடுவது Computer Games கள்தான்.

Computer Game கள்தான் விளையாட வேண்டுமா? விளையாடுபவர்களே அந்த கேம்களை உருவாக்கினால் என்ன? என்று யோசித்து செயல்படுத்தியன் விளைவுதான் தற்போது மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த கேம்ஸ் உருவாக்கும் மென்பொருள்.

இந்த மென்பொருளைக் கொண்டு நீங்களே கேம்ஸ்களை உருவாக்க முடியும்.  இந்த மென்பொருளுக்கு KODU என பெயரிட்டிருக்கின்றனர்.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நீங்களே கேம்ஸ் உருவாக்கலாம். இதற்கு உங்களுக்கு எந்த ஒரு கணினி மொழியும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை… சாதாரணமானவர்களும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி computer Games களை உருவாக்கலாம். அவ்வளவு எளிமையான செயல்முறைகள் அடங்கியுள்ளது.

தற்போது படிக்காதவர்கள் கூட கணினியைப் பயன்படுத்தி வரும் காலம் இது. கணினி பயன்பாடு அனைவருக்கும் சாத்தியமாகியிருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அதி அற்புத முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த KODU Games Creating software கொண்டு xbox என்று சொல்லப்படும் சாதனத்திற்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்  இதனுடைய எளிமையான பயன்பாட்டை….!!!!

KODU மென்பொருளை ஆதரிக்கும் இயங்கு தளங்கள்: 

1. Windows 7
2. Windows xp
3. Windows vista
  மேலும்
A graphics card that supports DirectX 9.0c and Shader Model 2.0 or higher is required. .NET Framework 3.5 or higher is required. XNA Framework 3.1 Redistributable is required. 

Summary:
Kodu is a nwe visual programming language made specifically for creating games. It is designed to be accessible for children and enjoyable for anyone. the visual nature of the language allows for rapid design iteration using only an Xbox game controller of input (mouse/keyboard input is also supported).

DOWNLOAD KODU GAMING SOFTWARE

Games Create செய்ய  பயன்படும் Microsoft-ன் GODU மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய இந்த இணைப்பைப் பயன்படுத்தவும்.

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்… நன்றி நண்பர்களே…!!!

இந்த வீடியோவையும் ஒரு தடவை பார்த்திடுங்களேன்…!!!!

வீடியோவைப் பார்க்க

RELATED ARTICLES

2 COMMENTS

  1. நல்ல பயனுள்ள தகவல்…..உங்கள் பகிர்வுக்கு நன்றி…….

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Comments are closed.

Most Popular

Recent Comments