Friday, January 24, 2025
HomeUncategorizedதவறுதலாக அழித்த கோப்புகளை மீட்கப் பயன்படும் மென்பொருள்

தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்கப் பயன்படும் மென்பொருள்

வணக்கம் நண்பர்களே…!
நலமா.? கடந்த காலங்களை நினைக்க நினைக்க..ஒரு நமட்டு சிரிப்புதான் வருகிறது. காரணம் உலகம் அழியப் போகிறது என படித்த அறிஞர்கள் முதல் பாரமர்ர்கள் வரை அனைவருமே ஒருமனதாக நம்பி, ஒருவித பயத்துடனும், படப்படப்புடனும் இருந்துகொண்டிருந்தனர். 
ஒருவழியாக அவர்கள் குறிப்பிட்ட நாளும் கடந்துபோய்விட்டது.. இறுதியாக வெறும் கட்டுக்கதை என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இடைப்பட்ட இந்த காலத்தில் உலகம் அழிந்துவிடும் என்று ஒரு சிலர் செய்த பைத்தியக்காரத் தனங்களை நினைத்தால்தான் சிரிப்பு வருகிறது.. சரி.. பதிவிற்கு வருவோம்.. 
Free power data recovery software
என்னதான் கணினியில் கெட்டிக்காரர்களாக இருந்தாலும் அவர்களையும் அறியாமல் சில தவறுகளை செய்துவிடுவார்கள். 
இது மனித இயல்பு.. தவறுதலாக ஒரு கோப்பை அழித்துவிட்டு, மீண்டும் அதை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவோம். அவ்வாறு மீட்கும் முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டால் பயங்கரமான டென்சன் ஏற்படும். 
வீட்டில் பிள்ளைகள் கணினியில் விளையாடும்பொழுது தவறுதலாக நாம் வைத்திருக்கும் கோப்புகளில் கைவைத்துவிடுவார்கள். இவ்வளவுநாள் இங்கேதானே வைத்தேன்.. ஆனால் கோப்பைக் காணவில்லையே என்று குறிப்பிட்ட கோப்பை கணினியில் தேடிக்கொண்டு இருப்பீர்கள்.. இல்லாத கோப்பை கண்டுபிடிப்பது என்பது சிரமம்.. இதுபோன்ற சூழல்களில் உங்களுக்கு உதவக்கூடியது இந்த மென்பொருள்.
மென்பொருளின் பெயர் Power Data Recovery. பெயருக்கேற்றார் பவரான சாப்ட்வேர்தான் இது. 
கணினி(computer), பென்டிரைவ்(pendrive), மெமரி கார்ட்(memory card) போன்ற எந்த ஒரு சாதனத்திலிருந்தும் நீங்கள் இழந்த கோப்புகளை மீட்டெடுக்க பயன்படுகிறது இந்த அருமையான மென்பொருள். 
மென்பொருளைத் தரவிறக்க செல்ல வேண்டிய முகவரி: 
கோப்பு- File (Document)
கணினி – கம்ப்யூட்டர் (Computer)
மென்பொருள் – சாப்ட்வேர் – (Software)
நன்றி நண்பர்களே..!
என்றும் அன்புடன் 
உங்கள் சுப்புடு. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments