Wednesday, December 25, 2024
HomeFree softwaresகோப்புகளை சி.டி.யில் பதிவு செய்ய இலவச மென்பொருள்

கோப்புகளை சி.டி.யில் பதிவு செய்ய இலவச மென்பொருள்

கோப்புகளை சிடியில் பதிவு செய்ய இந்த மென்பொருள் மிக எளிமையானதாக இருக்கிறது.  பொதுவாக நாம் பயன்படுத்தும் Nero Burining Software ஆனது சுலபமானதாக இருப்பினும், அதைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே எளிமையாக இருக்கும்.

ஆனால் இந்த மென்பொருளானது புதியவர்கள் கூட சுலபமாக பயன்படுத்த முடியும். User Friendly Software ஆன இந்த மென்பொருள் 5 MB அளவே உள்ளது.

மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவும்பொழுது (Install) உங்களுக்கு இவ்வாறானதொரு விண்டோ திறக்கும்.

CD Burining free Softwar

 அந்த விண்டோவில் Data disc, Video DVD, Audio disc, Burn ISO Image, Copy or grab disc, Erase disc என்ற ஆப்சன்கள் இருக்கும்.

டேட்டா டிஸ்க்கை தேர்ந்தெடுத்து நமக்கு வேண்டிய கோப்புகளை சி.டியில் பதிந்து வைத்துக்கொள்ள முடியும். Data Disc என்பதை தேர்ந்தெடுத்தவுடன் இவ்வாறு ஒரு விண்டோ திறக்கும்.

அதில் உங்களுக்கு வேண்டிய கோப்புகளை தேர்வு செய்தோ அல்லது Drog and Drop files here செய்தோ என்ற பகுதியில் உங்கள் கோப்புகளை இழுத்து விட்டோ (Drog and Drop) கோப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.

CD Burining free Softwar

இவ்வாறு கோப்புகளை தேர்வு செய்த பிறகு அந்த விண்டோவின் கீழே Green Color-ல் காப்பி ஆகும் கோப்பின் அளவைக் காட்டும்.

CD Burining free Softwar

மென்பொருளின் மேலதிக வசதி என்று குறிப்பிட்டால் அது சி.டி கவரை டிசைன் செய்து வசதிதான். ஆம் நண்பர்களே.. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி உங்கள் CDக்கு தேவையான Cover-ஐ Design செய்ய முடியும்.
கீழிருக்கும் படம் அதைத்தான் காட்டுகிறது.

CD Burining free Softwar

இறுதியாக நீங்கள் உங்கள் CD-யை Burn செய்ய கிளிக் செய்தவுடன் கீழிருக்கும் படத்தில் காட்டியுள்ளபடி மூன்று வசதிகள் தோன்றும். உங்களுக்கு தேவையான ஒன்றை தேர்வு செய்துவிட்ட பிறகு உங்களுக்கு இவ்வாறானதொரு விண்டோ தோன்றும்.

CD Burining free Softwar

அடுத்து திறக்கும் காலியான டிரேயில் புதிய Empty CD யை உள்ளிடவும். ஒரு சில வினாடிகளில் உங்கள் கோப்பானது CD யில் கோப்புகளனைத்தும் பதியப்பட்டிருக்கும்.

CD Burining free Softwar

மென்பொருளை தரவிறக்கம் செய்யது இங்கு கிளிக் செய்யவும்.

நன்றி.

-சுப்புடு 

மென்பொருளைப் பற்றிய ஆங்கிலச் சுருக்கம்:

CDBurnerXP is a free application to burn CDs and DVDs, including Blu-Ray and HD-DVDs. It also includes the feature to burn and create ISOs, as well as a multilanguage interface. Everyone, even companies, can use it for free. It does not include adware or similar malicious components.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments