இவைகளின் மூலம் நண்பர்களிடம் அரட்டை அடிக்க கண்டிப்பாக அந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி இருக்க வேண்டும். உதாரணமாக Gtalk மூலம் Chat செய்ய, உங்கள் கணினியில் கூகிள் Gtalk மென்பொருள் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
இது போன்று கூகிள், யாஹூ உட்பட ஒவ்வொரு தளத்திலும் இந்த உரையாடலை மேற்கொள்ள, அந்த தளங்களின் மென்பொருளை நிறுவி, பின்பே சாட்டிங் செய்ய முடியும்.
ஆனால் இவற்றையெல்லாம் நிறுவாமலேயே, IMO.IM என்ற ஒரே ஒரு தளத்திலிருந்து மேற்குறிப்பிட்ட அனைத்து தளங்கள் அளிக்கும் சாட்டிங் வசதிகளையும் பயன்படுத்த முடியும்.
இத்தளத்தின் மூலம் மேற்குறிப்பிட்ட தளங்களில் நீங்கள் வைத்திருக்கும் சாட்டிங் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி சாட் செய்யலாம். அது யாஹூவாக இருக்கலாம்.. பேஸ்புக்காக இருக்கலாம்.. MSN, AIM, Jabber போன்ற எந்த ஒரு சாட்டிங் அக்கவுண்டாக கூட இருக்கலாம்.
அரட்டை அடிக்க செல்ல வேண்டிய இணையதளத்தின் முகவரி: https://imo.im/
ஐ.எம்.ஓ. தளத்தில் சாட்டிங் செய்வதற்கான வழிமுறைகள்:
ஐ.எம்.ஓ. தளத்திற்கு சென்றவுடன் சைன் இன் டூ அனொதர் அக்கவுண்ட் (Sign in to another account) என்பதில் கிளிக் செய்து sign in செய்து உங்களுக்கு விருப்பமானதில் உரையாடலை மேற்கொள்ள முடியும்.
இத்தளத்தில் நீங்கள் கணக்கு ஒன்றைத் துவங்கியும் உங்களுக்கு விருப்பமானதில் அரட்டை அடிக்க ஆரம்பிக்கலாம்.
ஒரே சமயத்தில் வெவ்வேறு அரட்டைதளங்களின் மூலம் அரட்டை அடித்து மகிழலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஐபோன் iPhone, iPad, Android, BlackBerry, Nokia போன்றவற்றிற்கான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன.
அந்த அப்ளிகேஷன்களை உங்கள் மொபைல் போனில் நிறுவி இவ்வசதிகள் அனைத்தையும் பெற முடியும்.
அந்த அப்ளிகேஷன்களை நிறுவ இச்சுட்டியை அழுத்தவும்.
thanks for introduce this software
thanks anbu
பயனுள்ள தகவல் மிக்கநன்றி