Monday, December 23, 2024
Homeblogger tipsப்ளாக்ர் தளத்தில் மல்வேர் நீக்குவது எப்படி?

ப்ளாக்ர் தளத்தில் மல்வேர் நீக்குவது எப்படி?

How to Remove Malware From Your Blog

வணக்கம் நண்பர்களே…!

இணையத்தைப் பயன்படுத்துவதால் கணினி பல்வேறுபட்ட தாக்குதல்களுக்கு ஆளாகிறது. கணினி மட்டுமா? நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாக்கர் போன்ற வலைத்தளங்களையும் வைரஸ், மால்வேர், ஆட்வேர் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்கள் விட்டு வைப்பதில்லை…

how to remove malware

நண்பர் ஒருவர் தனது பிளாக் மால்வேரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை எப்படி நீக்குவது என்பதையும் கேட்டிருந்தார்.. அது அவருக்கு மட்டுமல்ல.. அனைவருக்கும் பயன்படும் என்பதால் இங்கு பகிர்கிறேன்.
மால்வேரால் தாக்கப்பட்டுள்ள பிளாக்கை திறக்கும்பொழுது இவ்வாறான பிழைச் செய்தி கிடைக்கும். The Website Ahead Contains Malware!
how to remove malware from your blog

 மால்வேர் (malware) என்றால் என்ன?

பொதுவாக மால்வேர் என்பது நம்முடைய தகவல்களை திருடி உரியவருக்கு அனுப்பும் ஒரு புரோகிராம். அதிலுள்ள கட்டளைகளின் படி செயல்பட்டு, உங்களுடைய கணினியில் உள்ள தகவல்களை – நீங்கள் உள்ளிடும் தகவல்களை திருடி அனுப்பிவிடும். மால்வேரில் மற்றொரு வகையானது ஆட்வேர்.

ஆட்வேர் (Adware) என்றால் என்ன?

ஆட்வேர் என்பதும் மால்வேரின் மற்றொரு வடிவம். இது நீங்கள் பார்வையிடும் இணையதளங்களில் விளம்பரங்களைக் காட்டும். கவர்ச்சிகரமான விளம்பரங்களை கிளிக் செய்தால் அது வேறொரு இணையதளத்திற்கு மாறிவிடும். அந்த இணையதளங்கள் மோசமான ஆபாச இணையதளங்களாகவோ, பணம் பறிக்க கூடிய வகையில் உள்ள இணையதளங்களாகவோ இருக்கலாம்.

உங்களது “வலைப்பூ” அல்லது “ப்ளாக்” ல் மால்வேர் மற்றும் ஆட்வேர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை சரி செய்திட “வார்ப்புரு” மாற்றிட வேண்டும்.

டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி?

( How to Change Blogger Blog Template?)
  • பிளாக்கரில் லாகின் செய்து கொள்ளுங்கள்.
  • டெம்ளேட் என்பதை சொடுக்குங்கள்…
  • பேக்அப்/ரீஸ்டோர் என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • தோன்றும் பெட்டியில் upload என்பதை கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே தரவிறக்கம்செய்து வைத்திருக்கும் டெம்ப்ளேட்டை அப்லோட் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்துகொள்ளுங்கள்.
  • இறுதியாக Save Template  என்பதை சொடுக்கி புதிய வார்ப்புருவை சேமித்துக்கொள்ளுங்கள்.
  • இந்த முறையைப் பயன்படுத்தும்பொழுது மால்வேர் நிரல்கள் நீக்கப்பட்டு உங்களுக்கு புதிய வார்ப்புருவில் உங்கள் தளம் செயல்பட ஆரம்பிக்கும்.

மால்வேரை நீக்க மற்றுமொரு வழிமுறை: 

இந்த முறையில் நீக்குவதற்கு நீங்கள் முதலில் கூகிள் வழங்கும் வெப்மாஸ்டர் டூலைப் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் முதலில் வெப்மாஸ்டர் டூல் தளத்தில் உங்கள் பிளாக்கை இணைக்க வேண்டும். வெப்மாஸ்டர் டூல் தளம் செல்ல கிளிக் செய்யவும்.

இத்தளம் வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றியும் நீங்கள் உங்கள் பிளாக்கர் தளத்திலுள்ள மால்வேர் நிரல்வரிகளை நீக்க முடியும்.

குறிப்பு: உங்கள் பிளாக்கர் தளம் அல்லது வலைத்தளங்கள் மால்வேரினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய google.com சர்ச் என்ஜினில் உங்களுடைய வலைத்தளத்தில் URL கொடுத்து SEARCH கொடுத்தால் இவ்வாறு தோன்றும். அதாவது This Site May Harm Your Computer எனக்காட்டும், இதன்மூலம் உங்கள் பிளாக்கர் தளம் அல்லது வலைத்தளம் உறுதியாக மால்வேரினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம்.

how to remove malware from your blog
RELATED ARTICLES

3 COMMENTS

  1. நல்ல பயனுள்ள தகவல்…..உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி…..

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Comments are closed.

Most Popular

Recent Comments