Monday, December 23, 2024
Homecomputer tipsஆப்பரேட்டிங் லைவ் சிடி - முற்றிலும் இலவசம்

ஆப்பரேட்டிங் லைவ் சிடி – முற்றிலும் இலவசம்

வணக்கம் நண்பர்களே.. !

சாதாரணமாக நீங்கள் உங்கள் கணினியை தொடங்கியவுடன், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்கில் பதியப்பட்ட ஆபரேட்டிங் என்ன செய்யும்?

கணிப்பொறி இயக்கப்பட்டவுடன் முதன் முதலில் Operating System என்ற சொல்லக்கூடிய இயங்குதள புரோகிராம்களை Hard Disc அடுக்குகளில் ஏற்றும். அதன் பிறகே அதில் குறிப்பிட்ட செயல்முறையில் சில கோப்புகளை இயக்க தொடங்கும். இக்கோப்புகள் கணினியில் உள்ள Hardware களை சரிபார்க்கும். Driver Files களை Memory-க்கு ஏற்றிக்கொள்ளும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களுக்கு ஏற்ற, அதற்கு தேவையான Library Files (கோப்புகளை) தயார்படுத்தி வைக்கும். இதுதான் கணினி உயிர்ப்பு பெற்றவுடன் செய்யும் வேலைகள்.

windows-linux live operating cd for free


சரி.. Hard Disk -ல் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் செய்யும் வேலைகளை, ஹார்ட் டிஸ்க்கில் பதியபட்டாமல், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் CD யில் பதியப்பட்டு, கணினியை இயக்கினால் என்ன?

இந்த சிந்தனையில் விளைவாக உருவானவே லைவ் சி.டி.

லைவ் சி.டி. என்றால் என்ன? இந்த லைவ் சி.டி என்ன செய்யும்?

ஹார்ட் டிஸ்க்கில் நாம் பதித்து இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும்,  இந்த சிடி உள்ளடக்கியிருப்பதால், ஆபரேட்டிங் சிஸ்டம் (operating system) செய்யும் அதே வேலையை இந்த லைவ் சி.டி. யும் செய்யும். 

அதாவது, பொதுவாக கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில்(Hard Disk) ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் (OS files) பதியப்பட்டிருக்கும்.  அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குகான கோப்புகள்  இங்கு குறுவட்டு என்று சொல்லக்கூடிய சி.டியில் உள்ளது அவ்வளவே.

இதில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் மிக நுணுக்கமாக, செறிவுடன் கூடிய கம்ப்ரஸ் செய்யப்பட்டுள்ளது. சிடியை கணினியில் செலுத்தி இயக்கம் பெறும்பொழுது இதிலுள்ள கோப்புகள் கணினியில் உள்ள Ram Memory -ல் uncompress ஆகும்.  அதன் பிறகு அந்த RAM யை ஒரு Disk Driver ஆக கணினி டிரைவர் கோப்புகளுக்கு அறித்துவிடும். அதன் பிறகு எப்பொழுதும் போல புரோக்கிராம் கோப்புகளை அங்கிருந்து செயல்படுத்த தொடங்கும்.

அதாவது சிடியில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகளை அன்கம்ப்ரஸ் ரேமை (RAM) உபயோகித்துக்கொள்ளும். பிறகு அந்த ரேமையே டிஸ்க் டிரைவாக (Disk Drive) பாவித்து கணினியிலுள்ள அனைத்து டிரைவர் கோப்புகளுக்கும் ‘இது தான் டிஸ்க் டிரைவ்’ என்பதை உணர வைத்துவிட்டு, வழக்கம்போல ஆபரேட்டிங் சிஸ்டத்திலுள்ள புரோகிராம் கோப்புகளை செயல்படுத்த தொடங்கும்.

 பெரும்பாலான Booting disk கள் அனைத்தும் இதே செயல்பாட்டை தொடர்ந்து செய்துகொண்டுள்ளன. OS இன்ஸ்டால் செய்யும்பொழுது இதே நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

இவற்றையே பணம் கொடுத்து உபயோகிக்காமல் இலவசமாக உபயோகிக்க என்ன வழி என்று சிந்தித்ததின் விளைவே ஓப்பன் சோர்ஸ்(Open Source) என்று சொல்லக்கூடிய திற மூல அங்கத்தின் உறுப்பினர்கள் இந்த செயல்முறைகளை ஆராய்ந்து மேம்படுத்தி, பல்வேறு இயக்க முறைமைகளைக் கொண்டு லைவ் சிடிக்களை கண்டுபிடித்து இலவசமாக வெளியிட்டுள்ளனர்.

இன்று லினக்ஸ்சின் உபுண்டு(Ubuntu), குபுண்டு(gubuntu) ஆகிய லைவ் சிடிக்கள் கிடைப்பதோடு, விண்டோஸ் லைவ் சிடிக்களும் இணையத்தில்  இலவசமாக கிடைக்கின்றன.

இலவச லைவ்  சி.டி.க்களை பெற்றுக்கொள்ள கீழ்க்கண்ட இணைப்புகள் உங்களுக்கு உதவும்.
1. shipit.ubuntu.com
2. www.frozentech.com/content/livecd.php
மேலும் google Search-ல் free live operating system cd என்று தேடினால் உங்களுக்கு நிறைய இலவச ஆப்பரேட்டிங் லைவ் சிடிக்களுக்கான தங்கள் கிடைக்கும்.

மிக்க நன்றி..

– சுப்புடு
RELATED ARTICLES

6 COMMENTS

  1. கணினியில் இல்லாத வேறொரு ஆபரேட்டிக் சிஸ்டத்தை லைவ் சிடி மூலம் முயற்சி செய்து பார்க்கலாம்.

Comments are closed.

Most Popular

Recent Comments