போட்டோஷாப்பில் செய்வது போன்று போட்டோவை அழகாக மாற்றிடச் செய்வதற்கு தற்காலத்தில் பல மென்பொருட்கள் வந்துவிட்டன. அவற்றில் போட்டோவை திறந்து ஒரு சில சொடுக்குகளைச் செய்வதன் மூலம் நாம் திறந்த அந்த போட்டோவானது, அதில் கொடுக்கப்பட்ட வடிமைப்புகளுக்கு ஏற்ப மாறி மிக அருமையான போட்டோவாக நமக்கு கிடைக்கும்.
அது போன்றதொரு மென்பொருள் தான் Photo Mixing Software. இதன் மூலம் Photo Collages என்று கூறப்படும் “போட்டோ கோலங்கள்” செய்திடலாம்.
இந்த மென்பொருள் மிக எளிமையான பயனர் இடைமுகம் கொண்டது. இதனால் இதைப் பயன்படுத்துவது மிகச் சுலபம். இதைப் பயன்படுத்தி எப்படி Photo Mixing செய்வது என்பதை பற்றி அறிந்துகொள்வோம்.
போட்டோ மிக்சிங் மென்பொருளைப் பயன்படுத்துவது எப்படி?
- முதலில் போட்டோ மிக்சிங் மென்பொருளை தரவிறக்கம் (Download) செய்து, நிறுவி (Install) செய்துகொள்ளவும்.
- போட்டோமிக்சிங் புரோகிராமை திறந்திடவும்.
- வலது பக்கத்தில் இடம்பெற்றுள்ள டெம்ப்ளேட்களில் (வார்ப்புரு) ஏதேனும் ஒன்றினை சொடுக்கவும்.
- இடது புறம் அந்த ப்ரேம்கள் காட்சி அளிக்கும்.
- பிறகு File==>Open முறையில் போட்டோ ஒன்றினை திறந்து, அங்கு இருக்கும் ப்ரேம்களில் Drag & Drop செய்துவிடவும்.
- இறுதியாக File => Save image என்ற வழியில் அந்த புகைப்படத்தை சேமித்துவிடவும்.
போட்டோ மிக்ஸ் மென்பொருளின் பயன்கள்:
- உங்களுடைய புகைப்படங்களுக்கு பேக்ரவுண்ட் மாற்றிக்கொள்ள இயலும்.
- புகைப்படத்தை வேறொரு புகைப்படத்துடன் இணைத்துக்கொள்ள முடியும்.
- புகைப்படத்தில் உள்ள தேவையில்லாத பகுதிகளை நீக்க முடியும்.
- பல்வேறு புகைப்படங்களை இணைத்து (Collage Photos) அதை ஒரு ஓவியம் போல் மாற்றிடலாம்.
- WallPaper, CD Cover, DVD Cover போன்றவற்றை இம் மென்பொருள் மூலம் தயார் செய்திடலாம்.
- இதன் வழியாக கிராபிக்ஸ் செய்யப்பட்ட போட்டோக்கள் பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும்.
- அவ்வாறு புகைப்படங்களை நேர்த்தியாக அழகுடன் மாற்றிய பிறகு, அதை பிரிண்ட்அவுட் எடுக்க இயலும்.
- மாற்றம் செய்திட்ட புகைப்படங்களை நண்பர்களுக்கு பகிரும் வசதியும் இதில் உள்ளது.
இம்மென்பொருள் நான் பயன்படுத்திப் பார்த்தேன். அருமையாக உள்ளது. நீங்களும் பயன்படுத்திப் பார்த்திட எண்ணினால் கீழுள்ள சுட்டியைச் சொடுக்கி, உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.
உங்களுடைய அனுபவத்தை இங்கே கருத்திட மறக்காதீர்கள். மேலும் இதுபோன்ற எளிமையான மென்பொருளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அது என்ன மென்பொருள், எப்படி சிறந்ததாக உள்ளது என்பதையும் இங்கே (Comment Box) ல் தெரிவியுங்கள்.
இப்பதிவு உங்களுக்குப் பயன்மிக்கதாக இருப்பின், உங்களுடைய நண்பர்களும் தெரிந்துகொள்ள ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ், வாட்சப் போன்ற சமூக இணையத்தளங்களில் பகிருங்கள்.
இதுவரை பொறுமையுடன் படித்தமைக்கு மிக்க நன்றி.
Tags: Photo Mixing Software, Photoshop, Collage Photos.
மிக நல்ல தகவல்…..உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி….
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
பயனுள்ள தகவல்! நன்றி!