Friday, November 22, 2024
HomeFree softwareவிரும்பிய வலைப் பக்கத்தை பி.டி.எப். கோப்பாக மாற்ற..

விரும்பிய வலைப் பக்கத்தை பி.டி.எப். கோப்பாக மாற்ற..

நீங்கள் படிக்கும் வலைத்தளத்தின் பக்கங்கள் பயனுள்ளதாக இருப்பின், அப்பக்கத்தை அப்படியே சேமித்து வைக்க விரும்புவீர்கள். அவ்வாறு அப்பக்கங்களை சேமித்து வைக்க அவற்றை Select All கொடுத்து Copy செய்துகொண்டு, அவற்றை ஏதேனும் ஒரு Word Processor அப்ளிகேஷன் மூலம் Past செய்து சேமிப்பீர்கள் இல்லையா?

அவ்வாறு சேமிக்கும்பொழுது, அந்த வலைத்தளத்தின் பக்கத்தில்(web page) உள்ள அனைத்து பகுதிகளும் தேர்ந்தெடுக்கபட்டு, ஒரு ஒழுங்கில்லா வகையில் சேமிக்கப்படும். உங்களுக்குத் தேவையான பகுதிகளை படித்துப் புரிந்துகொள்வதற்கு சிரமமாக இருக்கும்.

அவ்வாறு இல்லாமல் உள்ளது உள்ளபடியே, எந்த ஒரு Alignment-ம் மாறாமல் உங்களுக்கு ஒரு கோப்பாக சேமித்து வைக்க PDF முறைப் பயன்படுகிறது. இந்த வகை கோப்பாக நீங்கள் விரும்பும் வலைத்தளங்களின் பக்கங்களை சேமிக்க Add ON ஒன்று உள்ளது.

இத்தொகுப்பைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வலைத்தளங்களின் வலைப்பக்கங்களை (Webpages) எளிதாக PDF கோப்புகளாக சேமித்துப் பயன்படுத்தலாம்.

இது முற்றிலும் இலவசமே.. இத்தொகுப்பை Firefox, Google Chrome வலைஉலவிகளில் பயன்படுத்த முடியும்.

இந்த ஆட்ஆன் தொகுப்பை உங்கள் வலைஉலவியில் சேர்ப்பதன் மூலம், நீங்கள் விரும்பும் வலைப்பக்கத்தை PDF கோப்பாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

ஆட்ஆன் தொகுப்பை நிறுவியபிறகு, நீங்கள் விரும்பும் தளத்தின் பக்கத்தில் Right Click செய்து, தோன்றும் பெட்டியில் உங்களுக்கு PDF ஃபைலாக மாற்றக்கூடிய வசதி கிடைக்கும். அதில் கிளிக்செய்து வேண்டிய பக்கத்தை PDF File ஆக நீங்கள் சேமித்துக்கொள்ள முடியும்.

இந்த ஆட்ஆன்-ஐப் இரண்டு முறைகளில் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வலைப்பக்கத்தினைச் சேமிக்கலாம். ஒன்று இமேஜ் பைலாக, மற்றொன்று பி.டி.எப் கோப்பாக..

  • பார்த்துக்கொண்டிருக்கும் வலைத்தளத்தின் முழுபக்கத்தையும்  Image ஆக மாற்ற குறுக்கு விசை : Alt+1
  • கண்ணிற்கு தென்படும் (Screen Area)பக்கத்தை மட்டும் Image ஆக மாற்ற: Alt+2
  • பார்த்துக்கொண்டிருக்கும் வலைத்தளத்தின் முழுபக்கத்தையும்  PDF file ஆக மாற்ற குறுக்கு விசை : Alt+3
  • கண்ணிற்கு தென்படும் (Screen Area)பக்கத்தை மட்டும் PDF file ஆக மாற்ற: Alt+4
இவ்வாறு மாற்றப்படும் கோப்பிற்கு நீங்கள் ஒரு தலைப்பைக் கொடுக்க முடியும். அந்த தலைப்பு எந்த நிறத்தில், என்ன எழுத்து உருவில் இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கும் வசதியும் இதில் அடங்கியுள்ளது.

நீங்கள் ஃபையர்ஃபாக்ஸ் உலவி பயன்படுத்துவோர் எனில் இந்த இணைப்பில் சென்று உங்கள் PDF Odd On -ஐ நிறுவிக்கொள்ளுங்கள்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/pdfit/
நீங்கள் கூகிள் குரோம் உலவியைப் பயன்படுத்துவோர் எனில் கீழிருக்கும் இணைப்புச் சுட்டியைக் கிளிக் செய்து PDF Odd On நிறுவிக்கொள்ளுங்கள்.
https://chrome.google.com/webstore/detail/free-pdf-maker/inbhncalhbjgoibpokgjnjigjpkdopai?utm_source=chrome-ntp-icon
நன்றி.

– சுப்புடு

ளை PDF கோப்புகளாக மாற்ற, 

RELATED ARTICLES

2 COMMENTS

  1. விண்டோஸ்7 இன்ஸ்ட்டால் செய்த பிறகு என்னிடம் உள்ள் acer motherbord cdயை எப்படி இன்ஸ்ட்டால் செய்யவேண்டும் விளக்கமாக செல்லுவும் cdயை computerரில் உள்ளே செலூத்திஉடன் என்னசெய்யவேண்டும்

Comments are closed.

Most Popular

Recent Comments