Wednesday, January 22, 2025
HomeFree softwareவேண்டாத இணையத்தளங்களை தடுத்து நிறுத்த உதவிடும் மென்பொருள்

வேண்டாத இணையத்தளங்களை தடுத்து நிறுத்த உதவிடும் மென்பொருள்

Website Blocking Software – The Web Blocker

வணக்கம் நண்பர்களே..!

இன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிக பங்கு வகிப்பது கணினியும், இணையமும் என்றால் அது மிகையில்லை.

எந்தளவிற்கு கணினியும், இணையமும் இணைந்து நமக்கு நன்மை விளைவிக்கிறதோ, அந்தளவிற்கு தீங்கும் அதில் உள்ளது என்பதை நாம் மறுக்கவியலாது.

the web blocker - website blocking software

ஆம்.. சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை இன்றைய காலத்தில் இணையத்தைப் பயன்படுத்த தெரிந்துகொண்டு விட்டனர். அதனால் ஒரு புறம் மகிழ்ச்சிதான் என்றாலும் வயது வராதவர்கள் இணையத்தில் உள்ள பலான சங்கதிகளை ஆர்வத்துடன் பார்த்து, படித்து, தங்களுடைய எதிர்கால வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது முறைமுக உண்மை.

இணையத்தால் இதுபோன்ற கெடுதல் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், நம்முடைய குழந்தைகள் தேவையில்லாத வலைப்பக்கங்களை, வலைத்தளங்களை பார்வையிடுவதை ஒரு சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் தடுக்க (block) முடியும்.

ஆம் நண்பர்களே..! பணிபுரியும் அலுவலகங்கள் (Office), பள்ளிகள்(Schools), வீடுகள்(homes) என பொது இடங்களில் பயன்படுத்தும் அனைத்து கணினிகளிலும் ஒரு சில வேண்டாத தளங்களை நீங்கள் Block ((தடுத்து) நிறுத்த முடியும்.

அதற்கு பயன்படுகிறது இந்த அற்புதமான மென்பொருள். மென்பொருளின் பெயர்: The Web Blocker

மென்பொருள் தரவிறக்கச் சுட்டி: Download The Web Blocker software

பெயருக்கேற்றார் போலவே வேண்டாத தளங்களை (Unwanted Websites) தடுத்து நிறுத்தும் பணியை இம்மென்பொருள் செவ்வனே செய்கிறது.

 மென்பொருளைத் தரவிறக்கி நிறுவும்போது கவனிக்க வேண்டியவைகள்: 

மென்பொருளைத் தரவிறக்கி நிறுவும்போது அதனுடன் சேர்ந்தாற்போன்று கிளாரோ பிரவுசர் டூல் பார் (Claro Browser tool Bar), பிசி அட்டிலிட்டிஸ் (PC utilities Pro), பேபிலோன் (babylon) போன்ற கூடுதல் டூல்பார்களையும் நிறுவலாமா என கேட்கும். அவ்வாறு கேட்கும்பொழுது, அவை தேவைப்பட்டால் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் Decline என்பதைச் சொடுக்கி அவற்றை நிராகரித்து விடலாம்.

மென்பொருளை நிறுவியவுடன் (Install), மென்பொருளை திறக்கவும். மென்பொருளை இயக்க உங்களுக்கான கடவுச்சொல் (Password) ஒன்றினை நீங்கள் கொடுக்க வேண்டும். கொடுத்தவுடனே மென்பொருள் திறக்கும். அப்பொழுது முதலில் நீங்கள் உள்ளிட்ட அந்த கடவுச்சொல்லை கொடுத்து மென்பொருளை இயக்கலாம்.

மென்பொருள் திறந்தவுடனேயே இவ்வாறானதொரு விண்டோ திறக்கும்.

the-web-blocker-website-blocking-software

அதில் Add Address to Block List என்பதில் தடுத்து நிறுத்த வேண்டிய வலைத்தளங்களின் Website URL  தட்டச்சிடவும். அல்லது அந்த வலைத்தளத்தின் URl – ஐ காப்பி செய்து பேஸ்ட் செய்துகொள்ளலாம்.

அடுத்து இவ்வாறு நீங்கள் தடுத்து நிறுத்தும் தளங்கள் எந்தெந்த யூசர்களுக்குப் பொருந்தும் என்பதையும் நீங்கள் தீர்மானிக்கலாம். அதற்கு யூசர் லிஸ்ட் (User List) என்பதைப் பயன்படுத்தலாம்.

பெரும்பாலான நேரங்களில் அனைத்து கணினியிலும் ஒரே யூசர் மட்டுமே இருக்கும். அதுபோன்ற கணினிகளில் All Users என்பதை தெரிவு செய்து இறுதி செய்துவிடலாம்.

இவ்வாறு எத்தனை வலைத்தளங்களை வேண்டுமானாலும் தடுத்து (Block website) நிறுத்த முடியும்.

மற்றவர்களுக்கு பிளாக் செய்த விஷயம் தெரியாமல் இருக்க, Destktop இல் இருக்கும் The Web Blocker software -ன் ஷார்ட் கட் ஐகானை டெலீட் செய்துவிடலாம்.

மென்பொருளை நேரடியாக தரவிறக்கம் செய்யச் சுட்டி: Download The Website Blocker Software

நன்றி!

– சுப்புடு
RELATED ARTICLES

Most Popular

Recent Comments