Tuesday, December 24, 2024
Homepdf softwareஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF கிரியேட்டர்

ஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF கிரியேட்டர்

இது ஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF Creator மென்பொருளாகும். Sonic PDF Creator என்றழைக்கப்படும் இந்த மென்பொருளானது Android Mobile முதல் டேப்ளட் பிசி- Tablet PC வரைக்கும் அனைத்து ஸ்மார்ட் போன்களில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஸ்மார்ட் போனிலிருக்கும் பிரிண்டபிள் கோப்புகளை (Printable Files) பி.டி.எப் கோப்புகளாக மாற்றம் செய்யலாம்.

இதைப் பயன்படுத்தி Microsoft Documents களிலிருந்து உடனடியாக PDF கோப்புகளை உருவாக்க முடியும்.

ஸ்மார்ட்போனிலுள்ள அனைத்துவிதமான Printable கோப்புகளை PDF கோப்பாக உருவாக்கிவிடலாம்.

இனி ஒவ்வொரு முறையும் கோப்புகளை கம்ப்யூட்டர் மூலம் பி.டி.எப் கோப்பாக மாற்றி, பிறகு ஸ்மார்ட்போன்களில் தரவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Sonic PDF Creator – ஐ பயன்படுத்தி ஒரு கோப்பினை எப்படி PDF கோப்பாக மாற்றுவது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 Sonic PDF Creator -ல் PDF File உருவாக்கும் முறை:

  • உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள டாக்குமெண்ட்களை Sonic PDF Creator மூலம் திறவுங்கள். 
  • Sonic Pdf Creator -ல் கோப்பு இறங்கியவுடன் PDF conversion ஆரம்பித்துவிடும். 
  • புதியதாக உருவாக்கப்பட்ட PDF கோப்புகள் உங்கள் ஸ்மார்ட் போனில் (Smart Phone’s Storage ) சேமிக்கப்பட்டுவிடும். 
  • சேமிக்கப்பட்ட  PDF கோப்புகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இமெயில் அனுப்பலாம். மற்ற அப்ளிகேஷ்னகளிலும் (Use them Other applications) பயன்படுத்த முடியும்.

Android Smartphone, Tablet PC போன்ற ஸ்மார்ட் போன் சாதனங்களுக்காகவே உருவாக்கப்பட்ட இச்சிறந்த மென்பொருள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இம்மென்பொருளை தரவிறக்கம் செய்யவும், மேலும் அதிக விபரங்களைப் பெறவும் கீழிருக்கும் சுட்டியை அழுத்தவும்.

Download Sonic PDF Creator for Smart Phones

Sonic PDF Creator is a application to create PDF files. It is for tablets, smartphones and android Mobile. It is lightweight mobile PDF solution that provides accurate and high quality conversions on the go.

Instantly create PDF files from Microsoft Office documents right from Your Android phone in just to simple taps. 
thanks & source: https://play.google.com

நன்றி:

Tags: PDF creator, PDF Creator for Smatphones, PDF maker for computer, PDF creator for Tablet PC, PDF maker for all type of

– சுப்புடு
RELATED ARTICLES

Most Popular

Recent Comments