Tuesday, December 24, 2024
HomeFree softwareமென்பொருளை முழுவதுமாக Uninstall செய்வது எப்படி?

மென்பொருளை முழுவதுமாக Uninstall செய்வது எப்படி?

மென்பொருளை முழுவதுமாக Uninstall செய்வது எப்படி?

மென்பொருளை அண் இன்ஸ்டால் செய்வது எப்படி என்பது கூட தெரியாதா என்ன? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

complete uninstall software

ஆனால் வழக்கமான முறையில் Control Panel =>Add or Remove Program சென்று Uninstall செய்யும்பொழுது நீக்கப்பட வேண்டிய மென்பொருளின் கோப்புகள் அனைத்தும் கணினியை விட்டு நீங்காது.

அதாவது அந்த Program -ன் ஒரு சில கோப்புறைகள் (folder), ரெஜிஸ்ட்ரி வேல்யூ (Registry Value) போன்றவைகள் கணினியில் தங்கிவிடும்.

இதுபோன்ற கோப்புறைகளையும், ரெஜிஸ்ட்ரி வேல்யூக்களையும் சரியாக கண்டறிந்து அழிப்பது என்பது சற்று சிரமமான காரியம்.

இத்தகைய செயல்களை எளிமையாக செய்யவும், தேவையில்லாத மென்பொருளை கணினியிலிருந்து முழுமையாக நீக்கவும், இணையத்தில் பல்வேறு software uninstal Program கள் கிடைக்கின்றன.

அவற்றில் நான் பயன்படுத்திப் பார்த்து, மிகவும் சிறப்பாக மென்பொருள்களை முழுமையாக நீக்கி கொடுத்தது Total Uninstaller என்ற மென்பொருள்.

Total Uninstaller மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியவுடன், அதில் கணினியில் உள்ள அனைத்து மென்பொருள்களையும் பார்க்கலாம்.
தேவையில்லாத மென்பொருளை அன்இன்ஸ்டால் செய்ய மென்பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
தேர்ந்தெடுத்தவுடன் அனலைஸ் (Analyses) நடக்கும்.
பிறகு மேலிருக்கும் Uninstall பட்டனை அழுத்த, நீக்க வேண்டிய மென்பொருள் முழுமையாக அன்இன்ஸ்டால் ஆகியிருக்கும்.

Total Uninstaller மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி: Download : for complete uninstall software

முக்கிய குறிப்பு: 

  • ஒரு மென்பொருளை நீக்கும்பொழுது தானாக total uninstaller மென்பொருள் உங்களுடைய கணினியில் Restore Poin – ஐ உருவாக்கிவிடும். இதனால் உங்களுக்குத் தேவையான நேரத்தில் ரீஸ்டோர் பாய்ண்ட்டைப் பயன்படுத்தி மீண்டும் கணினியை பழைய நிலைக்கே கொண்டு வரலாம். 
  • மென்பொருளுடன் தொடர்புடைய அத்தனை கோப்புகளையும், கோப்புறைகளையும் கணினியிலிருந்து முழுமையாக நீக்குவதால், கணினி விரைவாக செயல்படும். 

இம்மென்பொருளைப் பயன்படுத்தி எப்படி ஒரு மென்பொருளை அன் இன்ஸ்டால் (நீக்கம் செய்வது) என்பதை தெளிவாக வீடியோவில் காட்டியிருக்கிறார்கள். மென்பொருளை நீக்குவது குறித்த சந்தேகம் இருப்பின் வீடியோவில் விளக்கமாக தெரிந்துகொள்ளலாம். நன்றி.

    RELATED ARTICLES

    Most Popular

    Recent Comments