Wednesday, January 22, 2025
HomeAndroidஉங்கள் ஆண்ட்ராய்ட் போனை வெப்கேம் ஆக மாற்றும் மென்பொருள் use android camera to...

உங்கள் ஆண்ட்ராய்ட் போனை வெப்கேம் ஆக மாற்றும் மென்பொருள் use android camera to computer as webcam for video chating

வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் போனில் கேமரா இருக்கும். அதில் வீடியோ அல்லது படங்கள் எடுத்து ஆண்ட்ராய்ட் போனில் சேமிப்பது வழக்கம். அல்லது எடுத்த வீடியோக்களை படங்களை நண்பர்களுக்கு Share செய்வது, இணையத்தில் சமூக தளங்களில் பகிர்வது போன்ற வேலைகளைச் செய்வீர்கள். 
se android camera to computer as webcam for video chating
ஆனால் அதே ஆண்ட்ரோய்ட் மொபைலில் உள்ள கேமிராவை (Android Mobile Camera) உங்கள் கணினிக்கான வெப்கேமிராவாகவும் பயன்படுத்த முடியும். இது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.

 சரி.. ஆண்ட்ராய்ட் போனில் உள்ள கேமிராவை கணினியின் வெப் கேம் (Webcam) ஆக பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம். 
Android Phone Camera – வை வெப்கேமிராவாக மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது. அதன் பெயர் IP WEBCAM  என்பதாகும். 
இந்த மென்பொருளைத் தரவிறக்கி பயன்படுத்துவதன் மூலம், பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் போன்ற சமூக தளங்களில் நண்பர்களுடன் வீடியோ அரட்டை அடிக்கலாம். நேரடியாக வீடியோவை ஒளிபரப்புச் செய்யலாம். 
ரிமோட் முறையில் செயல்படுவதால் மொபைல் கேமிராவை கண்காணிப்பு கேமிராவாகவும் பயன்படுத்த முடியும். 

மென்பொருளை பயன்படுத்தும் முறை: 
  • மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். (Download and Install)
  • நிறுவல் முடிந்ததும், கீழே உள்ள ஸ்டார்ட் சர்வர் (Start Server) என்பதை கிளிக் செய்யவும். 
  • இப்பொழுது ஆண்ட்ராய்ட் கேமிரா திறந்துகொள்ளும். 
  • அதில் கீழாக ஐ.பி அட்ரஸ் ஒன்றை காட்டும். 
  • அந்த ஐ.பி. அட்ராஸை காப்பி செய்துகொண்டு, உங்களுடைய கணினியில் உள்ள வலை உலவியில் அட்ரஸ்பாரில் (Browser Adressbar) பேஸ்ட் செய்து என்டர் தட்டுங்கள். 
அவ்வளவுதான். உங்கள் கணினிக்கு வெப்காம் தயாராகிவிட்டது. 
இனி நீங்கள் வழக்கம்போல சமூக வலைத்தளங்கள் மூலம் வீடியோ சாட்டிங்கை ஆரம்பித்துவிடலாம். உங்களுடைய நண்பர்கள் உங்களை கேமாராவின் வழியாக கண்டு மகிழ்ச்சியாக அரட்டை அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 
இனி உங்கள் கணினியில் வெப்கேம் இல்லை என்ற கவலையே உங்களுக்குத் தேவையில்லை. இது ரிமோட் முறையில் செயல்படுவதால் கணினிக்கும், ஆண்ட்ராய்ட் மொபைலுக்கும் எந்த ஒரு இணைப்பு ஒயரையும் நீங்கள் இணைக்கத் தேவையில்லை. நன்றி நண்பர்களே..!
குறிப்பு: உங்களுடைய வீடியோ கணினி திரையில் தெரிய வேண்டுமென்றால் அதற்கும் ஆப்சன் உண்டு. இறுதியில் இருக்கும் Use Javascript to Update Frame in Browsers என்பதைச் சொடுக்கி கணினியில் வீடியோ திரையைக் கொண்டு வர முடியும்.
இப்பயன்மிக்க மென்பொருளை தரவிறக்கம் செய்ய : Download IP WEBCAM
நன்றி. 
 – சுப்புடு
RELATED ARTICLES

Most Popular

Recent Comments