Friday, September 20, 2024
Homecomputer tipsலேப்டாப் திரையை அணைத்திட உதவும் மென்பொருள் !

லேப்டாப் திரையை அணைத்திட உதவும் மென்பொருள் !

டெஸ்க்டாப் என அழைக்கப்படும் மேசைக்கணினியில் திரையை அணைப்பதற்கு என தனியாக ஸ்விட்ச் (Switch) கொடுக்கப்பட்டிருக்கும். தேவையில்லாத நேரங்களில் தனியாக ஸ்கிரீனை மட்டும் ஆப் செய்திட முடியும்.

ஆனால் லேப்டாப், நோட்புக் போன்ற கணினிகளில் அதுபோன்று தனியாக திரையை மட்டும் அணைத்திட பட்டன் ஏதும் இருப்பதில்லை. அவ்வாறு இல்லாதால் லேட்டாப் திரையை அணைக்க உருவாக்கப்பட்டவை தான் LCD Screen Turn Off Tools. தேவையற்ற நேரங்களில் லேப்டாப் திரையை நாமாக அதுபோன்ற டூல்களைப் பயன்படுத்தி அனைத்திட முடியும்.

இதனால் தேவையற்ற நேரத்தில் கணினி திரை இயங்குவதை தடுத்து, குறிப்பிட்டளவு மின்சக்தியையும் சேமித்திடலாம்.

Turn Off LCD என்ற இந்த டூல் HP Laptop களில் சிறப்பாக செயல்படுகிறது. இதை  Taimur Asad என்பவர் தான் பயன்படுத்தி HP Lap ல் திரையை அடிக்கடி அணைத்திட வேண்டியிருப்பதால் அதற்கென இந்த டூலை உருவாக்கினார். இந்த டூலைப் பயன்படுத்தி ஒரே கிளிக்கில் LCD Screen -ஐ OFF செய்திடலாம்.

Download Link : Turn Off LCD

விண்டோஸ் இயங்குதளத்திலேயே திரை தானாக அணைந்திட வசதி கொடுகப்பட்டுள்ளது. அப்படி இருக்க, இந்த டூல் எதற்காக பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழலாம். உண்மைதான். விண்டோசில் குறிப்பிட்ட நேரத்திற்கு கணினி செயலற்று இருந்தால் கணினி திரை அணைந்து போகும்படி வைத்திடலாம். இது தொடர்ச்சியாக கணினி திரையில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இடையூறாக இருக்கும். 5 நிமிடத்திற்கு ஒரு முறை கணினி திரை ஒளிர்வதை நிறுத்தம்படி நேரம் அமைக்கப்பட்டிருந்தால், எந்த அசைவும் இல்லாதபோது தானாகவே 5 நிமிடத்திற்கு பிறகு கணினித்திரை Turn Off ஆகிவிடும்.

இதைத் தவிர்த்திடவும், விரும்பிய நேரத்தில் கணினித் திரையை அனைத்திடவும் இதுபோன்ற டூல்களின் தேவை அவசியமாகிறது.

லேப்டாப்/நோட்புக் கணினி திரையை அணைத்திட உதவும்  டூல்கள் சில :

6. NirCmd
மேற்கண்ட யாவும் மடிக்கணினி திரைகளை அணைத்திட உதவுபவை. நீங்கள் விரும்பிய Tool – நீங்கள் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். 
Tags: Laptop, Tab, Notebook, Monitor, LCD Screen, Monitor Off Tool.
RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments