Monday, December 23, 2024
HomeFree Photo Editing Softwareஇலவச போட்டோ எடிட்டர் மென்பொருள் PhoXo

இலவச போட்டோ எடிட்டர் மென்பொருள் PhoXo

போட்டோ எடுப்பது ஒரு கலை. ஆங்கிலத்தில் அதை Photography என குறிப்பிடுகிறார்கள். போட்டோ கிராபி தெரியாதவர்கள் கூட ஒரு அழகான படத்தை உருவாக்க முடியும். அதற்குப் பயன்படுவதுதான் போட்டோ டிசைன் – எடிட் மென்பொருள்.

அதுபோன்றதொரு “போட்டோ எடிட்டிங்” மென்பொருள் PhoXo. இதை ஒரு “மினி போட்டோஷாப்” என்று கூட சொல்லலாம். அதிலுள்ள வசதிகள் அப்படி.

photo editing software - phoxo
போட்டோ எடிட் செய்ய பயன்படும் மென்பொருள்
Phoxo மென்பொருளில் உள்ள வசதிகள் – சிறப்பம்சங்கள் : 

1. Tiny – மிகச்சிறியது

அளவில் மிகச்சிறிய மென்பொருள் இது. 4 எம்.பி. மட்டுமே உள்ள இம்மென்பொருள் மெமரியில் குறைந்த அளவே (Very small usage memory) எடுத்துக்கொள்கிறது.  

2. Online Clip-Art – ஆன்லைன் கிளிப் ஆர்ட்
இணையத்தில் ஆயிரக்கணக்கான clip-art, frame, texture, stamp, brush style ஆகியவைகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
3. Text Effect – டெக்ஸ் எஃபக்ட்
Shadow text, Gragient Text, Glass text, Scanline Text, Blur Text, Water ripple Text என்பன போன்ற எழுத்துக்களுக்கான எஃபக்ட்களைக் கொடுக்கலாம்.
4. Layer – லேயர்
எளிய முறையில் லேயர்களைப் பயன்படுத்தும் வசதி. drog and drop முறையில் ஒன்றிலிருந்து மற்றொரு இடத்தில் லேயர்களை மாற்றும் வசதி.
5. Brush Pen – பிரஸ் பென்
brush, pen, eraser போன்ற டூல்களைப் பயன்படுத்தி எளிதாக பெயிண்டிங் செய்யும் வசதி.
6. Free, Open Source – இலவசம்
முற்றிலும் இலவசம். திறமூல மென்பொருள் ஆகையால் யார்வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்தலாம்.
7. Fast- வேகம்
நோட்புக் கம்ப்யூட்டர்களில் கூட மிக வேகமாக இயங்ககூடியது. விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைப்பட்டிருக்கும் மிகச்சிறந்த மென்பொருள் இது.

8. Easy to Use – பயன்படுத்த எளிதானது

பயன்படுத்த மிக எளிது. ஒவ்வொரு டூலையும் பயன்படுத்துவற்கு அதிலேயே குறிப்புகள் (help tips) உள்ளதால் கற்றுக்கொள்வது எளிது. 
மென்பொருளினுடைய தளத்தில் கற்றுக்கொள்வதற்கான மிகச்சிறந்த வழிமுறைகள் அடங்கிய டுடோரியல்கள் உள்ளன.
9. Creative and Effect – கிரியேட்டிவ் & எஃபக்ட்ஸ்…

ஐம்பதற்கும் அதிகமான எஃபக்ட்களை கொடுக்க முடியும். ஆயில் பெயிண்டிங், மொசைக், பென்சில் ஸ்கெட்ச், சாப்ட் எட்ஜ், ஸ்பிளாஸ், எம்போஸ் மேலதிக வசதிகள்.

10. Selection – தேர்ந்தெடுத்தல்

செலக்ஷன் டூலில் போட்டோஷாப் மென்பொருளில் உள்ளது போல marquee, lasso, magic wand tools உண்டு. இவைகள் படங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து வேலை செய்ய உதவும்.

11. Photo Enhancement – போட்டோ என்கேன்ஸ்மெண்ட்:

ரெட்-ஐ ரீமூவல் (red-eye removal, குளோ(glow), சேபியா(sepia) ஆகிய கருவிகள் ரீடச்சிங்(Retouching), கரெக்டிங்(Correcting), டிஜிட்டல் போட்டோவை இம்ப்ரூவ் செய்தல் (Digital Photos improve) ஆகியவை மேற்கொள்ளலாம்.

12. support multiple language – பலமொழிகள் ஆதரிப்பு:

இம்மென்பொருள் இங்கிலீஸ், சைனீஸ், ஸ்பானிஸ், ஜெர்மன் உட்பட மொத்தம் பதினொரு மொழிகளை ஆதரிக்கிறது.

மேலதிக வசதிகள் தேவைப்பட்டால் நீங்கள் இணையத்தின் மூலம் கிடைக்கும் tools களை தரவிறக்கி இம்மென்பொருளில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Phoxo டவுன்லோட் செய்ய சுட்டி :

தமிழில் போட்டோஷாப் அடிப்படைப் பாடங்களை கற்றுக்கொள்ள கிளிக் செய்யவும்.

One of the Free and Powerful image editing software is Phoxo. It is tiny fast, easy to use. It treated as a mini Photoshop.  I like this software to editing Photos, images, art gallery photos. It has many powerful tools to editing photos. 
Features of Phoxo photo editing software 
1. Layers 
2. Undo 
3. 50 special effects
4. Batch processing 
5. Selecting tools
6. Crop tools 
7. Painting tools
8. Retouching tools 
9. Measuring tools 
10. Navigation tools. 
In addition, we can easily add text effects to image like shadow text effects, gradient color text effect and more. 
This software web site provides including large member of resources, systematic tutorials, thousands of free clip-arts, frame patter, textures and shapes and more. 
You can download this software above the download link. In addition, use it to work on images, photos.
RELATED ARTICLES

3 COMMENTS

  1. ப்ளீஸ் விண்டோஸ் 7 க்கு சப்போர்ட் டாக்குமென்ட் போடுங்க. எனக்கு டோவ்ன்லோர்ட் aakuthila

  2. ப்ளீஸ் விண்டோஸ் 7 க்கு சப்போர்ட் டாக்குமென்ட் போடுங்க. எனக்கு டோவ்ன்லோர்ட் aakuthila

  3. ப்ளீஸ் விண்டோஸ் 7 க்கு சப்போர்ட் டாக்குமென்ட் போடுங்க. எனக்கு டோவ்ன்லோர்ட் aakuthila

Comments are closed.

Most Popular

Recent Comments