Wednesday, January 22, 2025
HomeFree softwareஎம்.எஸ். ஆபிசிற்கு மாற்றீடு kingsoft office suite இலவச மென்பொருள்

எம்.எஸ். ஆபிசிற்கு மாற்றீடு kingsoft office suite இலவச மென்பொருள்

வணக்கம் நண்பர்களே..!
பெரும்பாலும் கணினி பயன்படுத்துவர்கள் மைக்ரோசாப்டின் MS-Office மென்பொருள்களையேப் பயன்படுத்துவார்கள். எம்.எஸ். ஆபிசில், எம்.எஸ். வேர்ட், எம்.எஸ்.எக்செல், எம்.எஸ்.பவர்பாய்ண்ட் என பல பயன்மிக்க பயன்பாடுகள் உள்ளன. 
மைக்ரோசாப்ட் ஆபிஸ் எம்.எஸ். ஆபிசைப் (MS-Office) பயன்படுத்துவதெனில், உண்மையான மைக்ரோசாப்ட் இயங்குதளத்தைப் (WINDOWS) பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான கணினிகளில் உண்மையான விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவது கிடையாது.

காரணம் அதிக விலைகொடுத்து Microsoft Office software – வாங்க யாரும் முன்வருதில்லை. பணம் கொடுத்து வாங்குவதைக் காட்டிலும் கிராக் செய்யப்பட்ட ஆபிஸ் மென்பொருளிலும் அதே வசதியைப் பயன்படுத்த முடியும் என்பதால்தான். ஆனால் இவ்வாறு பயன்படுத்துவது கணினி பாதுகாப்புக்கு உகந்ததல்ல.. 

கிராக் செய்யப்பட்ட இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு மைக்ரோசாப்டின் அப்டேட்ஸ் கிடைப்பதில்லை. மேலும் இணையத்தில் உலவும்போது இதுபோன்ற கிராக் செய்யப்பட்ட மென்பொருள்களைப் (இயங்குதளத்தை-Operating system) பயன்படுத்தும் கணினிகளுக்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் நச்சு நிரல்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

இதுபோன்ற நிறைய பிரச்னைகளை கணினி பயனாளர்கள் எதிர்கொள்ள நேரிடும். 

பணம் கொடுத்து வாங்கவும் கூடாது.. அதே சமயத்தில் ஒரிஜினல் மென்பொருளும் வேண்டும். இதற்கு என்னதான் தீர்வு என்று யோசித்ததில் கிடைத்த விடைதான் கிங்சாப்ட் ஆபிஸ் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள். 
கிங்சாப்ட் ஆப்ஸ் மென்பொருளின் சிறப்புகள்: 
ஏறக்குறைய மைக்ரோசாப்ட் MS-Office -ல் இருக்கும் அனைத்து வசதிகளுமே இதில் உள்ளன. பவர்பாய்ண்ட், வேர்ட், எக்செல் என அனைத்து வேலைகளையும் இந்த ஓப்பன் சோர்ஸ் மென்பொருளான கிங்சாப்ட் ஆபிசிலும் பயன்படுத்த முடியும். 
இதிலுள்ள முக்கியமான வசதிகள்: 
 (Special Features of King soft Office )

  • Paragraph Adjustment, Multiple Document Tabs, Humanized Table Operation, Built in office to PDF Convertor,  Automatic Spell check, Small Data package, Document Encryption, Share Files via Email ஆகிய வசதிகளைப் பெற முடியும். 
  •  மைக்ரோசாப்ட் எம்.எஸ்.ஆபிஸ் 2010 உருவாக்கப்பட்ட ஆபீஸ் கோப்புகளை இம்மென்பொருளில் திறந்து பணியாற்ற முடியும். 
  • கோப்புகளை PDF கோப்புகளாக மாற்றும் வசதி..
  • Tab வசதி உண்டு. இதன் மூலம் எளிதாக ஒரு கோப்பிலிருந்து மற்றொரு கோப்பிற்கு மாறலாம்.
  • 70 எம்பி அளவு கொண்ட இந்த மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் 256 எம்பி அளவு கொண்ட RAM இருந்தாலே போதுமானது.
முற்றிலும் இலவசமான இந்த கிங்சாப்ட் ஆபிஸ் மென்பொருளைத் தரவிறக்கம் செய்யவும், மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் செல்ல வேண்டிய தளத்திற்கான  சுட்டி: Download kingSoft office open source software


KingSoft Office Suite is free software like ms-office. it is a open source software. It comes with many innovative features like paragraph adjustment too, multiple tabbed feature, office to PDF converter, automatic spell checking and it has a spell checking, word count features also. 
This Open source office software has new features such as watermark in document, converting PowerPoint to word documents.
You can download this free open source office software. 
நன்றி!
– சுப்புடு
RELATED ARTICLES

Most Popular

Recent Comments