Wednesday, January 22, 2025
HomeAndroidஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய

 youtubemate video downloader for android mobile

ஆண்ட்ராய்ட் வகை மொபைல்களின் மூலம் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய டியூப்மேட் என்ற மென்பொருள் பயன்படுகிறது.

வழக்கமாக நாம் பார்க்கும் யூடியூப் வீடியோக்களை நமது ஆண்ட்ராய்ட் மொபைல்களில் டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டால் இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் அவற்றை பார்த்து மகிழலாம். அதற்குத் துணை செய்கிறது இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன்.

இந்த மென்பொருளை கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் கிடைக்காது. எனினும் வேற ஒரு தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறிய மாற்றத்தை (Settings changes)செய்ய வேண்டும். அதாவது,
  • உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் Menu==>Setting==>Application செல்லவும்.
  • அதிலுள்ள Unknows sources என்பதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். அடுத்து உறுதி செய்ய ஓ.கே அழுத்துங்கள். செட்டிங்ஸ் முடிந்தது.  இனி நீங்கள் youtubemate மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய வேண்டியதுதான்.
  • உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் இன்டர்நெட்  திறந்து கூகிள் முகப்பு பக்கம் வரவும். அதில் m.tubemate.net என்ற url – உள்ளீடு செய்து அந்த தளத்தை திறந்துகொள்ளுங்கள். 
  • அதில் முதலாவதாக உள்ள Download (Android freeware) என்ற மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். (தற்பொழுது அந்த இணைப்பு வேறொரு தளத்திற்கு Redirect ஆகிறது. அத்தளத்தில் உள்ள INSTALL APP என்பதை கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.)

YOUTUBMATE மென்பொருளின் சிறப்புகள்: 

  • இந்த மென்பொருள் மூலம் நீங்கள் விரும்பிய அளவுகளில், விரும்பிய தரத்தில் வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம். 
  • வேண்டிய பார்மட்டில் பார்க்கும் வசதி. 
  • வேண்டிய அளவுகளில் பார்க்கும் வசதி. 
  • பாடல்களை மட்டும் கேட்கும் வசதி.
  • படங்களை மட்டும் பார்க்கும் வசதி. 
  • MP3 ஆக டவுன்லோட் செய்யும் வசதி. 
  • MP3 ஆக Convert செய்யும் வசதி. 
போன்ற பல வசதிகளை இம்மென்பொருள் அளிக்கிறது. 
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய இணைப்புச் சுட்டி: Download YOUTUBEMATE Application
முக்கிய குறிப்பு: இம்மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோக்களை தரவிறக்கம் செய்ய உங்களிடம் 3G வகை ஆண்ட்ராய்ட் போன், அதிக வேகம் உடைய இணைய இணைப்பு இரண்டும் கட்டாயம் தேவை. 
YouTubeMate is software for downloading YouTube videos. It enables you to quickly access, share, access, and download YOUTUBE Videos. Because downloading always happens in the background, you can go on watching YouTube, surfing the internet, tweeting, and listening to your music as you download. 
Features of YOUTUBEMATE YouTube video downloader
  • Fast download
  • Multiple download resolution option
  • Background, multi download
  • Resume download options
  • Convert to mp3 option
  • Playlist as video/audio options
  • YouTube search and related videos suggestions
  • Create play list, save favorite videos to your you tube account option and more..
நன்றி:
– சுப்புடு
RELATED ARTICLES

Most Popular

Recent Comments