வணக்கம் நண்பர்களே..! இன்றையப் பதிவில் ஸ்கேனர் என்றால் என்ன? அது எப்படி தொழிற்படுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
ஸ்கேனர் என்றால் என்ன?
(What is a scanner?)
ஸ்கேனர் என்பதை தமிழில் வருடுபொறி என்று கூறலாம். இது ஒரு தாளில் உள்ளதை அப்படியே படக்கோப்புவடிவமாக (Imaging Document) மாற்றி கணினியில் சேமிக்க உதவும் சாதனம் ஆகும்.
ஸ்கேனர் என்பதை தமிழில் வருடுபொறி என்று கூறலாம். இது ஒரு தாளில் உள்ளதை அப்படியே படக்கோப்புவடிவமாக (Imaging Document) மாற்றி கணினியில் சேமிக்க உதவும் சாதனம் ஆகும்.
ஸ்கேனரின் வகைகள்:(Types of scanner:)
நான்கு வகையான ஸ்கேனர்கள் உள்ளன.
1. ஃப்ளாட் வகை (Flat bed Scanners)
2. ஷீட் பெட் வகை (Sheet bed Scanners)
3. ட்ரம் வகை (Drum Scanner)
4. ஹேண்ட் ஹெல்ட் வகை (Hand Held Scanner)
1. ஃப்ளாட் வகை (Flat bed Scanners)
2. ஷீட் பெட் வகை (Sheet bed Scanners)
3. ட்ரம் வகை (Drum Scanner)
4. ஹேண்ட் ஹெல்ட் வகை (Hand Held Scanner)
1. ஃப்ளாட் வகை (Flat bed Scanners)
இந்த வகை ஸ்கேனர்கள் மிகப் பெரும்பாலானோரால் பயன்படுத்தக்கூடிய வகையாகும். தமிழில் இதை தட்டுப்படுகை வருடி(Flat bed Scanners) என அழைக்கலாம். இந்த ஸ்கேனரின் உள்ளே படத்தாள்களையோ அல்லது ஆவணத் தாள்களையோ செலுத்தி அந்த கோப்பு அல்லது தாளில் உள்ளதை அப்படியே கணினியில் சேமிக்கலாம். இது கிட்டதட்ட ஜெராக்ஸ் இயந்திரத்தைப் போன்று செயல்படும்.
2. ஷீட் பெட் வகை (Sheet bed Scanners)
இந்த வகை ஸ்கேனர் முன் குறிப்பிட்ட ப்ளாட் வகை ஸ்கேனரை போன்று தோற்றத்தில் இருப்பினும் இயங்கும் விதத்தில் முற்றிலும் வேறுபடுகிறது. இதில் ஸ்கேன் செய்யப்பட வேண்டிய தாள் நகர்ந்து வருவதன் மூலம் ஸ்கேன் செய்யப்படும். அதாவது ஸ்கேனரில் உள்ள Scanner Head ஒரே இடத்தில் நிலையாக இருக்கும். ஸ்கேன் செய்யப்பட வேண்டிய தாள் நகர்ந்து பிரிண்டரில் தாள் உள்ளே சென்று வெளியே வருவதைப் போன்று வரும்.
3. ட்ரம் வகை (Drum Scanner)
இந்த வகை ஸ்கேனரானது தெளிவான வரைபடங்கள், விரிவான படங்களை பதிவு செய்ய பயன்படுகிறது. இதை பிரிண்டிங் செய்யும் நிறுவனங்கள், பெரிய அச்சு நிறுவனங்கள் இவற்றைப் பயன்படுத்துகின்றன. இதில் photo multiplier tube எனும் தொழிற்நுட்பம் கையாளப்படுகிறது.
போட்டோ மல்டிபிள் டியூப் தொழிற்நுட்பத்தில் பதிவு செய்ய வேண்டிய ஆவணங்கள் அல்லது படங்கள் கண்ணாடி உருளையில் ஏற்றப்படுகிறது. அக்கண்ணாடி உருளையில் நடுவே சென்சார் (Sensor) பொருத்தப்பட்டிருக்கும். இந்த சென்சார் அந்த ஆவணத்தை உணர்ந்து ஆவணத்திலிருந்து வெளிப்படும் ஒளியை ஒளிக்கதிர்களாகப் பிரிக்கிறது. பிரிக்கப்படும் ஒளிக்கதிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிற வடிகட்டியின் மூலம் (color filter) மூலம் பிரிக்கப்பட்டு PMD -ல் செலுத்துகிறது. அங்கே அவைகள் Electrical Signal களாக மாற்றப்படுகின்றது.
படங்கள் அல்லது ஆவணங்களில் உள்ள எழுத்துகளை நன்கு ஆராய்ந்து அதில் உள்ளவற்றை அப்படியே படங்களாக சேமிக்கவும், எழுத்துக்களை உள்ளது உள்ளபடியே OCR பயன்பாட்டின் மூலம் எழுத்துக் கோப்பாக மாற்றுவதும் ஸ்கேனரின் முக்கியமான பணிகளாகும்.
4. ஹேண்ட் ஹெல்ட் வகை (Hand Held Scanner)
இந்த வகை ஸ்கேனர் சாதாரணமாக அலுவலகங்கள் பயன்படுத்தபடும் Flat bed Scanner வகையைப் போன்றே தொழிற்நுட்பத்தில் இயங்க கூடியது. இந்த ஸ்கேனரை எழுத்துகளின் மீது அல்லது ஆவணங்களின் மீது வைத்து தேவையானவற்றை நகல் எடுக்க முடியும். இதன் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட ஸ்கேனர் படங்கள் மிதமான தரத்திலேயே அமையும். எழுத்துக்களை விரைவாக பதிவு செய்வதற்கு இந்த வகை கையடக்க ஸ்கேனர்கள் பயன்படுகின்றன.
What is a scanner?
Scanner is a device for captures images from posters, document papers, new paper cuttings, photos, photographic prints and similar sources for computer editing and display.
Type of Scanners:
1. Hand held Scanner
2. Flat bed Scanner
3. Drum Scanner
4. Sheet bed Scanners
நன்றி.
– சுப்புடு