Sunday, January 26, 2025
HomeAndroidAndroid, iPhone, Windows 8 போனுக்கான Yahoo mail Application..!

Android, iPhone, Windows 8 போனுக்கான Yahoo mail Application..!

வணக்கம் நண்பர்களே..! 
தற்பொழுது நடந்து வரும் இணைய போட்டிகளில் பல இலவச அம்சங்களை, வசதிகளை அள்ளி வழங்குகிறது பல்வேறு இணைய நிறுவனங்கள். அவற்றில் முக்கியமானவை Google மற்றும் Yahoo நிறுவனங்கள். இவற்றிற்கு இடையே பல்வேறு ஒற்றுமைகள் காணப்பட்டாலும், அவற்றில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வசதிகளாக தேடு இயந்திரம் (Search Engine), மின்னஞ்சல் சேவைகளை (Email) முதன்மையான வசதிகளாக கூறலாம்.
yahoo mail apps for android
கூகிள் பல்வேறு வசதிகளை கூடுதலாக கொடுத்துக்கொண்டே இருப்பினும், தற்பொழுது யாஹூவும் தன்னுடைய பயனர்களுக்கென பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை மேன்படுத்தி வழங்கிக்கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் Mobile போன்களுக்கான Yahoo mail Application.
மின்னஞ்சலின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில் யாஹூவும் தன் பங்கிற்கு ஆண்ட்ராய், விண்டோஸ் 8, ஐஓஎஸ் (Email apps for Android, Windows8, iOS) போன்ற சாதனங்களுக்கான புதிய இமெயில் அப்ளிகேஷனை வழங்கியுள்ளது.
yahoo mail apps for iPad

யாஹூ நிறுவனத்தின் இப்புதிய மொபைல் அப்ளிகேஷன் முன்பைவிட அதிவேகமாக மின்னஞ்சலை பயனர்களின் கொண்டு சேர்க்கிறது. புதிய இமெயில் மொபைல் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் எந்த ஒரு மொபைலைப் பயன்படுத்தினாலும், (உதாரணமாக ஆண்ட்ராய்ட், விண்டோஸ் 8, ஐஓஎஸ்) உடனடியாக மின்னஞ்சலைப் பெற்றுக்கொள்ள முடியும். நினைத்த நேரத்தில் மின்னஞ்சலை அனுப்பி, தகவல்தொடர்புகளை மேன்படுத்திக்கொள்ள இயலும்.
இந்த அப்ளிகேஷன்களை நீங்கள் மூன்று வழிகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
1. யாஹூவின் App Store மூலம் தரவிறக்கிக்கொள்ள முடியும்.
2. விண்டோஸ் ஸ்டோர் மூலம் தரவிறக்கம்செய்து கொள்ள முடியும்.
3. கூகிள் கூகிள் ப்ளே ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இனி உங்களுடைய கையடக்க தொலைப்பேசிகளில் யாஹூ மின்னஞ்சலை எளிமையாகப் பெற்று மகிழுங்கள்..!
நன்றி நண்பர்களே..!
– சுப்புடு
RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments