Monday, December 23, 2024
Homefile repair softwareபழுதடைந்த கோப்புகளை (Corrupted Files) சரிசெய்ய மென்பொருள்

பழுதடைந்த கோப்புகளை (Corrupted Files) சரிசெய்ய மென்பொருள்

Software for to repair corrupted files

நீங்கள் உங்களுடைய கணினியில் சேமித்து வைத்திருக்கும் முக்கியமான கோப்புகள் சில நேரங்களில் பழுதடைந்து / சேதமடைந்து போக வாய்ப்புள்ளது. கணினியில் ஏற்படும் திடீர் பிரச்னைகளால் இதுபோன்று நடக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி என்னென்ன பிரச்னைகளால் கோப்புகள் பழுதடையும் வாய்ப்புகள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

file repair software
1. Network interruption என்ற சொல்லக்கூடிய வலைப்பின்னல் குறுக்கீடு, 
2.நெட்வொர்க்கை பகிரும்பொழுது (Network Sharing),  திடீர் என ஏற்படும் மின்தடை (Unexpected Power Failure),
3. அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்தல் (high power)
4. வைரஸ் பாதிப்பு (virus infection)

இதுபோன்ற காரணங்களினால் உங்களுடைய மிக முக்கியமான கோப்புகள் சேதமடைய வாய்ப்புள்ளது. இவ்வாறு கரப்ட் ஆன கோப்புகளை மீட்டு, மீண்டும் பழைய நிலைக்கு, கோப்புகளை சரிசெய்து மீட்டுக்கொடுக்கிறது ஒரு மென்பொருள்.
மென்பொருளின் பெயர் : பைல் ரிப்பேர் ( File Repair)
இம் மென்பொருளைப் பயன்படுத்தி என்னென்ன வகை கோப்புகளை ரிப்பேர் செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
  • சேதமடைந்த வேர்ட் டாக்குமெண்ட் கோப்புகளை சரி செய்யலாம்.
  • corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)
  • சேதமடைந்த எக்சல் கோப்புகளை சரி செய்யலாம்.
  • corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
  • சேதமடைந்த ஜிப், ரார் வகை கோப்புகளை சரிசெய்யலாம்.
  • corrupted Zip or RAR archives (.zip, .rar)
  • சேதமடைந்த படக்கோப்புகளை சரி செய்யலாம்.
  • corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
  • சேதமடைந்த வீடியோ கோப்புகளை சரி செய்யலாம்.
  • corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
  • சேதமடைந்த பி.டி.எப். கோப்புகளை சரி செய்யலாம்.
  • corrupted PDF documents (.pdf)
  • சேதமடைந்த டேட்டாபேஸ் கோப்புகளை சரி செய்யலாம்.
  • corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
  • சேதமடைந்த பவர்பாய்ண்ட் கோப்புகளை சரிசெய்யலாம்.
  • corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
  • சேதமடைந்த இசைக் கோப்புகளை சரி செய்யலாம்.
  • corrupted music (.mp3, .wav)
இதுபோன்ற கோப்புகளில் உங்களுக்கு இவ்வாறான பிழைச் செய்திகள் (Error) தோன்றலாம்.. அப்படி தோன்றினால் உங்களுடைய கோப்புகள் கரப்ட் ஆகிவிட்டது என்று பொருள். 
  • File is not in a recognizable format
  • Unable to read file
  • File cannot be accessed
  • Application cannot open the type of file represented by filename
  • Out of memory errors, or low system resources errors
இவ்வாறான பிழைச் செய்திகளை தோன்றினால் நிச்சயம் உங்களுடைய கோப்புகள் பழுதடைந்துவிட்டது (corrupted) என்று பொருள். அவ்வாறு பழுதடைந்து கோப்புகளை இம்மென்பொருளைப் பயன்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கே மீட்டுக் கொண்டு வரமுடியும். 
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி: Download File Repair software
நன்றி.
-சுப்புடு
RELATED ARTICLES

Most Popular

Recent Comments