Wednesday, January 22, 2025
HomeFree softwareவெற்றுப் போல்டர்களை அழிக்க மென்பொருள்

வெற்றுப் போல்டர்களை அழிக்க மென்பொருள்

தொடர்ந்து பல வருடமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணினியில் பல்வேறு Empty Folder களை உருவாகி இருக்கும். வெற்றுப் போல்டர்கள் கணினியில் இரண்டு விதத்தில் உருவாக வாய்ப்பு உண்டு. ஒன்று நாமாகவே உருவாக்குவது. மற்றொன்று தேவையில்லாத மென்பொருளை கணினியிலிருந்து நீக்கும்போது அம்மென்பொருள் தொடர்புடைய காலியான போல்டர்கள் கணினியிலிருந்து நீங்காமல் அப்படியே இருப்பது.

அவ்வாறு உருவான போல்டர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் அவற்றை கவனிக்காமல் விட்டுவிடுவோம்.. இதுவே சில வருடங்களில் இவ்வாறு உருவான வெற்றுப் போல்டர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். ஒன்றிரண்டு போல்டர்கள் எனில் அவற்றைத் தேடி அழித்துவிடலாம். அதுவே நூறு, நூற்றைம்பது என எண்ணிக்கையில் அதிகமானால் அவற்றை அனைத்தையுமே தேடி அழிப்பது என்பது முடியாத செயல். 

empty folder removing software

பிரச்னை என்னவெனில் இதுபோன்று கணனியில் உருவான வெற்றுப் போல்டர்கள் கண்டுபிடித்து அழிப்பதுதான்.

இந்த சிக்கலை தீர்க்க உதவுகிறது ஒரு அருமையான மென்பொருள்:

  • Remove Empty Directories என்ற இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது. 
  • இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். 
  • பிறகு மென்பொருளை இயக்கி Scan Drive என்பதைச் சொடுக்கவும். 
  • பிறகு டிரைவில் உள்ள வெற்றுப் போல்டர்களை பட்டியலிட்டுக் காட்டும். 
  • அவற்றை Delete கொடுத்து நீக்கி விடலாம். 
  • அழிக்கப்பட்ட வெற்றுப் போல்டர்கள் ரீசைக்கிள் பின்னிற்கு செல்லும். 
  • அங்கிருந்து Empty Recycle bin கொடுத்து கணினியிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிடலாம். 
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய: Download empty folder removing software
முக்கிய குறிப்பு: இந்த மென்பொருளைப் பயன்படுத்தும்பொழுது குறிப்பாக ‘சி’  டிரைவிலிருக்கும் போல்டர்களைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் கணினியை இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் கோப்புகளும் கோப்புறைகளும் அதில் இருப்பதால் அவற்றைத் தேர்ந்தெடுக்காமல் மற்ற டிரைவ்களிலிருக்கும் வெற்றுக் கோப்புகளை அழிக்க இம்மென்பொருளைப் பயன்படுத்தலாம். 
Remove Empty Directories is a freeware tool to batch delete empty folders. it is a small and simple tool that searches and deletes empty directories recursively below a given start folder.
Features of Remove Empty Directories tool:
can detect directories with empty files at empty
shows empty directories before deleting them
support multiple delete modes
allows white and black listing of directories by using filter lists
RELATED ARTICLES

Most Popular

Recent Comments