Tuesday, December 24, 2024
Homeaudio recording softwareஸ்ட்ரீமிங் வெப்சைட்டிலிருந்து ஆடியோ ரெக்கார்ட் செய்திட மென்பொருள்

ஸ்ட்ரீமிங் வெப்சைட்டிலிருந்து ஆடியோ ரெக்கார்ட் செய்திட மென்பொருள்

FM Radio Website, Google Music போன்ற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் பாடல்களை கேட்க மட்டுமே முடியும். அதில் Play ஆகும் பாடல்கள் (Songs) நாம் விரும்பினாலும், அதைத் தரவிறக்கம் செய்ய முடியாது. 
அதுபோன்று உள்ள Streaming தளத்திலிருந்து பாடல்களைக் கேட்கும்பொழுது, அவற்றை ஒரு தொகுப்பாக டவுன்லோட் செய்து மீண்டும், விரும்புபோது கேட்டு மகிழலாம்.

software for audio recording

audio recording from streaming website


ஒருமுறைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் மீண்டும் ஆன்லைனில் சென்று அதைக் கேட்கத் தேவையில்லை. ஆப்லைனிலேயே அந்த பாடல்களை உங்கள் கணினியின் மூலம் கேட்டு மகிழலாம். 

இதுபோன்று ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து ஆடியோக்களை ரெக்கார்ட் செய்ய மென்பொருளின் பெயர் AD Sound Recorder
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எந்த வகையான ஸ்டீரீமிங் வெப்சைட்களிலிருந்தும் ஆடியோ ரெக்கார்ட் செய்து அவற்றை கணினியில் சேமித்து மகிழலாம். 
AD Sound Recorder மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய இணைப்புச் சுட்டி: Download AD Sound Recorder

மென்பொருளைப் பயன்படுத்தும் விதம்: 

மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவவும். (Download and Install )
மென்பொருளை செயற்படுத்தவும். (Open AD Sound Recorder)
ஸ்ட்ரீமிங் சைட்டிலிருந்து ஆடியோவை பதிவு செய்வதற்கு முன்பு ஒரு சில செட்டிங்குகளை முன்பே செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் செட்டிங்ஸ்கள் உங்களுடைய ஆடியோவை தரமானதாக மாற்றும். 

செட்டிங் செய்யும் முறை: 

  • வலது மேல் மூலையில் உள்ள “F” பட்டனை கிளிக் செய்யவும். 
  • ஆடியோ எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • ஓ.கே கொடுக்கவும்.
  • “F” பட்டனுக்கு அருகில் உள்ள “S” என்ற பட்டனை அழுத்தி உங்களுக்கு வேண்டிய ஆடியோ பார்மட்டை தேர்ந்தெடுத்து ஓ.கே கொடுக்கவும். இதில் Default ஆக .mp3 ஆடியோ பார்மட் இருக்கும். (செட்டிங்ஸ் முடிந்தது.)

மென்பொருளைப் பயன்படுத்தி ரெக்கார் செய்யும் முறை: 

  • இப்பொழுது மென்பொருளை மூடி, மீண்டும் திறந்துகொள்ளுங்கள். (Restart software)
  • இப்பொழுது உங்களுடைய மென்பொருள் ஸ்டீரீமிங் சைட் () Play ஆகும் ஆடியோக்களை ரெக்கார்ட் செய்ய முடியும். 
  • உங்களுக்குப் பிடித்த ஸ்ட்ரீமிங் (FM radio website) வெப்சைட்டைத் திறந்துகொள்ளுங்கள். அதில் பாடல் ஒலிப்பரப்பாகும். 
  • ஒலிப்பரப்பாகும் பாடலை ரெக்கார்ட் செய்ய AD Recording மென்பொருளில் உள்ள “Record” பட்டனை அழுத்துங்கள். 
  • இப்போது பாடல் ரெக்கார்ட் ஆகும். தேவையான பாடல்கள் ரெக்கார் ஆனவுடன் Stop அழுத்துவதன் மூலம் நிறுத்திவிடலாம். இவ்வாறு ரெக்கார்ட் ஆன பாடல்கள் நீங்கள் ஏற்கனவே செட்டிங்ஸ்சில் தேர்ந்தெடுத்த போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும். 

இனி நீங்கள் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலேயே அந்தப் பாடல்களை கேட்டு மகிழலாம். (You can listen Audio from computer)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments