Wednesday, January 22, 2025
HomeAndroidவிண்டோஸ் 8, ஆண்ட்ராய்ட், ஆப்பிள் - எது ஜெயிக்கும்?

விண்டோஸ் 8, ஆண்ட்ராய்ட், ஆப்பிள் – எது ஜெயிக்கும்?

ஆன்ட்ராய்ட்.. இதுதான் தற்போதைய ஸ்மார்ட்போன்களில் அதிகம் இடம் பிடித்திருக்கும் Smartphone OS. ஆண்ட்ராய்ட் என்றால் என்ன? இது எப்படி ஸ்மார்ட் போன்களில் வேலை செய்கிறது? என்ற பதிவில் மேலும் ஆண்ட்ராய்ட் குறித்த தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இதில் ஆண்ட்ராய்ட் மற்றும் அது செயல்படும் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன். 
சிறந்த வசதிகளை உடைய விண்டோஸ் 8 ஐ ஓவர் டேக் செய்து தற்பொழுது தன்னை நிலைநாட்டிக்கொண்டுள்ளது ஆண்ட்ராய்ட் சிஸ்டம் (Android System). காரணம் கூகிள்தான்.. இது கூகிளின் தயாரிப்பு என்பதால்தான். மேலும் விண்டோஸ் 8 -ல் செயல்படும் விதத்தில் அப்ளிகேஷன்களை தயாரித்து வழங்குவதில்லை என்பதை கூகிள் ஆணித்தரமாக அறிவித்ததும் ஒரு முக்கியமான காரணம்.

விண்டோஸ் 8 பின் தங்க என்ன காரணம்? 

மைக்ரோசாப்ட் தனது தயாரிப்புகளை (Microsoft products) என்றும் அதிகமாக மக்களிடம் பிரபலப்படுத்துவதில்லை. காரணம் அதீத நம்பிக்கை.. எப்பொழுதும் தன்னுடைய தயாரிப்புகள் வென்றுவிடும் என்ற அலட்சியப் போக்கு. அதுமட்டுமல்லாமல் தனது தயாரிப்புகளினுடைய சிறப்புகளை (Specificatons) சரிவர மக்களுக்கு கொண்டுசெல்லாத்தும், அதைப்பற்றிய தேவையான விளக்கங்களை கொடுக்காத்தாலும் இப்பொழுது ஸ்மார்ட் போன் உலகில் (Smartphone world) விண்டோஸ் 8 பின் தங்கி, ஆண்ட்ராய்ட் தனது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது. 
இனி  ஸ்மார்ட் போன் உலகில் விண்டோஸ் 8 ன் எதிர்காலம் பிரைட்னஸ் இல்லாமல் போய்விடும் என்பதில் சந்தேகமில்லை. 
இந்தப் போட்டியில் வெல்ல வேண்டுமெனில் மைக்ரோசாப்ட் தனது தயாரிப்புகளின் தன்மைகளையும், பயன்களையும் எளிதாக பயனர்களிடையே கொண்டுச் சென்று, ஆண்ட்ராய்ட்டை விட எளியதாக, அதிக பயன்பாடுகளைக் கொண்டுள்ளதாக மாற்றம் செய்து, அவற்றை மக்கள் மத்தியில் வெளிக்கொணர்ந்ததால் மட்டுமே ஓரளவிற்கு இந்தப் போட்டியில் வெல்ல முடியும்.. ஆனால் இதை மைக்ரோசாப்ட் உணருமா? உணர்ந்து அதைச் செயல்படுத்துமா? என்றால் அது நிச்சயம் கேள்விகுறியாகத்தான் இருக்கிறது. காரணம் மைக்ரோசாப்டின் செயல்பாடுகள், கூகிளைவிட மந்தமாக இருப்பதுதான். 
இந்த உண்மையை மெய்ப்பிக்கும் வகையில் காம் டாட் ஸ்கோர் என்ற நிறுவனம் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் குறித்த ஆய்வொன்றில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் 53% ம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தினை 36% சதவிகத்தினரும் பயன்படுத்துகின்றனர் என்றும், அதற்கு அடுத்த படியாக பிளாக் பெர்ரி இருப்பதாகவும், விண்டோஸ் 8 சிஸ்டம் இப்போட்டியில் பின்தங்கி கடைசி இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. எனவே தற்போதைய ஸ்மார்ட் போன் உலகில் முடி சூடா மன்னனாக ஆண்டாய்ட் சிஸ்டமே கோலோச்சுகிறது என்பதில் சந்தேகமில்லை. 
நன்றி. 
– சுப்புடு
Android has first position in the smartphone world. Because of this, it is a Google product. Windows 8 has a better performance than android system. But it could not win in the smartphone market.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments