Wednesday, January 22, 2025
Homeappleஆப்பிள் அல்ட்ரா ஸ்லிம் ஐபாட் - சிறப்பம்சங்கள்

ஆப்பிள் அல்ட்ரா ஸ்லிம் ஐபாட் – சிறப்பம்சங்கள்

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய பதிப்பு ஐபாட் டச் 16 ஜிபி ( iPod touch 16gb ultra slim ) கடந்த வியாழன் அன்று விற்பனைக்கு கொண்டு வந்தது. இது ஆப்பிளின் முந்தைய ஐபோட் டச் (32/64)விட விலையில் குறைந்தும், உருவத்தில் மெலிந்தும், எடை குறைந்தும் காணப்படுகிறது.

$ 229 டாலர் விலையுள்ள இந்த புதிய ஐந்தாம் தலைமுறை ஐபாட் டச் 16 ஜிபி  4-Inch Retina டிஸ்பிளேயுடன் dual-core A5 processor உடன் வெளிவந்திருக்கிறது. இதில் முகப்பு கேமரா (Front) இல்லை என்பது மட்டுமே சிறிய குறை என்றாலும், மற்ற ஐபோட் டச் களை ஒப்பிடும்பொழுது, விலையிலும் சரி.. பயன்பாட்டிலும் சரி.. அதிக வசதிகளைக் கொண்டுள்ளது. 

 iPod touch 16gb ultra slim specifications

Image credit: Apple.

அதாவது மிகக் குறைந்த எடையுடன் மிகவும் மெலிதாக (Ultra Slim) வடிவமைக்கப்பட்டுள்ளது. மியூசிக், மெசேஜஸ், வெப்சைட் மற்றும் கேம்ஸ் ஆகியவற்றிற்கு அசத்தலான காட்சியமைப்பை கொடுக்கும் 4-இன்ச் ரெட்டினா டிஸ்பிளேயை கொண்டுள்ளது.

8 மணி நேரம் வீடியோ பார்க்ககூடிய வசதி , 40 மணிநேரம் தொடர்ந்து மியூசிக் பிளேபேக் வசதியுடன் கூடிய  பவுர்புல் Dual-core A5 chip கொண்டுள்ளது.

இப்புதிய ஐபாட் டச் 16 GB வாங்குபவர்களுக்கு 90 நாட்களுக்கான தொலைபேசி வழி டெக்னிகள் சப்போர்ட்டும், ஒரு வருடத்திற்கான நிபந்தனையுடன்  கூடிய வாரண்டியும் உள்ளது.

ஆப்பிளின் புதிய iPod touch 16GB ($229) சிறப்பம்பசங்கள் ஆங்கிலத்தில் கீழே.

 iPod touch 16GB ($229) Specifications:


  • Ultra-slim design
  • 4-inch retina display
  • Dual-core A5 chip (Processor)
  • Apple Earpods
  • Lightning to USB Cable
  • Quick Start guide
  • 16 GB capacity
  • Bluetooth 4.0
  • 1.2 MP Face Time HD camera
  • Face detection
  • lightning connector
  • 3.5-mm stereo headphone jack
  • microphone
  • External Buttons and Controls
மேலும் மதிப்பு மிக்க வசதிகளுடன் வெளிவந்துள்ள இப்புதிய ஐபாட் ஆப்பிள் ஸ்டோர் தளத்தில்ஆன்லைனில் கிடைக்கிறது.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments