டீம் விவர் – TEAM VIEWER
ஒரு கம்ப்யூட்டர் லிருந்து மற்றொரு கம்ப்யூட்டரை இணைய வழியே பார்த்து இயக்கிட பயன்படும் அருமையான மென்பொருட் டீம் வியூவர். இதனை ஆங்கிலத்தில் “desktop remoter control software” என்பர். டி.வி. யை எப்படி ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குகிறோமே அது போலவே ஒரு கம்ப்யூட்டரை ரிமோட்டாக மாற்றி, வேறொரு இடத்தில் இணைய இணைப்புடன் உள்ள கம்ப்யூட்டரை இயக்கிட உதவும் மென்பொருள்தான் இது.
உதாரணமாக உங்களுடைய நண்பரின் கணினியில் ஒரு குறிப்பிட்ட பணியை அல்லது சந்தேகத்தை தீர்த்து வைக்க நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடியே ரிமோட் முறையில், இந்த மென்பொருளைப் பயன்படுத்தி இணையத்தின் வழியாக அவருடைய கம்ப்யூட்டரை நீங்கள் அணுகலாம். அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த டீம் வியூவர்.
இது இப்பொழுது கம்ப்யூட்டர் க்கு மட்டுமல்ல. இணையத்தைப் பயன்படுத்து உபோயகப்படும் எந்தொவொரு சாதனத்திற்கும் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக ஸ்மார்ட்போன், டெப்லட், லேப்டாப் போன்றவற்றிற்கு. சமீபத்தில் வெளியான விண்டோஸ் 8 போன் க்கு கூட இந்த மென்பொருள் வெளியிடப்பட்டுவிட்டது.
ஒரு போனிலிருந்து மற்றொரு போனை நீங்கள் இயக்கிடலாம். அதற்கு இடையே ஊடகமாக செயல்படுவதுதான் இந்த டீம்வியூவர் (Team Viewer For Windows 8).
டவுன்லோட் செய்திட சுட்டி: Download teamviewer for windows phone 8
TeamViewer is a software for control remote computers using windows 8 / windows RT/ Windows phone 8 device. The TeamViewer app can be downloaded from the windows store. TeamViewer app is free for non- commercial users only. Support family and friends or have remote access to your own computer.