Wednesday, January 22, 2025
Homegoogle accountகூகிள் அக்கவுண்ட் கிரியேட் செய்த தேதியை கண்டறிய

கூகிள் அக்கவுண்ட் கிரியேட் செய்த தேதியை கண்டறிய


உங்களுடைய கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட நாளை தெரிந்துகொள்ள

வணக்கம் நண்பர்களே..!

நம்மில் பலபேர் கூகிள் கணக்கைத் தொடங்கி மின்னஞ்சல், பிளாக்கர் முதற்கொண்டு கூகிளின் பல்வேறுபட்ட வசிதிகளைப் பயன்படுத்திக்கொண்டிருப்போம். ஆனால் அந்த கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட நாள் எது என்று பெரும்பாலோனோருக்குத் தெரியாது.. காரணம் அதனுடைய பயன் தெரியாததே..!

கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட தேதியை, நாளை நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

உங்களுடைய கூகிள் கணக்கை வேறு யாராவது முடக்கினாலோ, அல்லது உங்கள் கூகிள் கணத்தை திருடி மற்றவர்கள் பயன்படுத்தினாலோ அதை மீண்டும் மீட்டுக் கொண்டுவர இந்த தகவல்கள் பயன்படும்.

குறிப்பாக கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட நாளை  கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சரி.. கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட தேதியை கண்டறிவது எப்படி? அது மிகவும் எளிதான ஒன்றுதான்.

https://www.google.com/takeout/?pli=1 என்ற சுட்டியை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இவ்வாறு ஒரு விண்டோ திறக்கும். 
அதில் transfer your google + connetions to another account என்ற சுட்டியைக் கிளிக் செய்யுங்கள்.
அப்போது உங்களுக்கு இவ்வாறு ஒரு விண்டோ திறக்கும்.  உங்களுடைய பயனர்பெயர், கடவுச்சொல்லை கொடுத்து லாகின் செய்துகொள்ளுங்கள்.
அதற்கடுத்து தோன்றும் பெட்டியில் உங்களுடைய கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட தேதி, மற்றும் நீங்கள் இறுதியாக உள்நுழைந்த தேதி ஆகியவற்றைக் காட்டும். created என்பதில் உங்களுடைய கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட தேதி இருக்கும். அதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கூகிள் அக்கவுண்ட்டை நீங்க அணுக முடியாத நிலையில் , கூகிளிடம் விண்ணப்பித்து உங்களுடைய கூகிள் கணக்கை மீட்க நிச்சயம் இந்த தேதி உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த பதிவில் உங்களுக்குத் ஏதேனும் சந்தேகம் எனில் கருத்துரைப் பெட்டியின் மூலம் கேட்கலாம்.

நன்றி நண்பர்களே..!!!

-சுப்புடு
RELATED ARTICLES

Most Popular

Recent Comments