இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. பேசுவதற்காக உருவாக்கப்பட்ட அலைபேசியில் அது தொடர்பான பல வசதிகள் இடம்பெற்றுவிட்டன.
உதாரணமாக வீடியோ பார்ப்பது (watching Video), படம் எடுப்பது (capture photo). விளையாடுவது போன்ற அம்சங்களைக் கூறலாம். இத்தகைய பொழுது போக்கு அம்சங்களையும் தாண்டி, தற்பொழுது சில மருத்துவ வசதிகளையும் ஸ்மார்ட் போனில் கொண்டுவந்துள்ளனர்.
அவர்கள் இது குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி, ப்ளூடூத், வைபை வசதி, ஸ்மார்ட்போன் ஆகியவற்றை ஒன்றிணைத்து மைக்ரோ கண்ட்ரோலர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வயர்லெஸ் சிஸ்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த கண்ட்ரோலர் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மூலம் இதய துடிப்பு (Heart beat), உடல் வெப்பநிலை (Body temperature), ரத்தத்தில் சர்க்கரையின் அளவு (The amount of sugar in the blood) ஆகியவற்றை ஸ்மார்ட்போன் தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும்.