Wednesday, January 22, 2025
Homeblood pressureஸ்மார்ட்போன் மூலம் BP, Sugar அளவை கண்டறிய

ஸ்மார்ட்போன் மூலம் BP, Sugar அளவை கண்டறிய

New smart phone technology to monitor health

இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. பேசுவதற்காக உருவாக்கப்பட்ட அலைபேசியில் அது தொடர்பான பல வசதிகள் இடம்பெற்றுவிட்டன.

உதாரணமாக வீடியோ பார்ப்பது (watching Video), படம் எடுப்பது (capture photo). விளையாடுவது போன்ற அம்சங்களைக் கூறலாம். இத்தகைய பொழுது போக்கு அம்சங்களையும் தாண்டி, தற்பொழுது சில மருத்துவ வசதிகளையும் ஸ்மார்ட் போனில் கொண்டுவந்துள்ளனர்.

நவீன ரக ஸ்மார்ட் போன்களில் பிளட் பிரசர் என்று சொல்லப்படும் ரத்த அழுத்தம் (Blood Pressure), ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியவைற்றைக் கண்டறிய முடியும். அது மட்டுமல்லாமல் X-ray, ECG வசதிகள் கூட வந்துவிட்டன.
மேற்கண்ட வசிதகளோடு, கூடுதலாக புதிய பயனுள்ள தொழில்நுட்பம் ஒன்றையும் ஸ்மார்ட்போன் மூலம் செயல்படுத்தியுள்ளனர் நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த மனுகாவ் தொழில்நுட்ப கழகத்தின் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை ஆராய்ச்சியாளர்கள் ஹெலன் ஷூ, டிம் ராபர்ட்ஸ்.

அவர்கள் இது குறித்த  ஆய்வு ஒன்றை நடத்தி, ப்ளூடூத், வைபை வசதி, ஸ்மார்ட்போன் ஆகியவற்றை ஒன்றிணைத்து மைக்ரோ கண்ட்ரோலர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வயர்லெஸ் சிஸ்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த கண்ட்ரோலர் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மூலம் இதய துடிப்பு (Heart beat), உடல் வெப்பநிலை (Body temperature), ரத்தத்தில் சர்க்கரையின் அளவு (The amount of sugar in the blood) ஆகியவற்றை ஸ்மார்ட்போன் தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும். 

அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ப்ளூடூத் (blue tooth) மூலம் அது குறித்த தகவல்களை உங்களுடைய மருத்துவரின் ஸ்மார்போனுக்கும் (Doctor’s smartphone) அனுப்பும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இருந்த இடத்திலிருந்தே அவசரகால சிகிச்சையளிப்பது (Emergency treatment) சாத்தியமாகியுள்ளது. 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments