Wednesday, January 22, 2025
Homeandroid appsஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி? கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் !

ஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி? கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் !

UPDATE: ஆண்ட்ராய்ட் போனில் பல்வேறு வசதிகள் வந்துவிட்டன. அதை ஒரு “மினி கம்ப்யூட்டர்” ஆகவே இப்பொழுது பயன்படுத்தலாம். அந்தளவிற்கு மேம்படுத்தப்பட்டு சிறப்பான பயன்பாட்டு சாதனமாக அது விளங்குகிறது. அந்த வகையில் ஆன்ட்ராய்ட் போனில் call record செய்யவென தனி app களை பயன்படுத்தத் தேவையில்லை. தற்பொழுது வெளிவரும் புதிய மாடல் போன்களில் அந்த வசதி போனிலேயே தரப்பட்டுள்ளது. ஒருவருக்கு போன் செய்யும்பொழுது அல்லது உங்களுக்கு போன் கால் வரும்பொழுது திரையில் காட்டும் Record Call ஆப்சனை செயல்படுத்துவதன் மூலம் போன் கால் ரெக்கார்ட் செய்யயலாம்.

அவ்வாறு ரெக்கார்ட் செய்த கால்களை சேமித்திட உங்களுடைய போனில் போதுமான அளவிற்கு Storage Free (internal memory) ஆக இருக்க வேண்டும். அல்லது External Memory யில் STD Card ஒன்றினை பயன்படுத்த வேண்டும். அப்பொழுது நீங்கள் சேமிக்கும் தகவல்கள் Recorded Calls உட்பட அதில் பதிவாகும்.

வாசிக்க:  ஸ்மார்ட்போன் மூலம் BP, Blood Sugar பார்த்திட உதவும் செயலி

இது தவிர கீழுள்ள Call Record Apps களையும் பயன்படுத்தலாம். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தனிப்பயன் கொண்டுள்ளது. கூடுதல் வசதிகளுடன் கிடைக்கும் இந்த ஆப்கள் தற்பொழுது பயன்படுத்துவது குறைந்துவிட்டது என்றே கூறலாம்.

கால் ரெக்கார்ட் செய்திட உதவிடும் செயலிகள் 

Automatic Call Recorder - Android Apps for android smartphone
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் போன்களில் கால் ரெக்கார்டிங் ஆப்சன் இருக்கும். ஆனால் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் அதுபோன்ற வசதிகள் இருப்பதில்லை. கால் ரெக்கார்டிங் செய்வது நமக்கு பல்வேறு வகைகளில் பயன் அளிக்கும். ஒரு சந்தேகம் தொடர்பாக ஒருவரை நாம் அணுகும்போது அவர் அளிக்கும் பதில்களை நாம் அப்படியே மனதில் நிறுத்த வேண்டும். சில சமயங்கள் நீண்ட நேரம் உடையாட வேண்டிய அவசியம் ஏற்படலாம். 
குறிப்பாக சில செயல்முறைகளை அவர்கள் கூறும்போது அவற்றை நாம் வரிசையாக நினைவுப்படுத்தி வைத்துக்கொண்டு செய்வதென்பது சிரமம். இதுபோன்ற சமயங்களில் கால் ரெக்கார்டிங் நமக்கு உதவிகரமாக இருக்கும். 
சரி.. ஆண்ட்ராய்ட் போனில் கால் ரெக்கார்டிங் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். 
ஆண்ட்ராய்ட் போனில் கால் ரெக்கார்டிங் செய்யவென சில அப்ளிகேசன் உள்ளன. அவை1. கால் ரெக்கார்டர் (Call Recorder), 2. ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டர் (Automatice Call Recorder), 3. ஆர்எம்சி அட்வான்ஸ் கால் ரெக்கார்டர் (RMC Advance Call Recorder)

1. ஆட்டோமேடிக் கால் ரெக்கார்டர் (Automatice Call Recorder)

Automatic Call Recorder - Android Apps for android smartphone
Automatice Call Recorder அப்ளிகேசன் மூலம் நீங்கள் தொடர்புகொள்ளும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யலாம். இதில் குறிப்பிட்ட காண்டாக்ட் கால்களை தேவையில்லை எனில் ignore contacts வசதியின் மூலம் எந்தெந்த கான்டாக்ட் அழைப்புகள் எல்லாம் தேவையில்லையோ அவற்றை RECORD ஆக வேண்டாம் என்று நாம் செட் செய்து விடலாம். 
இந்த Android smartphone voice Recoder application -ஐ தரவிறக்கம் செய்ய சுட்டி: Download: Automatice Call Recorders

2. கால் ரெக்கார்டர் (Call Recorder)

Call Recorder - Android Apps for android smartphone
இது ஒரு சிறந்த ரெக்கார்டிங் அப்ளிகேசனாகும். உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் இதை நிறுவி எளிதாக incoming , out going call ஆகியவற்றை ரெக்கார்ட் செய்யலாம். நீங்கள் ரெக்கார்ட் செய்ததை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் உள்ள microSD card -ல் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். சேமித்து வைத்ததை லாக் செய்யும் வசதியும் இதில் உள்ளது. 

3. ஆர்எம்சி அட்வான்ஸ் கால் ரெக்கார்டர் (RMC Advance Call Recorder)

Record my call recorder apps for smartphone
உங்கள் Android Smartphone மூலம் உங்களுக்கு வரும் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகளை நீங்கள் ரெக்கார்ட் செய்யலாம். தெளிவாக ரெக்கார்ட் செய்ய loud speaker -ல் வைத்து ரெக்கார் செய்ய வேண்டும். அப்போது ரெக்கார்டிங் குவாலிடி சிறப்பாக இருக்கும். நீங்கள் விரும்பினால் Google Drive, Drop Box போன்ற ஆன்லைன் சேமிப்பகங்களுடன் அவற்றை இணைத்துக்கொள்ளலாம். நாமாகவே record செய்யும் வசதியும் இந்த அப்ளிகேசனில் உள்ளது. 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments