Friday, January 24, 2025
Homeaccounting softwareகம்ப்யூட்டர் அக்கவுண்டிங் மென்பொருட்கள் !

கம்ப்யூட்டர் அக்கவுண்டிங் மென்பொருட்கள் !

மென்பொருள் தகவல்கள்.. ( Useful Software information and download links)
இந்த பதிவில் ஒரு மென்பொருள்கள் பற்றிய தகவல்களைக் காண்போம். 

1. உங்கள் கணினியைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள (Computer Data Details Software )

உங்கள் கணினியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இம்மென்பொருள் பயன்படும். அதாவது கணினியில் உள்ள புரோகிராம்கள், நிரல்கள் (codes), துணை நிரல்கள் (Supporting programs), இயக்கிகள் (Drivers), இணைப்புகள்(links), நீக்கிகள்(Uninstaller) ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை துல்லியமாக கண்டறிய பயன்படும்.
இம்மென்பொருள் சி.நெட் தளத்தில் தரவிறக்கம் செய்ய கிடைக்கிறது.
தரவிறக்கச் சுட்டி: http://download.cnet.com/System-Explorer/3000-2094_4-10784281.html

2. கணக்குப் பார்க்க உதவும் Accounting Software:

இந்த மென்பொருள் சிறிய அளவிலான தொழில் செய்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆரம்ப கட்ட தொழில் செய்யும் சிறிய நிறுவனங்களுக்கு (Small Company) மிகப் பொருத்தமானகவும், பயன்படுத்த எளிதானதாகவும் இருக்கும். 
இணையத்தின் மூலம் இந்த அக்கவுண்டிங் மென்பொருளைப் பயன்படுத்த முடிவதால், நீங்க எந்த இடத்தில் இருந்தாலும் இதன் மூலம் உங்களுடைய நிறுவனத்தின் கணக்குகளை செய்ய முடியும். 
தளத்தின் முகவரி: http://www.numia.biz
இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்துகொண்டவுடன் நீங்கள் உங்களுடைய நிறுவனத்திற்கான கணக்குகளை செய்ய முடியும். மேலதிக விபரங்களுக்கும், புதியவர்களுக்கும் இத்தளத்தில் உள்ள வீடியோ டுடோரியல் உதவும். 

3. கிளவுட் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் (Cloud Software): 

பெருகிவரும் கிளவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே வைரஸ்களையும் அதி விரைவாக பரப்பி வருகின்றனர். எதிர்காலத்தில் கிளவுட் தொழில்நுட்பமே (Cloud Technology) நிலைக்கும் என்ற நிலையில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வைரஸ்கள் பரவாமல் தடுக்க ஏற்கனவே நிறைய ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவனங்கள் அதற்கான மென்பொருளை தயாரித்து வெளியிட ஆரம்பித்துவிட்டன. 
அதுபோன்றதொரு ஒரு மென்பொருளை பாண்டா நிறுவனமும் தயாரித்து, பரிசோதித்து வெளியிட்டிருக்கிறது. பாண்டா நிறுவனத்தின் மூலம் நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இது முற்றிலும் இலவசமே..!
கிளவுட் ஆண்டிவைரஸ் மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: http://acs.pandasoftware.com/cloud/PandaCloudAntivirus.exe

4. உங்களுடைய கோப்புகளை எவரும் அணுக முடியாமல் பாதுகாக்கும் மென்பொருள் (Document Protection Software): 

இந்த மென்பொருள் உங்களுடைய கோப்புகளை உங்களைத்தவிர வேறு யாருமே பயன்படுத்த முடியாதபடி செய்கிறது. உங்களுடைய கோப்புகள், கணியில் இருந்தாலும் சரி… பென்டிரைவில் இருந்தாலும் சரி.. அல்லது சிடி, டிவிடி யில் இருந்தாலும் சரி.. எதில் நீங்கள் வைத்துக்கொண்டாலும், அந்தக் கோப்புகளை உங்களைத் தவிர வேறு யாராலும் பயன்படுத்த முடியாதபடி மென்பொருளின் ஒரு டிரைவை உருவாக்கி “பாஸ்வேர்ட்” கொடுத்து பாதுகாக்கலாம். 
மென்பொருள் தரவிறக்கம் செய்ய சுட்டி: http://www.truecrypt.org/downloads
இந்த இணைப்பில் சென்று உங்கள் கணினிக்கான மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். மென்பொருளைப் பயன்படுத்துவது குறித்த சந்தேகங்களுக்கு தளத்தில் இடம்பெற்ற Screen shot, FAQ  பகுதிகளை நாடலாம். மேலதிக தகவல்கள் தேவைப்படின் கருத்துரை வாயிலாக தொடர்புகொள்ளுங்கள். 
நன்றி. 
– சுப்புடு
Hi, friends, in this post, I give details about very important free trial software for basic computer users. It is free to download.  Some Software is paid software. You should pay money to get that Original software through online using your credit card or any method of online transaction. 
RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments