Monday, December 23, 2024
Homeandroid appsமிகச் சிறந்த மூன்று தேடு இயந்திரங்கள்..! (Android Apps)

மிகச் சிறந்த மூன்று தேடு இயந்திரங்கள்..! (Android Apps)

1. கூகிள் சர்ச் (Google Search)
கூகிள் சர்ச் என்ஜின்தான் இணைய உலகின் முதன்மையான தேடல் இயந்திரம் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. காரணம் ஒரே செகண்டில் மில்லியன் கணக்கான வலைத்தளங்களிலிருந்து தொடர்புடைய தகவல்களை தேடி கொடுத்துவிடும்.

அதுமட்டுமல்ல… இந்த தேடுதல் இயந்திரத்தின் மூலமே இன்றைய வெப்பநிலை, டிராபிக் ரிப்போர்ட் மற்றும் சிறந்த குரல்வழி தேடுதல்(voice search) போன்ற வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இத்தேடு இயந்திரம் Android 2.3 இயங்குதளத்தில் இயங்க கூடியது. தற்பொழுது 4.1 ICS பயனர்களுக்கும் சிறந்த வசதிகளடங்கிய கூகிள் தேடியந்திரம் கிடைக்கிறது. 

இத்தேடு இயந்தரத்தை டவுன்லோட் செய்ய: Download Google search 

2.பிங் (Bing)
கூகிள் தேடியந்திரத்திற்கு அடுத்து மிகச்சிறந்த, இணைய பயனர்கள் பலராலும் பயன்படுத்தப்படும் ஒரு தேடு இயந்திரம் ‘Bing’ தேடு இயந்திரம். இது மைக்ரோசாப்டின் தயாரிப்பு ஆகும். இத்தேடு இயந்திரத்தின் மூலமாகவும் கூகிள் தேடியந்திரத்தில் உள்ளதுபோலவே Restaurants, images, shops, address, news மற்றும் பலவித தகவல்களை உடனடியாக தேடிப் பெற முடியும். 
இத் தேடல் இயந்திரத்திலும் குரல்வழித் தேடலான Voice Search feature ம் உள்ளது. மேலும் தினமும் புதிய HD wallpaper களையும் காண முடியும். 
3. ரெசிப் சர்ச் (Recipe Search)
இந்த தேடியந்திரம் தினமும் ஆயிரக்கணக்கான உணவுவைகளைத் தேடி பெற முடியும். பயனர்கள் இதன் மூலம் பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான உணவு வகைகள் தொடர்பான தேடி பெற முடியும். அதாவது recipes directions, ingredients, reviews மற்றும் தங்களக்குத் தேவையான, பிடித்தமான உணவு வகைகளின் கூடுதல் தகவல்களை இத்தேடுதளத்தின் மூலம் தேடிப் பெற முடியும். 
அதுமட்டுமல்லாமல் பயனர்களிடமுள்ள உணவுவகைகள், செய்முறைகள், மற்றும் அதைப்பற்றிய விமர்சனம் போன்ற தகவல்களையும் இத்தேடு இயந்திரத்தில் இணைத்துக்கொள்ள முடியும். பிடித்த தகவல்களை நண்பர்களுக்கு சமூக தளங்களின் மூலம் நண்பர்களுக்கு பகிரும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. 
Hi friends, in this post i explain about three search engines for android Smartphone. Those search engines are popular in specific search. First two are the general search engine and most popular that is Google and Bing. Last one is especially recipe (food) search engine. This search helps to find good and favorite recipe, reviews. 
The three search engine available to download and install in Google play store.  
RELATED ARTICLES

Most Popular

Recent Comments