Monday, December 23, 2024
Homeandroid appsஆன்ட்ராய்ட் பேட்டரி சேவர் ஆப் !

ஆன்ட்ராய்ட் பேட்டரி சேவர் ஆப் !

உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் அடிக்கடி பேட்டரி காலியாகிவிடுகிறதா? முக்கியமான நேரங்களில் Low Battery செய்தியைக் காட்டி உங்களை எரிச்சலடையச் செய்கிறதா? இப்பிரச்னைக்கு நீங்கள் தீர்வு தேடி அலைந்துகொண்டிருக்கிறீர்கள். அப்படியெனில் இப்பதிவு உங்களுக்குத்தான்.. தொடரந்து படியுங்கள்….

உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் வீணாகும் பேட்டரி மின்சக்தியை கட்டுப்படுத்தி, சேமித்து நீண்ட நேரம் நீங்கள் ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்த உதவுகிறது Battery Doctor என்ற அப்ளிகேஷன்.

நீங்கள் நாள் முழுக்க ஆண்ட்ராய்ட் போனை பயன்படுத்துபவர்கள் எனில் கட்டாயம் உங்கள் போனில் இந்த அப்ளிகேஷன் இடம்பெற வேண்டும். இது முற்றிலும் இலவசமானதுதான்.
android-smartphone-battery-power-saving-application-for-free

அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய செல்ல வேண்டிய இணைப்புச்சுட்டி:

Battery doctor மென்பொருளின் சிறப்புகள்:

  • இது one tap power saving முறையில் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் பேட்டரி சக்தியை சேமிக்கிறது. இதற்கு நீங்கள் இதனை ஒருமுறை கிளிக் செய்தால் போதுமானது.
  • ஆண்ட்ராய்ட் சாதனத்தில் உள்ள பேட்டரி சக்தியின் அளவைப் பொறுத்து இன்னும் எவ்வளவு நேரம் ஆண்ட்ராய்ட் போன் இயங்கும் என்பதை தெளிவாக நமக்கு காட்டும். இதனால் குறைந்த பேட்டரி உள்ளபோது எச்சரிக்கையாக இருக்க முடியும்.
  • அதுமட்டுமல்லாது இந்த பேட்டரி டாக்டர் மென்பொருளானது ஆண்ட்ராய்ட் போனில் உள்ள குறிப்பிட்ட செயல்பாடின் மூலம் எவ்வளவு மின் சக்தி இழக்கப்படுகிறது என்பதை துல்லியமாக காட்டுகிறது. இதனால் தேவையில்லாத புரோகிராம்களை இயக்கத்திலிருந்து நீக்க முடியும்.
  • ஆண்ட்ராய்ட் போனில் உள்ள மின்சக்தியை சேமிக்கும் விதத்தையும் இது பட்டியலிடுகிறது.
  • தேவையில்லாத மென்பொருள்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தி மின்சக்தி விரயமாவதை கட்டுப்படுத்துகிறது.
  • எந்தெந்த மென்பொருள்கள் பேட்டரியின் சக்தியை அதிகம் எடுத்துக்கொள்கிறது என்பதை பட்டியிட்டு காட்டும்.
  • pre-made saving mode நுட்பத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் Battery Power சேமிக்கும் வசதியை கொடுக்கிறது.
  • இந்த சிறப்பு மிக்க மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கட்டாயம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தங்களுடைய போன்களில் இன்ஸ்டால் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய மிகச்சிறந்த இலவச மென்பொருள் இது.
பேட்டரி டாக்டர் மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: Download Battery Doctor for Android smartphone

நன்றி.

சுப்புடு

Hi friends, it this i explain the batter doctor android apps for save Battery in android smartphone. Battery Doctor is apps it helps you to save Battery on your Androidphone.

Features of Android Smartphone:

RELATED ARTICLES

Most Popular

Recent Comments