Monday, December 23, 2024
HomeGoogle chromecastதொலைக்காட்சியில் YouTube வீடியோ பார்க்க

தொலைக்காட்சியில் YouTube வீடியோ பார்க்க

இணையத்தின் மூலம் யூடியூப் தளத்தில் வீடியோக்களைப் பார்த்து மகிழ்வோம். அதைப்போன்றே தற்பொழுது தொலைக்காட்சி மூலமும்  யூடியூப் , நெட்பிக்ஸ் போன்றவைகளில் உள்ள வீடியோக்களைப் பார்த்து மகிழலாம். இதற்காக கூகிள் புதிய Google chromecast என்ற சாதனத்தை நாளை வெளியிட உள்ளது.

google-chrome-cost-for-watch-youtube-videos-on-satelite-television

இந்த புதிய வன்பொருள் மூலம் இணையதளங்களையும் பார்வையிட முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த சாதனம் Apple TV, Roku போன்ற ஸ்ட்ரீமிங் சாதனங்களை விட உபோயகத்திலும் விலையிலும் சிறந்தது.

புதிய Google chrome-cast சாதனத்தை வாங்கும்போது மூன்று மாத இலவச Netflix சந்தாவும் இலவசமாக கிடைக்கிறது.

நாளை சந்தையில் வெளியாகும் இந்த வன்பொருளானது தொலைக்காட்சி மட்டுமல்லாது, லேப்டாப் (Laptop), மேக் (mac), டேப்ளட் பி.சி (Tablet) சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என்பது இதனுடைய தனிப்பட்ட சிறப்பு அம்சம் ஆகும். 

இப்புதிய சாதனத்தை கூகிள் பிளே ஸ்டோரில் 35$ க்கு வாங்க முடியும். ஒரு நிபந்தனை. நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

குறிப்பு: இதனுடைய பயன்பாடு தற்பொழுது அமெரிக்காவில் மட்டுமே உள்ளது. இதனுடைய விலை டாலர் 35 மட்டுமே. அமெரிக்க வாழ் நண்பர்களுக்கு இச்செய்தி பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

நன்றி..

– சுப்புடு

 Hi friends, in this post i explain about chromecast device. It helps us to watch YouTube videos on television. Not only YouTube videos and watching videos like netflix steaming sites.
The Chromecast device connects with Smartphone, tablets and pc (personal computers) to beam internet connect to TVs. As an enticement to get people to try chromecast, Google is offering three months of free netflix service with a purchase of the internet-streaming stick.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments