Monday, December 23, 2024
HomeAndroidதொலைந்துபோன மொபைலை கண்டுபிடிக்க Smart Sim Card

தொலைந்துபோன மொபைலை கண்டுபிடிக்க Smart Sim Card

விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட்போன் (Android) முதல், சாதாரண அலைபேசிகள் வரை அன்றாடம் யாராவது எங்கேனும் தொலைத்துக்கொண்டுதான் உள்ளனர். அல்லது அவர்களுக்குத் தெரியாமல் திருடு போய்விடுகிறது. 
ஒரு ஆயிரம் ரூபாயோ அல்லது இரண்டாயிரம் ரூபாயோ விலைமதிப்புள்ள போன் தொலைந்துபோனால் “சரி போனால் போகிறது… இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம்” என்று மனதை தேற்றிவிடலாம். 

smart simcard

விலையுயர்ந்த போன் தொலைந்தது என்றால்.. அவ்வளவுதான்..சிலர் அதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். இளைஞர்கள் அல்லது மாணவர்கள் போன்றவர்களில் சிலர் வீட்டிற்குத் தெரிந்தால் அவ்வளவுதான் என்று பெற்றோர்களுக்கு பயந்து விபரீத முடிவுகளும் எடுக்கிறார்கள்.


ஆண்ட்ராய்ட்போன் மோகம் கொண்டு கிட்னி விற்று, அந்த விலையுயர்ந்த அலைபேசியை வாங்கிய வரலாறும் நம்நாட்டில் உண்டு. 

இளைஞர்களிடையே இந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுவிட்ட இதுபோன்ற விலையுயர்ந்த அலைபேசிகள் திருட்டுப் போனால் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்  சிம்கார்ட் (New Smart SIM) ஒன்றை ரஷ்ய நாட்டு போலிசார் விரைவில் பயன்படுத்த உள்ளனர். 
போலிசார் மட்டுமே பயன்படுத்த முடியக்கூடிய இத்தொழில்நுட்பத்தின் மூலம் திருடுபோன மொபைலை எளிதாக கண்டுபிடிக்க முடியும். 
EMI எண்ணை வைத்தே கண்டுபிடித்துவிடலாமே என்று நீங்கள் நினைத்தால், திருடர்கள் உங்களைவிட ஒரு படி முன்னேறிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், திருடுபோன போனை Switch Off செய்துவிட்டு, அந்த மொபைலை Reset செய்துவிடுகிறார்கள். இதானல் EMI நம்பரை வைத்து கண்டுபிடிப்பது இயலாத காரியமாகிவிடும். 
ரஷ்யநாட்டுப் போலீசார் பயன்படுத்தவிருக்கிற தொழில்நுட்பத்தின் சிறப்பு என்னவென்றால், மொபைல் திருடுபோனவுடன் அந்த மொபைல் பற்றிய தகவலை உடனடியாக காவல்நிலையத்திற்கு தெரிவித்துவிட வேண்டும். அவர்கள் அந்த சிறப்பு தொழில்நுட்ப சிம்கார்ட்டில் அத்தகவல்களை (Mobile data) பதிந்துவிடுவார்கள்.. இதுபோன்ற தொழில்நுட்ப அம்சங்கள் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் இருக்கும். 

அதனால் திருடுபோன மொபைலை யார், எங்கிருந்து பயன்படுத்தினாலும், ரீசெட் செய்து பயன்படுத்தினாலும் உடனே காவல்நிலையத்திலுள்ள எச்சரிக்கை ஒலி (Alert sound) எழுப்பி, அந்த போன் எங்கு, எந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அறிவிப்பதோடு, எங்கெல்லாம் தற்பொழுது அந்த  நபர் சென்றுகொண்டிருக்கிறார் என்ற தகவல்களையும் துல்லியமாக காட்டிவிடும்.

திருடர்கள் விலையுயர்ந்த மொபைலைத் திருடினாலும் பயன்படுத்த முடியாததோடு உடனடியாக பிடிபடவும் செய்வார்கள் என்பது உறுதி. இத்தொழில்நுட்பம் விரைவில் நம்நாட்டிலும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் அல்லவா?

Russian Police will use Smart SIM for discovered stolen android mobiles soon. This technology uses to recover all type of valuable, costly mobiles from thieves.
RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments