Monday, December 23, 2024
HomeFree Water Mark Serviceபடங்களுக்கு இலவசமாக வாட்டர்மார்க் செய்ய .!

படங்களுக்கு இலவசமாக வாட்டர்மார்க் செய்ய .!

வாட்டர் மார்க் இல்லாத படம்-வாட்டர் மார்க் இடப்பட்ட படம்
உங்களுடைய போட்டோக்களுக்கு வாட்டர் மார்க் இடுங்கள்.. அதுவும் இலவசமாக…

இணையத்தில் காப்பி ரைட் மற்றும் லைசென்ஸ் என்பது மிக முக்கியமான விஷயமாக உள்ளது. காரணம் உங்களுடைய படங்களை யார்வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்த முடியும் என்பதே…!

உங்களுடைய  புகைப்படங்களை நீங்கள் வாட்டர்மார்க் (Watermark) இடுவதன் மூலம் நீங்கள் அதைப் பாதுகாக்கலாம். மேலும் உங்களுடைய படங்களுக்கு தனித்தன்மையும் கிடைக்கும். இணையத்தில் பிறர் உங்களுடைய படங்களைப் பயன்படுத்த முடியாது. அப்படியே பயன்படுத்தினாலும் அது உங்களுடைய படம்தான் என்பதை அந்த வாட்டர் மார்க் காட்டிக்கொடுத்துவிடும்.

இந்த வாட்டர் மார்க் இடுவது போட்டோஷாப்பில் சாத்தியம். ஆனால் போட்டோஷாப் மென்பொருளை நீங்கள் விலைகொடுத்து வாங்க வேண்டும். அதே சமயத்தில் உங்களுக்கு போட்டோஷப்பும் தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த வெப் அப்ளிகேஷன் பயன்படுத்துவது எளிது. நீங்கள் இணைய இணைப்பில் இருக்கும்போது, தளத்திற்குசென்று வாட்டர் மார்க் இட வேண்டிய போட்டோவை அப்லோட் செய்தால் போதுமானது.

வாட்டர் மார்க் இட இணையத்தில் நிறைய தளங்கள் இருப்பினும் நான் பரிந்துரைப்பது http://www.watermarktool.com/ தளத்தையே.

இதில் நீங்கள் Signup செய்ய வேண்டியதில்லை..

நேரடியாக படத்தை அப்லோட் செய்வதன் மூலம் வாட்டர் மார்க் இடலாம்
வாட்டர் மார்க் இடப்பட்ட படத்தை உடனடியாக டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும்.

உங்களுடைய போட்டோக்களுக்கு ஆன்லைனிலேயே வாட்டர் மார்க் இடலாம். உங்களுடைய புகைப்படங்களுக்கு தனித்தன்மை பெற்றிடவும் பயன்படுகிறது.

ஆன்லைனில் படங்களுக்கு வாட்டர் மார்க் இடுவது எப்படி?

  • முதலில் தளத்திற்குச் செல்லுங்கள். 
  • ஒரே நேரத்தில் பல படங்களுக்கு வாட்டர் மார்க் இடுவதெனில் “select files” என்ற பட்டனை அமுக்கி படங்களை தேர்வு செய்யுங்கள். 
  • அல்லது ஒன்றிரண்டு படங்களுக்கு எனில் இடது புறமுள்ள Choose File என்பதை கிளிக் செய்யுங்கள். 
  • பிறகு உங்களுக்குத் தேவையான படங்களடங்கிய கோப்புகள் அல்லது படங்களைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். 
  • அப்லோட் கிளிக் செய்யுங்கள். 
  • இப்போது உங்கள் படத்தில் இடம்பெற வேண்டிய வாட்டர் மார்க் டெக்ஸ்ட் , எழுத்துகளின் நிறம், அளவு ஆகியவற்றை தீர்மானிக்கும் பெட்டித் தோன்றும். 
  • உங்கள் விருப்பம்போல் அதில் மாற்றம் செய்துகொள்ளுங்கள். 
  • இறுதியாக Generate என்ற பட்டனை அழுத்துங்கள். 
  • இப்போது வாட்டர் மார்க் இல்லாத படமும், வாட்டர் மார்க் இருக்கிற படமும் தோன்றும். 
  • வாட்டர் மார்க் இடப்பட்ட படத்தை “ரைட் கிளிக்” செய்து Save image as கொடுத்து படத்தை சேமித்துக்கொள்ளுங்கள். 

குறிப்பு; நீங்கள் அப்லோட் செய்யும் படக்கோப்பானது 200 KB அளவிற்குள் இருக்க வேண்டும்.  அதற்கு மேல் அதிக அளவுள்ள கோப்புகளை நீங்கள் பயன்படுத்த வேண்டுமெனில் சிறு கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

நன்றி.

– சுப்புடு

hi, in this post i explain about web apps for create watermark on photos. It is very useful online tool for creating watermark instantly….

watermark tool is the powerful online watermarking software that allows you to quickly and easily protect your images with a visible watermark. with the many watermarking options available, you’re able to personalize your images in a variety of ways including text size, color and position.

watermark tools comes in flavors free and wmt plus. the free version requires no sign up and gives you full access to the text watermark feature. For a small monthly fee, wmt plus adds extra functionality such as a higher file size limit, the ability to save your watermark settings for future use, and the option to use an image as a watermark.

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments