கூகிள் முதல் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. கூகிள் மோட்டோரோலோ நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அதனுடைய முதன்மைபோன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. அதற்கான முடிவு கிடைத்துள்ளது. கூகிள் தன்னுடைய புதிய (Flagship) போனை வெளியிட்டுள்ளது.
மோட்டோ எக்ஸ் ஸ்மார்போனின் சிறப்பம்சங்கள்:
- Moto X மொபைல் பிளாஸ்ட்டிக் உறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. முன்பகுதி இரண்டு வண்ணங்கிலும், பின்பகுதி 18 வண்ணங்களிலும் வெளிவருகிறது.
- இதனை குரல் மூலம் இயக்கலாம்.
- 10 பிக்சர் கொண்டா கேமாரா இதில் உள்ளது. இதிலுள்ள Clear pixel என்னும் தொழில்நுட்பத்தால் குறைந்த வெளிச்சம் கொண்ட இடங்களிலும் தெளிவான, துல்லியமான படங்களை எடுக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
- விரைவாக படங்ளை எடுக்க ‘Quick Camera’ என்ற நுட்பம் பயன்படுகிறது. நீங்கள் போனை இலேசாக சுழற்றினாலே கேமரா இயக்கத்திற்கு வந்துவிடும்.
- கூகிள் தனது கணிப்பின்படி ஒரு மொபைல் பயனர் தன்னுடைய மொபைல் போனை ஒரு நாளைக்கு 66 முறை எடுத்துப் பார்ப்பதாக கூறுகிறது. மொபைலை எடுத்து பார்க்கும் நபர் அதை ‘unlock’ செய்ய பட்டனை அழுத்தவேண்டும். கூகிளின் கணக்குப்படி பார்த்தால் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு சராசரியாக 66 முறை இவ்வாறு பட்டன்களை அழுதுக்கிறோம்.
- இதைத் தவிர்க்கும்பொருட்டு இந்த புதிய Moto X Smartphone ல் புதிய நுட்பம் Active Display பயன்படுகிறது. இந்த நுட்பமானது நீங்கள் உங்களுடைய போனை பாக்கெட்டிலிருந்து எடுத்தவுடனே திரை தெரியும். தலைகீழாக போனை திருப்பினாலும் இந்த Active Display செயல்படும்.
Key Specifications of Moto X:
Operating System | Android 4.2.2 (Jelly Bean) |
Display | 4.7 inch (720 x 1280 pixels) AMOLED capacitive touch screen |
Camera | 10MP rear camera with “Clear Pixel”, 2MP front camera |
Processor | 1.7 GHz X8 Mobile Computing System |
RAM | 2GB RAM |
Internal Memory | 16/32 GB Internal Memory |
External Memory | No |
Sim | Nano Sim |
Battery | Li-Ion 2200 mAh battery |
Features | 3G, 4G, NFC, WiFi, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 |
எப்போது, என்ன விலையில் MOTO X Smartphone கிடைக்கும் ?
இது ஒரு மிகச்சிறந்த ஆண்ட்ராய்ட் மொபைல் எனவும், இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் ஆகஸ்ட் இறுதியில் 200$ டாலர் விலையில் 16GB மொபைலும், 250$ டாலர் விலையில் 32 GB மொபைலும் கிடைக்கும் என கூகிள் அறிவித்துள்ளது.
கூகிள் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்ட நீங்கள் “ஆண்ட்ராய்ட் போனில் மின்சக்தியை சேமிக்கப் பயன்படும் மென்பொருள்” பற்றித் தெரிந்து பயன்பெறுங்கள்.
Google announced new smartphone called Moto X. In this post i explain about Google first flagship smartphone Moto X. It has 4.7 inch AMOLED capacitive touch screen, 10MP rear camera with “Clear Pixel”, 2MP front camera, 2GB RAM, 16/32 GB Internal Memory, Nano Sim, Li-Ion 2200 mAh battery and more. it
மிக அருமையான விளக்கமான தகவல். நன்றி !.
வந்த உடனே வாங்கிருவோம்ல…!