Friday, January 24, 2025
Homegoogle tipsகூகிள் தேட கற்றுக்கொள்வோம்...!

கூகிள் தேட கற்றுக்கொள்வோம்…!

கூகிள் என்பதே தேடுவதற்காக, தேடிப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம்தான்.. இது செய்யும் ஜாலங்கள் எத்தனை எத்தனையோ…!

இங்கு ஜாலங்கள் என்ற வார்த்தை பயன்பாட்டை குறிக்கும். இது தரும் பயன்கள் ஏராளம்… என்றாலும் தேடுதலில்.. தேடு பொறி அமைத்து கொடுப்பதில்தான் தன்னுடைய இணையவழி பரவலில் காலூன்ற ஆரம்பித்தது எனலாம்.

தற்போதுள்ள நிலைமையில் தேடுதலுக்கென தனிப்பட்ட வகுப்பே எடுக்கலாம்.. கூகிள் தேடு இயந்திரத்தில் தேடும் முறைகள் பல்வேறு வகைகளாக பிரித்தளிக்கப்பட்டு உள்ளது. 
to-get-a-perfect-result-on-google-search-step-by-step-methods
[Chennai] Population என தேடிப் பெறப்பட்ட முடிவு இது.

அவற்றில் முக்கியமான ஒரு முறையைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். அதாவது ஒரு அடைப்புக்குறிக்குள் தேடப்பட வேண்டிய வார்த்தையைக் கொடுத்து, அடைப்புக்குறிக்கு வெளியே தேடும் வார்த்தைக்கு தொடர்பான வார்த்தையைக் கொடுத்து  தேடும்போது வேண்டிய சரியான தேடல் முடிவுகளை உடனடியாக பெற முடியும்.
தேடப்பட வேண்டிய பொதுவான வார்தையை அடைப்புக்குறிக்குள்ளும், முடிவு கிடைக்க வேண்டிய வார்த்தையை அடைப்புக்குறிக்கு வெளியேயும் கொடுத்து தேட வேண்டும்.
உதாரணமாக ஒரு பெருநகரத்தின் மக்கள் தொகையை நீங்கள் அறிய வேண்டுமெனில்
  • [chennai] population என தேட வேண்டும். தேடுதல் முடிவில் சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகையை காட்டும்.
  • இவ்வாறு ஒரு பொருளைப் பற்றித் தேடலாம். அந்த பொருளுக்குரிய பெயர் மற்றும் அதனுடைய சிறப்புகளைப் பற்றித் தேடலாம்..
  • குறிப்பிட்ட இடத்தின் காலநிலையை தேடிப் பெறலாம்.. உதாரணம்  [Namakkal] Weather
  • ஒரு நாட்டிற்கான நேர வித்தியாசத்தைப் பெற [Country]time என கொடுத்துத் தேடலாம்.
  • ஒரு நாடு அல்லது ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சூரிய உதயநேரத்தை அறிந்துகொள்ள முடியும். [City name] Coimbatore
இதே முறையில் பிரபலங்களின் பிறந்த நாள், இறந்த நாள், கால்குலேட்டர், திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்வுகள் என இதுபோன்று ஒவ்வொரு தேடலுக்கும் நாம் இந்த முறையைப் பயன்படுத்தி விரைவாகவும், தெளிவான தேடுதல் முடிவுகளைப் பெறலாம்.

கூகிள் தேடும் முறைகளை விரிவாக விளக்கும் “கூகிள் தேட கற்றுக்கொள்ளுங்கள்” என்ற இப்பதிவையும் வாசித்து பயன்பெறுங்கள்.

நன்றி.

– சுப்புடு

Hi friends, in this post i explain how to search on google for looking weather, calculator, sun rise time in particular country and city. you can use method for various search such as movie release date, country or particular city population and etc.

I think this is a useful informative post for you. thank you.. please leave your valuable comments.

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments