Friday, January 24, 2025
Homesmartphone protectionஸ்மார்ட்போனை பாதுகாக்க ஐந்து வழிகள்

ஸ்மார்ட்போனை பாதுகாக்க ஐந்து வழிகள்

உங்களுடைய விலைமதிப்பு மிகுந்த ஸ்மார்ட்போனை பாதுகாக்க சிறந்த ஐந்து வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். 
பாஸ்கோட் (Passcode)
ஸ்மார்ட்போன் திரையை கடவுச்சொல் (Password) கொடுத்து தானாகவே பூட்டும்படி வைக்க வேண்டும். அதாவது நீங்கள் மட்டுமே உங்களுடைய ஸ்மார்ட்போனை திறக்கும்படி வைப்பது நல்லது. அதற்கு உங்களுடைய ஸ்மார்ட்போனிலேயே அமைப்புகள் (Smartphone settings) உண்டு. திரையை லாக்செய்யும்(Screen lock)முறையால் மற்றவர்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனை உங்களுடைய அனுமதியின்றி  பயன்படுத்த முடியாது.

secure your smartphone

புளூடூத், வைஃபை செட்டிங்
புளுடூத், வைபை (Settings of Bluetooth, WiFi) போன்ற கனெக்டிவிட்டி பயன்பாடுகளை பயன்படுத்தாமல் உள்ளபொழுது அதை நிறுத்தி வைக்க வேண்டும். 
தரமான அப்ளிகேஷன்
இணையத்தில் ஆண்ட்ராய்ட் போனுக்கான அப்ளிகேஷன்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு முன்பு, அவை தரமானதுதானா (Quality android apps)என்பதை உறுதிப்படுத்திய பின்னரே டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். அப்ளிகேஷனின் தரத்தை அறிய அத்தளங்களில் உள்ள ரேட்டிங்ஸ், அதைப்பற்றி விமர்சனங்கள் ஆகியவைகள் உங்களுக்கு உதவும்.  முடிந்தளவிற்கு மற்ற மூன்றாம்தர இணையத்தளங்களில் Android App டவுன்லோட் செய்வதைதவிர்த்திடவும். அதற்கென உள்ள பிரத்யேகமான Google Play யில் உள்ள ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்துவது நல்லது. 
ஆண்டி வைரஸ் 
தொழில்நுட்பங்கள் அதிகம் வளர வளர அதற்கான வைரஸ் புரோகிராம்களும் அதிகரித்துவருகிறது. நீங்கள் எந்த ஒரு ஆண்ட்ராய்ட் சாதனம் வைத்திருந்தாலும், கட்டாயம் அதில் ஆண்ட்டி வைரஸ் மென்பொருளும் (Anti-Virus Software for Android Devices)இடம்பெற்றிருக்க வேண்டும். இணையத்தில் நீங்கள் எந்த ஒரு அப்ளிகேஷன் அல்லது மென்பொருள் டவுன்லோட் செய்யும்பொழுது அதனுடன் வைரஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் ஆண்ட்டி வைரஸ் உங்களுடைய போனில் இருப்பது மிக மிக அவசியம். 
டிராக் மொபைல் அப்ளிகேஷன் (Track Mobile App)
இந்த அப்ளிகேஷன் உங்களுடைய ஆண்ட்ராய் போனில்  கண்டிப்பாக இருப்பது நல்லது. இதுவரைக்கும் இந்த அப்ளிகேஷன் உங்களிடம் இல்லையென்றால் முதலில் இதை (Track Mobile apps) தரவிறக்கி நிறுவுங்கள். இது உங்களுடைய தொலைந்துபோகும்பொழுது அல்லது திருடுபோய்விட்டால் மொபைல் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவும். 
மேற்கண்ட ஐந்து வழிமுறைகளையும் நீங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து, உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் பாதுகாப்புத் தன்மையை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடந்த பதிவில் திருட்டுப்போன ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பம் பற்றிய பதிவொன்றை பகிர்ந்திருந்தேன். புத்தம் புதிய அத்தொழில்நுட்பத்தைப் பற்றி அறிய சுட்டியைச் சொடுக்கவும். 

நன்றி. 
– சுப்புடு
Hi friends, I explain how to protect your android Smartphone in five ways. First, you must give pass-code to your phone, it protects your phone from others to abuse. Second one is you must off your Wi-Fi, Bluetooth options when you not use these options or unnecessary time. Third one is you download apps from internet, you must check that apps is quality or not. Fourth one is you must download and install a quality anti-virus program on your android device. In addition, the final one is you download and install a track mobile apps in your phone, it will find or track when you lose your phone unfortunately.
RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments