Saturday, November 23, 2024
Homecell phone secretsமொபைல் போன் சீக்ரெட்ஸ் மற்றும் திரை பாதுகாப்பு

மொபைல் போன் சீக்ரெட்ஸ் மற்றும் திரை பாதுகாப்பு

ஃப்ளாக் நம்பர்: Flag Numbers

ஃப்ளாக் நம்பர் என்பது 1 மற்றும் 0. இந்த எண்ணுள்ள பட்டன்களில் எழுத்துக்கள் இணைப்படாமல் இருக்கும். அவசரகால அழைப்புகளுக்கு இந்த எண்களை பயன்படுத்துவதற்காகவே அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது.உலக நாடுகளில் பலவும் அவசரகால எண்கள் 1 மற்றும் 0 எண்களையே உள்ளடக்கியுள்ளது. உதாரணம் 100 என்ற எண்ணைக் குறிப்பிடலாம்.

இஎம்இஐ:  EMEI

உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டியைத் தெரிந்துகொள்ள இந்த எண் பயன்படும். உங்களுடைய மொபைலின் EMEI எண் உங்களுக்குத் தெரியவில்லையா?

cell-phone-secrets-and-protection

உங்களுடைய மொபைல் இயங்கத்தொடங்கியவ்வுடன் *#06# என்ற எண்களை அழுத்த உங்களுடைய போனில் EMEI எண் தோன்றும். குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

மொபைல் காணாமல் கண்டுபிடிக்க இந்த எண் உதவும். ஒவ்வொரு மொபைலுக்கும் தனிப்பட்ட எண்ணாக இது இருக்கும்.

LCD திரை பாதுகாப்பு: Display protection

பெரும்பாலான மொபைல்கள் Liqued Cristal Display என்று சொல்லப்படும் LCD திரையைக் கொண்டுள்ளன.  உங்களது விருப்பமிகுந்த போனைப் பாதுகாப்பதில் உங்களைத் தவிர வேறு யாருக்கு அக்கறை இருக்க முடியும். பேண்ட் பாக்கெட், பேக் போன்ற இறுக்கமான இடங்களில் உங்களுடைய போனை வைக்கும்போது அழுத்தத்தாலோ அல்லது பையில் உள்ள கூர்மையான பொருட்களாலோ உங்களுடைய போனின் டிஸ்பிளே சேதமடையும் வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்க்க உங்களுடைய போனுக்கு தரமான காப்புறைகள் (பிளாஸ்டிக் கவர் அல்லது போன் கவர்கள்) பயன்படுத்தவது நல்லது.

நெட்வொர்க்கும், ஸ்விட்ச் ஆஃப்பும்: Network and Switch Off: 

நீங்கள் வெளியூர் அல்லது வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது உங்களுடைய நெட்வொர்க் கவரேஜ் ஏரியாவைத் தாண்டியவுடன் ஸ்விட்ஸ் ஆப் செய்வது நல்லது. இதனால் செல்போனில் பேட்டரி பவர் (Battery power)வீணாகமல் தடுக்கலாம்.

மேற்கண்ட செல்போன் சீக்ரெட்களை தெரிந்து வைத்துக்கொண்டால் தேவையான போது அது உங்களுக்கு கண்டிப்பாக உதவும்.

நன்றி. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments