Tuesday, December 24, 2024
Homesmartphoneசோனி எக்ஸ்பீரியா வாட்டர்ப்ரூப் போன்

சோனி எக்ஸ்பீரியா வாட்டர்ப்ரூப் போன்

 Sony Xperia Z1 Waterproof Smartphone
மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனமான Sony தனது புதிய தயாரிப்பை (Sony Xperia Z1 Waterproof Smartphone) பெர்லின் வர்த்தக கண்காட்சியில் வெளியிட்டது.  சோனி நிறுவனத்தின் புதிய வாட்டர் புரூப் போன் இது. பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய இந்தப் போனை அழகிகள் தண்ணீருக்குள் இருந்து பேசியவாறு இதை விளம்பரப்படுத்தினர்.

இதற்காக பிரமாண்டமான ஆளுயர கோப்பைப் போன்ற நீர்த்தொட்டி அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அழகிகள் கோப்பைக்குள் நீந்தியவாறு சோனியா எக்ஸ்பீரியாவை விளம்பரப்படுத்திய விதம் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

model-promotes-Sony-xperia-z1-water-prof-mobile-in-berlin-ifa

கோப்பைக்கு உள்ளேயும், வெளியேயும் நீச்சல் உடையில் அழகிகள் சோனி எக்ஸ்பீரியாவுடன் சாகசங்கள் புரிந்தது பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

சோனியின் நவீன வாட்டர் புரூப் போனான Sony Xperia Z1 ல் அதிக மெகாபிக்சல் கொண்ட கேமரா, 5 இன்ஞ்ச் ஹெச்டி டிஸ்பிளே, 2.2GHZ qualcomn பிராசசர் உட்பட பல்வேறு சிறப்பு கூறுகள் அமைந்துள்ளன. இந்த வாட்டர் புரூப் போன்  ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

சோனியா எக்ஸ்பீரியா z1 வாட்டர் புரூப் போனின் சிறப்பம்சங்கள்.

  • Android 4.2.2 Jellybean OS
  • 2GB RAM
  • 16 GB ROM
  • 5 inch Full HD Display
  • 2.2GHZ qualcom Snapdragon 800 Processor
  • 20.7 MP Camera
  • 2 MP Front கேமரா
  • 64 GB Expandable Memory
  • Bluetooth,
  • Wifif, 3G
  • 3000 mAh Battery
இந்த மொபைல்பத்தி இன்னும் தெரிஞ்சுக்க ஆசைப்படறீங்களா..? அப்போ கண்டிப்பா இந்த வீடியோவ பாருங்க….!!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments