செல்போன் மெமரி அழித்தல்:
நண்பர்களுக்கு விற்பதாயினும், அல்லது கடைகளில் எக்சேன்ஜ் செய்து வேறு மொபைல் வாங்குவதாயினும் முதலில் செல்போன் மெமரியை முற்றாக நீக்க வேண்டும்.
சிம்கார்டு நீக்கி எடுத்தல்
SMS அழித்தல்
இதற்கு அந்த போனிலேயே ஆப்சன்கள் கொடுத்திருப்பார்கள். எனவே அதில் உள்ள inbox, outbox, draft, sent items போன்ற அனைத்து போல்டர்களிலும் உள்ள குறுந்தகவல்களை அழித்துவிடுங்கள்.
போன் மெமரி டெலீசன்
போன் மெமரியை அழிப்பதற்கான வழிமுறைகள்:
- Settings Menu செல்லுங்கள்.
- General என்பதைத்தொடுங்கள்..
- Reset செய்திடுங்ள்….
நீங்கள் ஐபோன் 3GS பயன்படுத்தினீர்களெனில் மெமரி ரீசென் ஆக மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஒரிஜினல் iphone 3G பயன்படுத்தீனீர்களென்றால் அது ரீசெட் ஆக சில மணி நேரங்கள் கூட எடுத்துக்கொள்ளும். அவ்வாறு ரீசெட் ஆவதற்கான நேரம் அந்த போனில் உள்ள Memory Capacity யைப் பொறுத்து அமையும்.
- உங்கள் பிளாக்பெர்ரி போனின் முகப்புத் திரையிலிருந்து Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Security Options என்பதை தெரிவு செய்யவும். (இது balckberry 6.0, 7.0 மட்டும் )
- Security Wipe என்பதை தெரிவு செய்யவும். (இது balckberry 4.5, 4.6. 4.7 மட்டும் )
- அப்பொழுது கேட்கும் பாஸ்வேர்ட்டுக்கு blackberry என்ற சிறிய எழுத்துகளில் தட்டச்சிடுங்கள்..
- அடுத்து wipe என்பதைத் தொடுங்கள். அல்லது என்டர் கொடுங்கள்.
- அடுத்து உங்கள் போனில் கெப்பாசிட்டிக்கு தகுந்தாற்போன்ற சில நிமிடங்களில் உங்களுடைய அனைத்து டேட்டாக்களும் அழிந்துவிடும்.
- Start தொடுங்கள்
- Settings தொடுங்கள்..
- clear storage தொடுங்கள்..
- 1234 என பாஸ்வேர்ட் கொடுங்கள்…
- உறுதிப்படுத்த yes தொடுங்கள்..
- சில நிமிடங்களில் உங்களுடைய அனைத்து தகவல்களும் அழிந்துவிடும்.
நோக்கியா போன் (Nokia Mobile) ல் போன் மெமரி அழித்தல்...
- உங்கள் போனில் dial pad அல்லது keypad ல்…
- #7370# என உள்ளிடுங்கள்..
- Security password -ல் 12345 கொடுங்கள்…
- உங்களுடைய நோக்கியா போனில் தகவல்கள் அழிக்கப்பட்டுவிடும்.
அனைத்து விதமான போன்களுக்கு பொதுவான வழிமுறைகள்:
- உங்களுடைய செல்போன் செட்டிங்ஸ் மெனு செல்லுங்கள்..
- அதில் Data wipe, Memory, Clear, Master Reset போன்ற ஏதேனும் ஒரு மெனு இருக்கும்.
- அதில் தொடருங்கள்….
- பாஸ்வேர்ட் கேட்டதெனில் பொதுவாக 1234, 12345, அல்லது 00000 என்பவையே இருக்கும்.
- அதைப் பயன்படுத்தி தேவையான செல்பேசியில் உள்ள தகவல்களை நீக்கிவிடலாம்.