உலகில் அநேகம் பேர் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் பயன்படுத்துகின்றனர்.
அதிலும் இளைஞர்கள்தான் அதிகம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஒரு சில இளைஞர்கள் பணி (வேலை) தொடர்பாக பயன்படுத்துகின்றனர்.
மிகப் பலரோ பொழுதுபோக்கவும், நண்பர்களிடம் அரட்டை அடிக்கவும்தான் பெரும்பான்மையான நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர்.
இந்தப் பழக்கம் நாளடைவில் ஒரு போதையாகவே மாறிவிடுகிறது. ஒரு நாள் இன்டர்நெட் இல்லையென்றாலும் இவர்களால் இருக்கவே முடியாது. எப்படியாவது இன்டர்நெட்டில் பிரவுசிங் செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கையில் லேப்டாப்போ, அல்லது மொபைலோ , டெப்ளட்டோ இருந்துகொண்டே இருக்கும்.
போகுமிடமெல்லாம் இந்த டிஜிட்டல் சாதனங்களை உடன் எடுத்துச் செல்கின்றனர். புகைப் பழக்கம்போல, குடிப் பழக்கம் போல இன்டர்நெட் பழக்கமும் இவர்களுக்கு ஒரு போதையை உண்டாக்கிவிடுகிறது.
இன்டர்நெட் அடிமைத்தனம் |
தூங்கும் நேரம் தவிர இவர்கள் இன்டர்நெட்டிலேயே காலத்தைக் கழிப்பதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாவும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
பெரும்பாலானவர்கள் சமூக தளங்களிலேயே தங்களது நேரத்தை வீண்டிக்கின்றனர் என்பது வேதனைக்குரிய விடயம்.
இணையத்தில் உலவும் நேரத்தை குறைப்பதும், மற்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதுமே இதற்கு ஒரு நல்ல தீர்வாக அமையேயன்றி வேறு ஏதும் மாற்று வழிகள் இல்லை.
Most of people have been using Internet with computer in the world. There are more youngsters to use internet in most of hours of a day. The youngster addicted to internet gradually. So that young people affected physically and mentally. Only one remedy for this issue, the youngster reduces internet using time, and concentrate in other activities like studying, playing and more.
உண்மை தான்… அவரவர் உணர்ந்து மாற வேண்டும்…
மிக்க நன்றி ஐயா..!
puthithaka ethaiyavathu solvirkal endru paarthal ematrame tan minjiyathu sir. dd sir sonnathu pola avar avar tirunthinal tan sari.
அன்பின் சுப்புடு – உண்மை நிலை இது தான் – 25 விழுக்காடு நேரத்தினை இணையத்தில் செலவிடுகிறேன். குறைக்க வேண்டும் – முயல்வோம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா