Sunday, January 12, 2025
Homebattery backupஅதிக பேட்டரி லைஃப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்

அதிக பேட்டரி லைஃப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்

உலக மக்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுவிட்டது ஸ்மார்ட்போன். இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நாளை முழுவதும் செலவழிக்க முடியாது என்ற நிலமை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிள்கு மக்களின் மனதில், வாழ்க்கையில் இடம்பெற்றுவிட்ட ஒரு தவிர்க்க இயலாத சாதனமாக மாறிவிட்டது ஸ்மார்ட்போன். 
மிகவும் பிரபலமான ஸ்மார்ட் போன்கள் என்று பார்த்தோமானால்  (Android Based Smartphones)ஆண்ட்ராய்ட் பேஸ்ட் ஸ்மார்ட்போன்களே…அதுதான் உண்மையுங்கூட… 
விண்டோஸ் ஸ்மார்ட்போன் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் (windows, apple smartphone)இருப்பினும் அவற்றை விட மக்களின் மனதை கவர்ந்திழுத்து, விற்பனையில் முன்னணி வகிப்பதும் கூகிளின்  ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களில் இயங்க கூடிய ஆண்ட்ராய் ஸ்மார்ட்போன்கள்தான்.. 
best-battery-backup-long-life-smartphone-samsung-galaxy-s4

ஆண்ட்ராய்ட்டின் சமீபத்திய இயங்குதளமான ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. காரணம் மிகவும் எளிதான பயனர் இடைமுகம்தான்.

 (கூகிள் தனது புதிய பதிப்பு ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு நெஸ்லே நிறுவனத்தின் இனிப்பு சாக்லெட் கிட்-கேட்  பெயரை வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்ட்ராய்ட் பதிப்பிற்கு இனிப்பு வகைக்களின் பெயரை வைத்துக்கொண்டே வந்த கூகிள் புதிய பதிப்பு ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு கிட்-கேட் (kit-kat) பெயர் வைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யம்தான்.)
ஸ்மார்ட்போனில் உள்ள அதிக வசதிகளால்தான் அது மிகப்பலராலும் விரும்பபபடுகிறது. தொடர்பாடல் முறையில் அதிக நுணுக்கங்களையும், வெவ்வேறான வழிமுறைகளையும் பின்பற்றுவதால் மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளது. உதராணமாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வழியாக வீடியோ கால் செய்வது (making video calls) மற்றும் தகவல்களை அதில் சேமிப்பது (Data storage) போன்றவற்றை குறிப்பிடலாம். 
பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் எதிர்கொள்ளப்பபடும் ஒரே பிரச்னை என்னவென்றால் அது பேட்டரி லைப்தான்.. அதிகளவு பயன்பாடுகளைக் கொண்டிருப்பதால் (heavy processors, heavy operating system, apps, software போன்றவை) ஒரு நாள் முடிவதற்குள் இதிலுள்ள பேட்டரியும் காலியாகிவிடும். 
குறிப்பாக கேம்ஸ் போன்ற அப்ளிகேஷன்களை தொடர்ந்து மணிக்கணக்கில் பயன்படுத்தும்பொழுது பேட்டரி ஐஸ்மாதிரி விரைவாக கரைந்துவிடும்.  
தற்பொழுது வெளிவந்திருக்கும் ஸ்மார்ட் போன்களில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஸ்பெசிலிட்டீஸ் மட்டுமே முதன்மைப் படுத்தப்பட்டிருக்கும். ஒரு ஸ்மார்ட் போனில் கேமரா நன்றாக அதிக பிக்சல் கொண்டிருந்தால் அதில் வேறு ஏதேனும் குறை இருக்கும். டிஸ்பிளே சரியாக இருக்காது. அல்லது பிராச்சர் சரியா இருக்காது.. இப்படி..ஏதாவது முக்கியமான குறை இருக்கும்.
அப்படி பார்த்தால் ஸ்மார்ட்போன்ல நிறைவானதா எதுவுமே இல்லையா? இருக்கிறது.. HTC, Nokia, Samsung ன்னு பிரபல கம்பெனிகள் இப்போ நிறைவான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கு..
கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்ஸ் இருக்கிறதுபோல.. ஒரு சில நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களும் ஆல்ரவண்டர்கள்தான். ஆனால் ஆல்ரவுண்டர்கள்லேயே அதிகமான பர்பெக்சனோட இருக்கிறவங்க ஒன்றிரண்டு பேர்தான்.

அதுபோலவே HTC motorola Droid நல்ல பேட்டரி பேக்கப் கொடுக்கும் போன்கள் இருந்தாலும் தற்போது வெளிவந்துள்ள ஸ்மார்ட் போன்களிலேயே அதிகமான 100% பர்பக்சன் மற்றும் அதிகமான பேட்டரி பேக்கப் கொடுக்கிற ஒரே ஸ்மார்ட்போன் Samsung Galaxy S4 தான்.. அனைத்து சிறப்பு கூறுகளும் ஒருங்கே பெற்று நிறைவானதொரு ஸ்மார்ட் என்றால் அது சாம்சங் கேலக்சி எஸ் 4 தான். நன்றி
– சுப்புடு
Tags: long life battery smartphone samsung s4, Samsung Galaxy s4 battery life phone, battery backup smartphone, good battery life smartphone, best battery life smartphone in India, Samsung good battery life smartphone, Samsung long time battery life android smartphone, samsung good speed accessing smartphone with good battery life, Samsung galaxy s4 smartphone having good battery life. best-battery-backup-long-life-smartphone-samsung-galaxy-s4, android jelly been 4.1.2, android os, widows os, apple ios.
RELATED ARTICLES

2 COMMENTS

  1. அன்பின் பழனிவேல் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – இனி மேல் வாங்கும் போது கவனத்தில் கொவோம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

Comments are closed.

Most Popular

Recent Comments