Sunday, December 22, 2024
Homemobile pathukappuமொபைல் பாதுகாப்பு வழிமுறைகள்

மொபைல் பாதுகாப்பு வழிமுறைகள் [Mobile Security]

தினந்தோறும் மொபைல் போன் பயன்படுத்தும் நேரம் அதிகரித்து வருகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார். படங்கள் எடுக்க, வீடியோ எடுக்க, ஆன்லைன் பர்சேஸ் செய்ய, பிரௌசிங் செய்ய என பல விதங்களில் “ஸ்மார்ட்போன்” பயன்பாடு அதிகரித்துள்ளது.

இப்படி பலதரப்பட்ட செயல்களை அதனூடாக செய்திடுகையில் அதில் சில அடிப்படைத் தகவல்கள் போனிலேயே பதியபடுகின்றன. இந்நிலையில் “மொபைல் பாதுகாப்பு” அவசியமாகிறது. இல்லையெனில் அது காணாமல் போகும்பொழுது அதிலுள்ள தகவல்களை பிறர் பயன்படுத்தும் வாய்ப்புகள் உண்டு.

டில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 50 போன்கள் திருடுபோகின்றன என்று அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் கட்டாயம் மொபைல் பாதுகாப்பு அவசியமாகிறது.

திரைப் பூட்டு: ஸ்மார்ட் போன் திரையை பூட்டுவதன் மூலம் பிறர் அதை எளிதாக அணுக முடியாதவாறு செய்யலாம். ஸ்மார்ட்பேனிலேயே “Pattern Lock” உட்பட சில அப்ளிகேஷன்கள் மூலம் இதை செயல்படுத்திடலாம்.

மறைகுறியாக்கம் – Encryption : ஸ்மார்ட்போனில் பதியப்படும் தகவல்கள் அனைத்தையும் “என்கிரிப்சன்” செய்திடுவதன் மூலம் மற்றவர்கள் அந்த தகவல்களை பயன்படுத்த முடியாமல் செய்திடலாம். ஒவ்வொரு முறையும் ஸ்மார்ட்போனை ஆன் செய்திடுகையில் அதற்கான பாஸ்வேர்ட் அல்லது கோட் கொடுக்க வேண்டியதிருக்கும்.

இதனை கொடுத்தவுடன் குறிமறையாக்கம் (Encryption) செய்யப்பட்ட தகவல்கள் மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றி அமைக்கப்படும்.  ஸ்மார்ட் போனிலேயே அதற்கான ஆப்சன் உள்ளது. ஆன்ட்ராய்ட் போனில் உள்ள “Security Settings” மூலம் இதை செயல்படுத்திடலாம்.

 applock, document locker (Android) and Signal (iOS)  போன்ற செயலிகள் மூலமும் இதுபோன்று செய்திடலாம்.

mobil pathukappu valigal
மொபைல் பாதுகாப்பு – எச்சரிக்கை தகவல்கள்
  • நம்முடைய இந்தியாவிலேயே எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் பலகோடி மொபைல்போன்கள் பயன்பாட்டில் (Uses of Mobile Phone in India) உள்ளது. ஆனால் அவற்றில் எத்தனை மொபைல்கள் பாதுகாப்புடன் இயங்குகிறது? வெறும் 50 சதவிகித மொபைல்கள் கூட சரியான பாதுகாப்புடன் இயங்குவதில்லையாம்..
  • ஏறக்குறைய 55% மொபைல்கள் பாதுகாப்பில்லாமல் இயங்குவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. 
  • ஒரு சிறிய கணக்கு இது. இந்தியாவில் உள்ள 50 % விகித மொபைல் போன்கள் பயன்படுத்துவோருக்கு யாரென்றே தெரியாதவர்கள் தினமும் டெக்ஸ்ட் மெசேஜ் (Text Message) அனுப்புகிறார்கள். 
  • அதில் கவர்ச்சிகரமான வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். அந்த கவர்ச்சிகரமான தகவல்களில் (Attractive Messages) ஏதேனும் ஒரு இணையதளத்தின் முகவரியும் இடம்பெற்றிருக்கும். 
  • அதில் கிளிக் செய்தால் கோடிக்கணக்கில் பணம் (Crore of Money) பெற முடியும் என்ற செய்தியும் இடம்பெற்றிருக்கும். 
இப்படி நிறைய கவர்ச்சிகரமான தகவலின் வடிவில் மொபைல்களுக்கோ அல்லது உங்களுடைய தகவல்களுக்கோ ஆபத்து வந்துகொண்டிருக்கும்.
உடனே அதற்கான பதில்களையோ அல்லது அதில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கோ தகவல்களை அனுப்பினால் உங்களுடைய தகவல்களை பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்தல் போன்ற செயல்கள் உங்கள் அனுமதியின்றி நடைபெறும்.

இதுபோன்ற பாதிப்பைகளை தடுக்க முன்பின் தெரியாத நபர் அல்லது எண்ணிலிருந்து வரும் அழைப்புகள், SMS களுக்கு பதில் அனுப்பாமல் இருக்க வேண்டும். 

இதுபோன்ற முன்பின் தெரியாதவர்களிடம் இருந்தோ, சந்தேகத்திற்கு உரிய , அதிக ஆசை வார்த்தைகள் கூறி சுண்டி இழுக்கும் டெக்ஸ்ட் மேசேஜ்களையோ பின்பற்றாதீர்கள், அதேபோன்று வரும் கவர்ச்சிகரமான அழைப்புகளையும் ஏற்க வேண்டாம். [Don’t attend the unwanted Calls] அவ்வாறு கவர்ச்சிகரமான அழைப்புகளெனில் அதைத் துண்டித்துவிடுங்கள்.

மொபைல்போன் ஆன்ட்டி வைரஸ்:

மொபைல் பாதுகாப்புக்கென தரமான ஆன்டி வைரஸ் மென்பொருள்களும் அப்ளிகேஷன்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். குறிப்பாக செமான்டெக் – Symantec நிறுவனம் “நார்டன் ஆன்ட்டி வைரஸ்” மென்பொருளை தயார் செய்து மொபைல் பாதுகாப்பில் பெரும் பங்காற்றுகிறது. 

இந்த வைரஸ் எதிர்ப்பியானது தேவையில்லாத வைரஸ் நச்சு நிரல்கள் (Delete Virus Programs) கொண்ட தகவல்கள் கண்டறிந்து அழிக்கிறது.

கூகிள் தேடலில் மொபைல் ஆண்ட்டி வைரஸ் (Mobile anti virus) என்றோ அல்லது மொபைல் செக்யூரிட்டி அப்ஸ் (Mobile security) என்றோ தேடி , உங்கள் மொபைல்களுக்குப் பொருத்தமான ஆண்ட்டி வைரஸ் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.

வைஃபை:  வைஃபை மூலம் தகவல்களை Hack செய்வது அதிகரித்து வருகிறது. எனவே பொது இடங்களில் கிடைக்கும் WiFi இணைய இணைப்பை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஸ்மார்ட்போன் பாதுக்காப்பு குறித்த தகவல்களுக்குஸ்மார்ட் போனைப் பாதுகாக்க 5 வழிகள் என்ற இப்பதிவும் உங்களுக்குப் பயன்படும் என நினைக்கிறேன். சுட்டியைச் சொடுக்கி வாசித்துப் பயன்பெறுங்கள். 

Tags: Mobilel phone protection, Mobile security, mobile antivirus software, mobile hacking, mobile anti virus, cell phone anti virus, protection of mobile phone, provide mobile phone security, mobile security, mobile protection, mobile phone protection, mobile antivirus, mobile security virus software, mobile software, antivirus for android mobile, mobile antivirus software for windows phone, mobile security for apple ios phone, mobile security for blackberry cellphone. Useful tips and trick for your mobile security and protection.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments