Friday, January 24, 2025
HomeNokiaநோக்கியா அல்ட்ரா ஸ்டைல் கேமிரா போன் !

நோக்கியா அல்ட்ரா ஸ்டைல் கேமிரா போன் !

Nokia-108-ultra-style-camera-phone-for-rs.1817-in-india-orange Nokia 108 ultra style camera phone for rs. 1999

சைசுல சின்னது.. பார்க்கிற வேலையோ ரொம்ப பெரிசு…அப்படிங்கிற இந்த தலைப்பை மட்டும் வாசிச்சி வந்த உங்களுக்கு வணக்கம். இதுல தலைப்புக்கு பொருந்தற மாதிரியான விஷயம்தான் சொல்லப்பேறேன்.. ஆனால்… நீங்க நினைக்கிற மாதிரி இல்லீங்க..
நோக்கியா சமீபத்துல ஒரு போன் ரிலீஸ் பண்ணியிருக்கு.. நோக்கியா நூத்தி எட்டுன்னு பேரு…ஆனால் பாருங்க…”சைசுல சின்னது.. பார்க்கிற வேலையோ ரொம்ப பெரிசு…!”
2000 ரூபாய்ல கேமரா போன்…அதுவும் நோக்கியா கம்பெனி போன்….!!!
(முறையா பார்த்தால் மேல இருக்கிறதுதான்  பதிவோட தலைப்பு. ஆனா பாருங்க… ஒரு கவர்ச்சி இருக்கட்டுமேன்னு அப்படி வச்சிட்டேன். என்னை அடிக்க வர்றவங்க..காதை பிடிச்சு திருக வர்றவங்க.. துவைக்க வர்றவங்க எல்லாரும் கமெண்ட்ல துவச்சு தொங்க போடுங்க… பிடிச்சிருந்தா மேற்கொண்டு படிங்க…ப்ளீஸ்..)
ஆண்ட்ராய்ட் போன்கள்தான் பிரபலமாகிட்டு வருதுன்னு நாம நெனச்சா அதுதான் தப்பு.. அதுகூடவே சத்தமில்லாமல் சாதாரண போன்களும் மார்க்கெட்ல தூள் கிளப்பிட்டு இருக்குங்க… ஆண்ட்ராய்ட் போன்கள்ன்னா அதிகமான பாதுகாப்பு இருக்கணும்.. அதே சமயம்…அதை தொடர்ந்து பராமரிக்கணும்.. தொலைஞ்சு போச்சுன்னா.. அய்யய்யோன்னு அலறி துடிக்கணும்…
Nokia-108-ultra-style-camera-phone-for-rs-1817

பல ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கின போன் காணமா போயிடுச்சேன்னு. சாப்பிடாம கொள்ளாமல்ல ஒரு நாளு நாளைக்காவது கவலைபடனும்.. இத்தனை சிக்கலும் அதுல இருக்கு….எந்தளவுக்கு வசதி இருக்கோ.. அந்தளவுக்கு கஷ்டமும் இருக்கு…
ஆனா பாருங்க… நம்ம நோக்கியா கம்பெனியோட ஆர்ட்னரி போன்ல அப்படியெல்லாம் இல்லீங்க…
அழகா ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்து வாங்குவோம்… எப்படி வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாம்… எல்லா சூழ்நிலைக்கும் ஒத்துப்போகும்… அடிதடி… மழை… வேலை செய்ற இடத்துல கீழ விழறதுன்னு… மேல விழறதுன்னு எல்லாத்துக்குமே தாங்கும்…
குறைஞ்ச பட்சம் ஒரு மூணு வருஷமாவது எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமே அதுபாட்டுக்கு வொர்க் ஆகிட்டே இருக்கும்…சார்ஜ் மட்டும் போட்டால் போதும்… 
இந்த மாதிரி போன்லயே இப்போ கேமராவும் வந்திடுச்சு.. Noika 108 வரிசைப் போன்லதாங்க இந்த வசதி வந்திருக்கு…
அதுமட்டுமில்லீங்க…8 எம்பி இன்டர்நல் மெமரி இருக்கு… VGA கேமரா இருக்கும்.. 950 mAh பேட்டரி இருக்கு..இது ரொம்ப நேரம் தாங்க கூடிய பேட்டரி பேக்கப் கொடுக்குது. 1.8 இன்ஞ் டிஸ்பிளே திரை இருக்கு..
குட்டியா இருந்தாலும்.சூப்பரா தெளிவா படங்களை காட்டுதுங்க… 
மெசேஜ் டைப்பன்றதுக்கும், கால் பன்றதுக்கும் சூப்பர் ஆல்பா நியூமெரிக் கீபேட் இதுல இருக்குங்க.. அதுமட்டுமில்லாம மெமரி கார்ட்ம் இதுல யூஸ் பண்ணிக்கலாம்… உங்களுக்குப் பிடிச்ச பாட்டுகளை மெமரி கார்ட்ல ஏத்திக்கிட்டா.. நாள் முழுசும் பாட்டா கேட்கலாம்… 
சாதாரணமா சொல்லக்கூடாதுங்க… இது சைசுல மட்டும்தான் சின்னது.. ஆனால் “பவிசுல” ரொம்ப பெரிசுங்க… 
வாங்கிப் பாருங்க.. கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்… நண்பர்களுக்கும் கிப்ட் வாங்கி கொடுக்கலாம்.. வீட்ல யூஸ் பன்றதுக்கு இதைவிட வேற எந்த மொபைலும் சிறந்த்தா இருக்காது.. ரிப்பேரும் வராது.. நீண்ட நாளைக்கு வரும்.. அப்பறும் என்ன…? வீட்டில இருக்கிறங்களுக்கு எல்லோருக்கும் ஒரு போன் வாங்கி குடுத்துடுங்க…
Nokia-108-ultra-style-camera-phone-for-rs-1817
நீங்க எங்க இருந்தாலும்.. அல்லது உங்கள் வீட்ல யாரு எங்க வெளியில இருந்தாலும் உடனே கூப்பிட்டு பேச முடியும்….என்னைப் பொறுத்தவரைக்கும்… நான் எங்க வீட்ல பிரண்ஸ்ங்களுக்கு எல்லாமே இந்த நோக்கியா 108 தான் வாங்கிகொடுக்கிறேன். விலையும் கம்பி.. இலாபமும் அதிகம்…
இதுலயே ரெண்டு வகை போன் இருக்குங்க. ஒன்னு சிங்கிள்சிம் நோக்கியா 108. இன்னொன்னு டபுள் சிம் நோக்கியா 108. சூப்பரான உங்களுக்குப் பிடிச்ச கலர்ல வந்திருக்கு…
டெக்னிகலா இதுல என்னென்ன வசதி இருக்குன்னு பார்த்துடலாம். 

Single SIM Nokia 108 key specifications

  • 1.8-inch QQVGA (128×160) display
  • Single SIM
  • Alphanumeric keypad
  • 950mAh battery
  • 70.2 grams
  • 14 hours of talktime and up to 600 hours of standby time

Double SIM Nokia 108 Dual-SIM key specifications

  • 1.8-inch QQVGA (128×160) display
  • Dual-SIM (GSM+GSM) with dual standby
  • Alphanumeric keypad
  • 950mAh battery
  • 70.2 grams
  • 14 hours of talktime and up to 600 hours of standby time

Tags: nokia, nokia budget phone, nokia 108 phone, nokia budget 108 single sim phone, nokia budget 108 double sim phone, nokia ultra camer phone, nokia camera phone with budget price, simple nokia phone with camera

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments